search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "iPad Crush Ad"

    • ஐபேட் ப்ரோ மாடலுக்காக ஆப்பிள் நிறுவனம் விளம்பர வீடியோ வெளியிட்டது.
    • விளம்பர வீடியோவுக்கு ஆன்லைனில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் மாடல்களை சமீபத்தில் அப்டேட் செய்தது. புதிய ஐபேட் ப்ரோ மாடலில் OLED டிஸ்ப்ளே, புதிய 13 இன்ச், M4 சிப்செட் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. புதிய ஐபேட் ப்ரோ மாடலுக்காக ஆப்பிள் நிறுவனம் விளம்பர வீடியோ வெளியிட்டது.

    விளம்பர வீடியோவின் படி மிகப்பெரிய நசுக்கு இயந்திரம் ஒன்று இசை வாத்தியங்கள், கணினிகள், ஆர்கேட் இயந்திரங்கள், பெயிண்ட், சிற்பங்கள், கேமராக்கள் மற்றும் ஏராளமான பொருட்களை நசுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோவில் நசுக்கப்படும் பொருட்கள் அனைத்தும் புதிய ஐபேட் ப்ரோ என்று ஆப்பிள் நிறுவனம் வீடியோ மூலம் வெளிப்படுத்த முயற்சிக்கிறது.

     


    ஆப்பிள் வெளியிட்டுள்ள ஐபேட் ப்ரோ விளம்பர வீடியோவுக்கு பலரும் ஆன்லைனில் எதிர்ப்பு தெரிவித்தனர். பலரும் இந்த வீடியோ மனித முயற்சி மற்றும் பயனுள்ள கருவிகள் அழிக்கப்படுவது, மோசமான விளம்பரமாக அமைந்துள்ளது என கமென்ட் செய்து வருகின்றனர். வீடியோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து ஆப்பிள் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பான அறிக்கையில், "ஆப்பிள் நிறுவனத்தில் எங்களது டி.என்.ஏ.-வில் கிரியேட்டிவிட்டி உள்ளது. இதன் மூலம் சாதனங்களை அழகாக வடிவமைத்து, உலகளவில் கிரியேட்டர்களை ஊக்கப்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எங்களின் குறிக்கோள் பயனர்கள் தங்களது கற்பனை மற்றும் யோசனைகளை ஐபேட் மூலம் வெளிப்படுத்த ஏராளமான வழிகளை ஏற்படுத்தி கொடுப்பது ஆகும். இந்த வீடியோவில் எங்களது மார்க் தவரிவிட்டது, மன்னித்துவிடுங்கள்," என்று தெரிவித்துள்ளது.

    ×