search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Air Force Attack"

    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையே நடக்கும் தாக்குதல்கள் முடிவடையும் என நம்பிக்கை இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். #DonaldTrump #IndiaPakistanTension
    ஹனோய்:

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, பல்வேறு நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

    வியட்நாமின் ஹனோய் நகரில் உள்ள ஓட்டலில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும் நேற்று சந்தித்தனர். டிரம்ப்-கிம் வருகையை முன்னிட்டு வியட்நாமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துப்பாக்கி ஏந்திய ராணுவமும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.



    இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று வியட்நாமில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உடன் கலந்துரையாடிய பின்னர், செய்தியாளர்க்ளுக்கு பேட்டியளித்தார். அப்போது டிரம்ப் கூறுகையில், 'இந்தியா- பாகிஸ்தான் இடையேயான தாக்குதல்கள் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கிறேன். இரு நாடுகளுக்கிடையே சமரசம் ஏற்பட்டு நிலவும் பதற்ற நிலை நிச்சயம் தணியும் என நம்புகிறேன்' என்றார். #DonaldTrump #IndiaPakistanTension
    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் நிலவுவதையடுத்து காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. #IndianAirForce #KashmirSchoolsAirportsClosed
    ஸ்ரீநகர்:

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய விமானப்படை ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குண்டு வீசி அழித்தது. அதன் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

    இதையடுத்து காஷ்மீர் வான் பகுதியில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. போர் விமானங்கள் தவிர எந்த விமானங்களும் பறக்ககூடாது என கூறப்பட்டது. அத்துடன், காஷ்மீரின் ஸ்ரீநகர், லே, பதான்கோட் ஆகிய விமான நிலையங்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.



    இதற்கிடையே பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதையடுத்து போர் பதற்றம் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனையடுத்து  பாதுகாப்பு காரணமாக காஷ்மீரின் எல்லையோரப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீரின் அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டன. இதை தொடர்ந்து பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

    இதேபோன்று பாகிஸ்தானிலும் லாகூர், முல்தான், இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்நாட்டு, சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால்  சர்வதேச விமான சேவை கடும் பாதிப்பு அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #IndianAirForce #KashmirSchoolsAirportsClosed

    ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, பயங்கரவாத முகாம் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படைக்கு தலைவணங்குவதாக தெரிவித்தார். #PMModi #ChuruRally
    சுரு:

    ராஜஸ்தானின் சுரு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியாவிற்கு எதிரான எந்தவொரு செயலையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். யாரிடமும் இந்தியா அடிபணியாது. எதற்காகவும் நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டேன்.

    இன்று காலை இந்திய விமானப்படையினர் நடத்திய தாக்குதலை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். விமானப்படைக்கு தலைவணங்குகிறேன்.



    இன்று இந்தியாவின் அசாத்தியமான உள்ளங்களுக்கு  மரியாதை செலுத்தும் நாள் ஆகும்.

    இந்தியா மிகவும் பாதுகாப்பான கரங்களில் உள்ளது. மேலும் அடுத்த 10 ஆண்டுகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.7.5 லட்சம் கோடி சேர்க்கப்படும்.  இதற்காக விவசாயிகள் எதுவும் செய்ய தேவையில்லை. அவர்களது செல்போனிற்கு கணக்கில் பணம் ஏறிவிட்டதாக குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த பொதுக் கூட்டத்தில் பொதுமக்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் என பலர் கலந்துகொண்டனர். #PMModi #ChuruRally
    ×