search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Tourism"

    ஓமன் நாட்டுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதால் இந்திய சுற்றுலாத்துறைக்கு ஓமன் சிறப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது.
    மஸ்கட்:

    ஓமன் சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஓமன் சுற்றுலாத்துறை தங்களது நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அதிகரிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் காரணமாக ஓமன் நகருக்கு வரும் பயணிகள் குறிப்பாக இந்தியாவில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து ஓமன் நாட்டுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 210 ஆகும். இந்த எண்ணிக்கையானது 2016-ம் ஆண்டு 2 லட்சத்து 97 ஆயிரத்து 628 ஆக அதிகரித்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 23 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    இந்தியாவை சேர்ந்தவர்களில் பலபேர் தங்களது குடும்ப திருமண நிகழ்ச்சிகளை ஓமனில் நடத்துவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்கள் ஓமன் செல்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் இந்திய சுற்றுலாத்துறை சிறப்புடன் மேற்கொண்டு வருகிறது.

    இதற்காக இந்திய சுற்றுலாத்துறைக்கு, ஓமன் சுற்றுலாத்துறையின் சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு துறைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×