search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "internet service free"

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் எஸ்.எம்.எஸ் மற்றும் இன்டர்நெட் சேவை இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. #KeralaFloods #KeralaRain
    புதுடெல்லி:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இன்று மட்டும் 22 பேர் பலியாகியுள்ள நிலையில் மழை பாதிப்பால் இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் எஸ்.எம்.எஸ் மற்றும் இன்டர்நெட் சேவை இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில், வெள்ளத்தால் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ள கேரளாவில் எஸ்.எம்.எஸ், செல்போன் இணையதள சேவை இலவசமாக வழங்கப்படும் 

    மேலும், கொச்சி விமான நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அந்த விமான ஓடுதளத்துக்கு பதிலாக கொச்சி கடற்படை விமான ஓடுதளம் பயன்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து, வரும் திங்கட்கிழமை முதல் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை தொடங்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளது.

    வெள்ளம் சூழ்ந்ததால் கொச்சி விமான நிலையம் 26-ம் தேதி வரை மூடப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #KeralaFloods #KeralaRain
    ×