search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Is it good to drink tea"

    • டீ உடலுக்குள் சென்றால் என்னென்ன நிகழும் தெரியுமா?
    • தினமும் 2 அல்லது 3 கப் டீ பருகலாம். அதற்கு மேல் பருகக்கூடாது.

    பால், தேயிலை, சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் டீ உலகெங்கும் பரவலாக பகிரப்படும் பானமாக விளங்குகிறது. டீ பருகிவிட்டுத்தான் அன்றைய நாளை தொடங்கும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அப்படி ருசிக்கப்படும் டீ உடலுக்குள் சென்றால் என்னென்ன நிகழும் தெரியுமா?


    ''பாலில் இருக்கும் கால்சியம் எலும்புகளை கொஞ்சம் வலுவடைய செய்யும். வயதாகும்போது ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு அடர்த்தி குறைபாட்டை தடுக்க இது உதவும். வளர்சிதை மாற்றம் சீராக இயங்க உதவும்.

    மேலும் தேநீரில் இருக்கும் காபின் அதிக விழிப்புடனும், கவனத்துடனும் இருக்கச் செய்யும். அத்துடன் தேநீரில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கும் சிறு கவசங்கள் போன்று செயல்படும்.

    டீ பருகும் விஷயத்தில் கவனமாக இருக்காவிட்டால் அதில் இருக்கும் தேயிலை உடலில் இரும்பை உறிஞ்சும் திறனை குழப்பிவிடும்'' என்கிறார், பெங்களூருவை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் இப்சிதா சக்கரவர்த்தி.

    இதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

    * தினமும் 2 அல்லது 3 கப் டீ பருகலாம். அதற்கு மேல் கண்டிப்பாக பருகக்கூடாது.

    * டீயில் கூடுமானவரை இனிப்பு சேர்ப்பதை தவிர்த்திடுங்கள். அது முடியாதபட்சத்தில் சிறிதளவு இனிப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

    * விரும்பிய நேரமெல்லாம் டீ பருகுவதை தவிர்க்க வேண்டும். தாகமாக இருக்கும்போதும் பருகக்கூடாது. நிறைய தண்ணீர் பருகுவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

    * செரிமான கோளாறு போன்ற வயிறு சார்ந்த பிரச்சினைகளை சந்தித்தால் டீயை தவிர்த்து விடுவது நல்லது. மாற்று பானத்தை தேர்ந்தெடுப்பது சிறப்பானது.


    காபினால் பிரச்சினை ஏற்படுமா?

    பால் டீயை தினமும் பருகும்போது உடலுக்கு விரைவான ஆற்றலை வழங்கும். சோர்வை போக்கி செய்யும் வேலையில் கவனம் செலுத்த உதவும். ஆனால் டீயில் அதிகப்படியான காபின் இருந்தால் கவலை, அமைதியின்மை, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

    நீரிழிவு நோயை உண்டாக்குமா?

    டீயில் அதிக சர்க்கரை சேர்ப்பது ரத்தத்தில் சர்க்கரை அளவை சீர்குலைத்துவிடும். காலப்போக்கில் டைப்-2 நீரிழிவு அபாயத்தையும் அதிகரிக்க செய்துவிடும். அத்துடன் டீயில் இருக்கும் சர்க்கரை மற்றும் கொழுப்பு கலவையானது வயிற்றை சுற்றி கொழுப்பு சேர்வதற்கு காரணமாகிவிடக்கூடும்.


    பாதிப்பை ஏற்படுத்துமா?

    சிலருக்கு பாலும், தேநீரும் ஒத்துக்கொள்ளாது. வயிற்று உப்புசம், வாயுத்தொல்லை மற்றும் அஜீரணத்துக்கு வழிவகுக்கும். பால் கலந்த டீக்களில் சர்க்கரை மற்றும் கலோரிகள் நிரம்பியிருக்கும். அதிலிருக்கும் அதிகப்படியான இனிப்பு உடல் எடை அதி கரிப்புக்கு வழிவகுக்கும். டீ மட்டுமே பருகிவிட்டு போதுமான அளவு தண்ணீர் உட்கொள்ளாவிட்டால் நீரிழப்புக்கும் வழிவகுக்கும்.

    ×