என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » international border
நீங்கள் தேடியது "international border"
ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லைக் கோட்டின் அருகில் சந்தேகத்துக்குரிய விதத்தில் நடமாடிய வங்காளதேசத்தை சேர்ந்த 3 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
ஸ்ரீநகர்:
ஜம்முவில் உள்ள ரன்பீர் சிங் புரா என்ற பகுதியில் சர்வதேச எல்லை கட்டுப்பாடு கோடு அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த இரு தினங்களாக ஆட்கள் நடமாட்டம் உள்ளதாக எல்லை பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வங்காளதேசம் நாட்டை சேர்ந்த 3 பேர் சுற்றித் திரிவதை கண்டனர். தொடர்ந்து அவர்களை கைது செய்த எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை உள்ளூர் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் சுமன்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த மொகமது ஜகாகிர்(18), மொகமது அலி (18) மற்றும் சில்ஹெட் மாவட்டம் ஜத்வாபரியை சேர்ந்த அப்துல் கரீம் (20) என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 2 ஸ்மார்ட் போன்கள், இந்திய ரூபாய்களும் பறிமுதல் செய்யப்பட்டன. #Tamilnews
ஜம்மு பகுதியில் சர்வதேச எல்லைப்பகுதியில் பழைய மோர்டர் ரக குண்டு வெடித்ததில் அங்கு பணியில் இருந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். #JammuKashmir
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லைக்கோடு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி துப்பாக்கியால் சுட்டும், மோர்டார் ரக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் அவர்களுக்கு உரிய வகையில் பதிலடி தந்துவருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு மாநிலம் ஆர்னியா எல்லைக்கோட்டுப் பகுதி அருகே ஜபோவால் பகுதியில் இன்று சிலர் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது மண்ணுக்கு அடியில் புதைபட்டிருந்த ஒரு மோர்டார் குண்டு எதிர்பாராத வகையில், பயங்கரமாக வெடித்து சிதறியது.
இதில் ஒரு விவசாய தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். 6 பேர் காயம் அடைந்தனர். பாகிஸ்தான் ராணுவத்தினர் முன்னர் சில வேளைகளில் நடத்திய தாக்குதலின் போது இந்திய எல்லையை நோக்கி வீசப்பட்ட மோர்டார் குண்டு இந்த வயல்வெளிப் பகுதியில் புதையுண்டு இருக்கலாம். இன்று வயல்வேலையின் போது கூரிய ஆயுதம் பட்டதில் அந்த பழைய குண்டு வெடித்து சிதறி இருக்கலாம் என கருதப்படுகிறது. #JammuKashmir

×

X