search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Iran sanctions"

    அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை கண்டு மனம் தளராத் ஈரான் அரசு ‘பயகம்பர்-இ-ஆசம் என்ற பெயரில் முப்படைகளின் போர் ஒத்திகையை தொடங்கியுள்ளது. #Irandrill #massivedrill
    டெஹ்ரான்:

    அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டில் ஈரானுடன் அணு ஆயுத தடை ஒப்பந்தம் செய்து இருந்தன. அதில் இருந்து மீறிவிட்டதாக புகார் கூறிய அமெரிக்கா கடந்த மே மாதம் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.

    மேலும், ஈரான் மீது விலக்கி இருந்த பொருளாதார தடையை மீண்டும் விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.  அமெரிக்காவின் பொருளாதார தடை கடந்த மே மாதத்தில் இருந்து அமலுக்கு வந்தது.

    அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் படிப்படியாக விலக்கப்பட்ட அனைத்து தடைகளையும் ஈரான் மீது தற்போது டிரம்ப் ஒருசேர திணித்துள்ளார். இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


    ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள அத்தனை பொருளாதார தடைகளையும் தகர்த்து பெருமையுடன் முன்னேறி வருவோம் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி இன்று சூளுரைத்துள்ளார்.

    இந்நிலையில், நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள குவெஷேம் தீவில் ‘பயகம்பர்-இ-ஆசம் 12’  என்ற பெயரில் முப்படைகளின் மாபெரும் போர் ஒத்திகையை தொடங்கியுள்ளது.

    ‘முஹம்மது நபி உயர்வானவர்’ என்னும் பொருள்படும் இப்பெயரால் நடைபெற்றுவரும் போர் ஒத்திகையில் ஈரான் நாட்டின் தரைப்படை, விமானப்படை மற்றும் கப்பல்படையை சேர்ந்த வீரர்கள் போர் பயிற்சிகளையும், சாகச ஒத்திகைகளையும் நடத்தி வருகின்றனர். #Irandrill #massivedrill  
    அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் அடக்குமுறைக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றுதிரள வேண்டும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி வலியுறுத்தியுள்ளார். #IranIslamicconference #internationalIslamicconference #Iranurges #Muslimunity
    டெஹ்ரான்:

    ‘இஸ்லாமிய கல்விக்கூடங்களுக்கான உலகளாவிய சிந்தனையில் நெருக்கம்’ என்னும் அமைப்பான (World Forum for Proximity of Islamic Schools of Thought) ஆண்டுதோறும் இந்த சர்வதேச கருத்தரங்கங்களை நடத்தி வருகிறது.

    இந்த அமைப்பின் 32-வது கருத்தரங்கம் நவம்பர் 24 (இன்று) தொடங்கி 26-ம் தேதிவரை ஈரான் தலைநகரான டெஹ்ரானில் நடைபெற்று வருகிறது.

    இந்த 3 நாள் கருத்தரங்கில் ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் சுமார் 80 நாடுகளில்  இருந்து வந்துள்ள சுமார் 350  இஸ்லாமிய அறிஞர்கள், முப்திகள், சிந்தனையாளர்கள் மற்றும் மூத்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

    சமீபத்தில் ஈரான் மீது அமெரிக்க உச்சகட்ட பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில் இந்த ஆண்டு  நடைபெறும் இந்த கருத்தரங்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


    இந்நிலையில், இந்த கருத்தரங்கில் இன்று துவக்கவுரையாற்றிய  ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் அடக்குமுறைக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றுதிரள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    அமெரிக்காவின் மூர்க்கத்தனமான அடக்குமுறையை வென்றாக வேண்டுமென்றால் முஸ்லிம்கள் ஒன்றிணைந்திருக்க வேண்டியதை தவிர வேறு வழியே இல்லை. இஸ்லாமிய நாடுகளுக்கு இடையில் ஒற்றுமையும், சகோதரத்துவமும் நிலவ வேண்டும். இதை கடமையாக நாம் கருத வேண்டும்.

    வெறும் வாய்மொழியாக மட்டுமில்லாமல் கூட்டு செயல்பாட்டினால் இந்த கடமை அமைய வேண்டும். சவுதி அரேபியாவை நாங்கள் சகோதர நாடாகவே பார்க்கிறோம். அந்நாட்டுடன் இணைந்து பணியாற்றவும் தயாராக இருக்கிறோம் என்றும் ரவுஹானி குறிப்பிட்டுள்ளார். #IranIslamicconference #internationalIslamicconference #Iranurges #Muslimunity
    ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள அத்தனை பொருளாதார தடைகளையும் தகர்த்து பெருமையுடன் முன்னேறி வருவோம் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி சூளுரைத்துள்ளார். #Iransanctions #USsanctions #Rouhani
    டெஹ்ரான்:

    அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டில் ஈரானுடன் அணு ஆயுத தடை ஒப்பந்தம் செய்து இருந்தன. அதில் இருந்து மீறிவிட்டதாக புகார் கூறிய அமெரிக்கா கடந்த மே மாதம் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.

    மேலும், ஈரான் மீது விலக்கி இருந்த பொருளாதார தடையை மீண்டும் விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.  அமெரிக்காவின் பொருளாதார தடை இன்று முதல் அமலுக்கு வந்தது.

    அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் படிப்படியாக விலக்கப்பட்ட அனைத்து தடைகளையும் ஈரான் மீது தற்போது டிரம்ப் ஒருசேர திணித்துள்ளார். இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


    இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள அத்தனை பொருளாதார தடைகளையும் தகர்த்து பெருமையுடன் முன்னேறி வருவோம் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி இன்று சூளுரைத்துள்ளார்.

    ஈரான் மக்களிடையே இன்று தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய ரவுகானி, 'சர்வதேச நெறிமுறைகளை மீறி எங்கள் மீது உங்களால் (அமெரிக்கா) திணிக்கப்பட்டுள்ள சட்டமீறலான அத்தனை தடைகளையும் தகர்த்து நாங்கள் பெருமையுடன் முன்னேறி வருவோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன்’ என குறிப்பிட்டார். #Iransanctions #USsanctions #Rouhani
    ஈரான் மீதான பொருளாதார தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அமெரிக்காவின் இந்த பொருளாதார தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். #IranSanctions #USSanctions
    தெக்ரான்:

    ஈரானுடன் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டில் அணு ஆயுத தடை ஒப்பந்தம் செய்து இருந்தன. அதில் இருந்து மீறிவிட்டதாக புகார் கூற கடந்த மே மாதம் அமெரிக்கா விலகியது.

    மேலும் ஈரான் மீது விலக்கி இருந்த பொருளாதார தடையை மீண்டும் விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். எப்போதும் இல்லாத வகையில் பொருளாதார தடை இருக்கும் என்றும் எச்சரித்தார். ஈரான் மட்டுமின்றி அதனுடன் வர்த்தக தொடர்பு வைத்திருக்கும் நாடுகளுக்கும் இந்த தடை பாயும் என்றும் தெரிவித்தார்.

    அந்த பொருளாதார தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அமெரிக்காவில் பாராளுமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான பிரசாரத்துக்கு புறப்படும் முன்பு அதிபர் டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஈரான் மீதான பொருளாதார தடை கடுமையாக இருக்கும். அது எப்போதும் இல்லாத வகையில் மிக பலம் வாய்ந்ததாக இருக்கும். என்ன நடக்கும் என்பதை பார்க்க தானே போகிறோம் என்றார்.

    இதன் மூலம் எண்ணை ஏற்றுமதி, வங்கி சேவைகள், கப்பல் நிறுவனங்கள், விமான சேவை உள்ளிட்ட 700 வகையான பாதிப்புகள் ஏற்படும். மேலும் அமெரிக்காவின் 100 மிகப்பெரிய கம்பெனிகள் ஈரானில் இருந்து வெளியேறும். அதன் காரணமாக ஈரான் பொருளாதாரத்தில் கடும் சரிவு ஏற்படும். எனவே அமெரிக்காவின் இந்த பொருளாதார தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.



    தெக்ரானில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஆயிரக்கணக்கானோர் கூடி அமெரிக்காவுக்கு எதிரான கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இதே போன்று மேலும் பல நகரங்களிலும் போராட்டம் நடைபெற்றது. ஆனால் ஈரான் ராணுவத்தின் போர் விமானங்கள் வானத்தில் பறந்து பயிற்சிகள் மேற்கொண்டன. நாட்டின் பாதுகாப்பு பணியில் பலம் வாய்ந்தவர்களாக இருப்பதை காட்டுவதற்கு இவை நடத்தப்பட்டன.

    ஆனால் ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த தடையை ஏற்க மறுத்த இவர்கள் ஈரானுடனான வர்த்தகத்தை டாலர் இன்றி வேறு விதமான பணபரிமாற்றத்துடன் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தனர். #IranSanctions #USSanctions
    பொருளாதார தடையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் தொடர்ந்த வழக்கு விசாரணையில், தங்களது தடைகள் சட்டபூர்வமானதே என அமெரிக்கா வாதிட்டுள்ளது. #IranNuclearDeal #USsanctions #UN
    தி ஹேக்:

    ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா அந்நாட்டின் மீது பல பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இரண்டாம் கட்ட பொருளாதார தடைகள் வரும் நவம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது. 

    அமெரிக்காவின் தொடர் பொருளாதார தடைகளால் ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் எச்சரிக்கையால் பல சர்வதேச நிறுவனங்கள் ஈரானை விட்டு வெளியேறி வருகின்றன. மேலும், ஈரான் உடன் பொருளாதார உறவு கொண்டிருந்த பல நாடுகள் அமெரிக்காவின் மிரட்டலால் தொடர்பை துண்டித்து வருகின்றன.

    பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் விமான நிறுவனங்கள் அடுத்த மாதம் முதல் ஈரானுக்கான விமான சேவையை ரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளன. ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றுமதியும் குறைந்துள்ளது. இதனால் ஈரானின் நாணய மதிப்பு கடந்த ஏப்ரல் மாதம் முதல்  பாதியாக சரிந்துள்ளது.

    அமெரிக்காவின் நடவடிக்கைகளை எதிர்த்து நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் கடந்த ஜூலை மாதம் வழக்கு பதிவு செய்தது. அமெரிக்கா விதித்த தடைகளை ரத்து செய்யவேண்டும். ஈரானுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு அமெரிக்கா உரிய இழப்பீடு தர வேண்டும் என ஈரான் தரப்பில்  கோரப்பட்டுள்ளது.



    இந்நிலையில் சர்வதேச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நேற்று தொடங்கியது. அப்போது, அமெரிக்காவின் பொருளாதார தடைகள் இரு நாடுகள் இடையே 1955ம் ஆண்டு போடப்பட்ட நட்பு மற்றும் பொருளாதார உறவு ஒப்பந்தத்திற்கு எதிரானது என்றும் ஈரான் தரப்பில் வாதிடப்பட்டது.

    இன்று அமெரிக்கா தனது வாதத்தில் கூறுகையில், “ஈரான் மீது போடப்பட்ட பொருளாதார தடைகள் முழுக்க  முழுக்க சட்ட பூர்வமானதே. தேசத்தின் பாதுகாப்புக்காக எடுக்கப்படும் இது போன்ற சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர்த்து ஈரானால், ஐநாவிலோ, சர்வதேச நீதிமன்றத்திலோ முறையிட முடியாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    “நல்லுணர்வு சார்ந்த ஒப்பந்தங்கள் அடிப்படையில் வழக்கு தொடர தங்களுக்கு உரிமை இருப்பதால் ஈரான் முயற்சிக்கிறது. நீதிமன்றங்கள் மூலம் தீர்வு என்பது அந்த ஒப்பந்தங்களில் இல்லை. தூதரங்கள் வழியாகவே ஒப்பந்தங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. நீதிமன்றங்களின் வழியே இல்லை” என அமெரிக்கா தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளது. 

    தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. 
    ×