search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ISSF World Cup"

    ஆண்கள் பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்திய அணி, குரோஷியாவிடம் தோல்வி அடைந்தது
    பாகு:

    உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகு நகரில் நடந்து வருகிறது.  

    மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் இளவேனில், ரமிதா, ஸ்ரேயா ஆகியோர் அடங்கிய இந்திய அணி முதலாவது சுற்றில் 94.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. 

    2-வது தகுதி சுற்றில் டென்மார்க்கை விட சற்று பின்தங்கியது. எனினும் இறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி டென்மார்க்கை எதிர்கொண்டது. 

    இதில் இளவேனில், ரமிதா, ஸ்ரேயா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு 17-5 என்ற புள்ளி கணக்கில் முதலிடம் பிடித்து தங்க பதக்கத்தை தட்டிச் சென்றனர்.

    ஆண்கள் பிரிவில் ருத்ராங்க்‌ஷ் பட்டீல், பார்த் மஹிஜா, தனுஷ் ஸ்ரீகாந்த் ஆகியோர் அடங்கிய இந்திய  அணி வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் 10-16 என்ற புள்ளி கணக்கில் குரோஷியாவிடம் தோல்வியை தழுவியது.

     
    டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் கலப்பு பிரிவில் இந்திய வீரர்கள் மனு பாகர், சவுரப் சவுத்ரி ஜோடி தங்கம் வென்று அசத்தியுள்ளது. #ISSFWorldCup #ManuBhaker #SourabhChoudhary
    புதுடெல்லி:

    சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று  வருகிறது.

    இதில், கலப்பு பிரிவுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது. இதில், சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் மனு பாகர் மற்றும் சவுரப் சவுத்ரி ஜோடி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. #ISSFWorldCup #ManuBhaker #SourabhChoudhary
    உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மானு பாகெர், ஹீனா சித்து ஆகியோர் இறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம் அளித்தனர். #ISSFWorldCup #IndianShooters
    புதுடெல்லி:

    உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனைகள் மானு பாகெர், ஹீனா சித்து ஆகியோர் இறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம் அளித்தனர். மானு பாகெர் 573 புள்ளிகளுடன் 14-வது இடத்துக்கும், ஹீனா சித்து 571 புள்ளிகளுடன் 25-வது இடத்துக்கும் தள்ளப்பட்டு தகுதி சுற்றுடன் வெளியேறினர்.

    8 பேர் கொண்ட இறுதி சுற்றில் ஹங்கேரி வீராங்கனை 21 வயதான வெரோனிகா மாஜோர் 245.1 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். அவருக்கு இது 2-வது தங்கப்பதக்கம் ஆகும். ஏற்கனவே 25 மீட்டர் பிஸ்டல் பிரிவிலும் அவர் மகுடம் சூடியிருந்தார்.

    ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிரிவிலும் இந்தியாவுக்கு சோகமே மிஞ்சியது. இதில் இந்திய வீரர் அனிஷ் பான்வாலா தகுதி சுற்றை தாண்டவில்லை. இதே போல் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவில் காயத்ரி, சுனிதி சவுகான் ஆகிய இந்தியர்கள் தகுதி சுற்றுடன் நடையை கட்டினர்.
    டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்று அசத்தினார். #ISSFWorldCup #SourabhChoudhary
    புதுடெல்லி:

    சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது.

    இதில், ஆடவர் பிரிவுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது. இதில், சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 245 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.



    இதன்மூலம் 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்றில் அதிக புள்ளிகளைப் பெற்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். #ISSFWorldCup #SourabhChoudhary
    டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்று அசத்தியுள்ளார். #ISSFWorldCup #ApurviChandela
    புதுடெல்லி:

    சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் இன்று தொடங்கியது.



    இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார். வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை சீன வீராங்கனைகள் வென்றனர். #ISSFWorldCup #ApurviChandela
    ஜெர்மனியில் நடைபெற உள்ள உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்பதற்கு நிதி உதவி கேட்டு பிரதமர் மோடிக்கு உ.பி.யைச் சேர்ந்த இளம் வீராங்கனை கடிதம் எழுதி உள்ளார். #ISSFJuniorWorldCup #FundForIndianPlayer
    மீரட்:

    சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு (ஐஎஸ்எஸ்எப்) சார்பில் ஜெர்மனியின் சுகல் நகரில் வரும் 22-ம் தேதி ஜூனியர் உலகக் கோப்பை போட்டி தொடங்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்கு, உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த பிரியா சிங் (வயது 19) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ஆனால், உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க காத்திருக்கும் பிரியா சிங்கின் குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பதால், அவரால் ஜெர்மனி சென்று தங்கியிருந்து போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு செல்வதற்கு லட்சக் கணக்கில் செலவு ஆகும் என்பதால் அவரது குடும்பத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பில் உள்ளனர்.



    எனவே, ஜெர்மனி சென்று திரும்புவதற்கான பயணச் செலவு மற்றும் அங்கு தங்குவதற்கு தேவையான நிதி உதவி கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரியா சிங் கடிதம் அனுப்பி உள்ளார்.

    இது தொடர்பாக பிரியா சிங் கூறியதாவது:-

    உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறேன். ஆனால், அதற்கு 3 முதல் 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என கூறியுள்ளனர். என் தந்தை கூலித் தொழிலாளி. அவரால் இயன்ற வரை முயற்சி செய்தார். ஆனால், அவரால் பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. எனவே, நிதி உதவி கேட்டு உத்தர பிரதேச முதல்வர் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

    உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க உதவி கேட்டு விளையாட்டுத்துறை மந்திரியை சந்திப்பதற்காக இரண்டு முறை சென்றேன். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #ISSFJuniorWorldCup #FundForIndianPlayer
    ×