என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » indonesia papua
நீங்கள் தேடியது "Indonesia Papua"
இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழைக்கு 68 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #IndonesiaRain
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பப்புவா மாகாணத்தில் நேற்று முன்தினம் கனமழை கொட்டித்தீர்த்தது. இடைவிடாது பெய்த மழையால் நீர்நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதனால் தலைநகர் ஜெயபூரா மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் வெள்ளக்காடாகின. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. கனமழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 68 பேர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 55 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் சுலாவேசி மாகாணத்தில் கனமழை, வெள்ளம் மற்றும் அதனை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டதில் 70 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. #IndonesiaRain

சாலைகளில் பாறைகள் உருண்டு விழுந்ததாலும், மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அத்துடன் மின் இணைப்பு மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 68 பேர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 55 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் சுலாவேசி மாகாணத்தில் கனமழை, வெள்ளம் மற்றும் அதனை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டதில் 70 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. #IndonesiaRain
×

X