search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "janagai mariamman temple"

    • வைகாசி தேர்த்திருவிழா 6-ந்தேதி நடைபெற உள்ளது.
    • தேரை கோவிலில் இருந்து கடைவீதியில் கொண்டு வந்து நிறுத்தி வைத்திருந்தனர்.

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி தேர்த்திருவிழா காவல்துறை குடும்பத்தார் சார்பில் வருகிற 6-ந்தேதி காலை 8 மணி அளவில் நடைபெற உள்ளது. இதற்காக தேரை கோவிலில் இருந்து கடைவீதியில் கொண்டு வந்து நிறுத்தி வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து அங்கு முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. கோவில் அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகளை செய்தார்.

    இதில் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், ஆச்சாரியார்கள் கண்ணன், ரவி, கோவில் பணியாளர் பூபதி, அர்ச்சகர் சண்முகவேல் ஆகியோர் முகூர்த்தக்காலை நட்டனர். இதில் கோவில் செயல் அலுவலர் இளமதி, கோவில் பணியாளர்கள் கவிதா, வசந்த், போலீசார் கலந்து கொண்டனர்.

    • வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர்.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் கடந்த 22-ந் தேதி வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் இருந்து தினசரி அம்மன்புறப்பாடு நடைபெற்றது. இதில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பால்குடம், அக்னிச்சட்டி எடுக்கும் திருவிழா நேற்று நடந்தது. இதில் பக்தர்கள் வைகை ஆற்றுக்கு சென்று பூஜை செய்து பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். நேர்த்திக் கடனுக்காக உருவபொம்மை, ஆயிரங்கண்பானை, 21 அக்னிச்சட்டி, கரும்பு தொட்டில் குழந்தை எடுத்துவருதல், கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வருதல், அலகுகுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சோழவந்தான் பேரூராட்சி சார்பாக பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், செயல் அலுவலர் சகாயம்அந்தோணியூசின், சுகாதாரப் பணி ஆய்வாளர் முருகானந்தம், துணைத்தலைவர் லதாகண்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கூடுதலாக மின்விளக்கு, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி செய்திருந்தனர்.

    இதேபோல் முள்ளிப்பள்ளம் ஊராட்சி தலைவர் பழனிவேல், துணைத்தலைவர் கேபிள்ராஜா, ஊராட்சி செயலாளர் மனோபாரதி மற்றும் பணியாளர்கள் ஆகியோர் பக்தர்கள் வசதிக்காக வைகை ஆற்றில் இறங்கும் பகுதியில் பாதைகள் அனைத்திலும் சுத்தம் செய்யப்பட்டு கூடுதலாக மின்விளக்கு வசதி செய்துள்ளனர்.

    மாலை அம்மன் வைகை ஆற்றுக்கு சென்று அங்கு அபிஷேகம் நடந்தது. இரவு வைகை ஆற்றில் இருந்து பூப்பல்லக்கில் அம்மன் பவனி வந்து கோவிலை வந்தடைந்தது. சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர், என்.சி.சி. மாணவர்கள், சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் பசும்பொன் மற்றும் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், வட்டார சுகாதாரப்பணி ஆய்வாளர் முனியசாமி, சுகாதார ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் மருத்துவ குழுவினர் ஆகியோர் முகாம் அமைத்திருந்தனர். இன்று மாலை மந்தைகளம் மைதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • பூக்குழி இறங்குதல் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் காப்பு கட்டினார்கள்.
    • விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் அமாவாசைக்கு பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றப்பட்டு 17 நாட்கள் நடைபெறும். இதையொட்டி தினசரி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு நேற்று இரவு அர்ச்சகர் சண்முகவேல் திருவிழா கொடியேற்றம் பொருட்களுடன் மேளதாளத்துடன் நான்குரதவீதி வலம் வந்து கோவில் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றும் விழா, சிறப்பு பூஜை நடைபெற்றது.

    திருவிழா கொடியேற்ற உபயதார் சிங்கம் என்ற மந்தையன் சேர்வை குடும்பத்தார் அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார்கள். விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் செயல்அலுவலர் இளமதி, தக்கார் சங்கரேஸ்வரி, கோவில் பணியாளர்கள் பூபதி, கவிதா, வசந்த், பெருமாள் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர். சுகாதாரப்பணி, குடிநீர்வசதி, கூடுதல் தெருவிளக்கு ஏற்பாடுகள் சோழவந்தான் பேரூராட்சி செய்திருந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பால்குடம், அக்னிச்சட்டி, பூக்குழி இறங்குதல் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் காப்பு கட்டினார்கள்.

    • 6-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 7-ந் தேதி தீர்த்தவாரி திருவிழா நடைபெறும்.

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் அமாவாசைக்கு பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடந்து 17 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதை முன்னிட்டு தினசரி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு வைகாசி திருவிழா வருகிற நாளை மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இந்த திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடைபெறும். தினசரி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    முக்கிய திருவிழாவாக வருகிற 30-ந் தேதி காலை பால்குடம், மாலை அக்னிசட்டி, இரவு பூப்பல்லக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    வருகிற 31-ந் தேதி மாலை 5 மணிக்கு பூக்குழி இறங்குதல், ஜூன் 6-ந் தேதி தேரோட்டம், 7-ந் தேதி இரவு வைகை ஆற்றில் விடிய விடிய தீர்த்தவாரி திருவிழா நடைபெறும். விழாவில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து அம்மனை தரிசித்து செல்வார்கள்.

    விழா ஏற்பாடுகளை செயல்அலுவலர் இளமதி, கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சோழவந்தான் போலீசார், தூய்மைப்பணி ஏற்பாடு மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடுகளை சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் செய்து வருகின்றன. திருவிழா காலங்களில் பக்தர்கள் வசதிக்காக வைகை ஆற்றுக்கு செல்வதற்கு ஒரு பாதையும், வைகை ஆற்றில் இருந்து வெளியே வருவதற்கு ஒரு பாதையும் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • திருவிழா 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • கொடியேற்றம் நடந்து 17 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் அமாவாசைக்கு பின்னர் வரும் திங்கட்கிழமை அன்று கொடியேற்றம் நடந்து 17 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

    இதில் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இருந்தும், அண்டைமாநிலமான புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகை தந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை தரிசித்து செல்வார்கள்.

    இந்த ஆண்டு வருகிற 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. இதையொட்டி நகரத்தார்கள் சார்பாக 52-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்று இரவு நடந்தது. இதையொட்டி மேளதாளத்துடன், வாணவேடிக்கையுடன் அம்மன் மின் அலங்காரத்தில் நான்கு ரத வீதி பவனி வந்தார். இதில் பெண்கள் பூத்தட்டு மற்றும் பால்குடம் எடுத்து வந்தனர்.

    அர்ச்சகர் சண்முகவேல் அம்மனுக்கு திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்து, பூச்சொரிதல் விழா, சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • இந்த ஆண்டு திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
    • நூற்றுக்கணக்கான பக்தர்கள் பின் தொடர்ந்து வந்தனர்.

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் வைகாசி அமாவாசைக்கு பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடைபெறும். இதைத்தொடர்ந்து 17 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

    பங்குனி மாத அமாவாசைக்கு பின்னர் வரும் திங்கட்கிழமை சுற்றுப்புற கிராம பக்தர்களுக்கு திருவிழா நடத்துவதற்கு முன்பு அறிவிப்பாக 3 மாத கொடியேற்று விழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கான 3 மாத கொடியேற்று விழா நேற்று இரவு நடந்தது. நேற்று மாலை வாணவேடிக்கை, மேளதாளத்துடன் சண்முகவேல் அர்ச்சகர் 3 மாத கொடிக்கம்பத்தை எடுத்து வந்தார்.

    இவருடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பின் தொடர்ந்து வந்தனர். இந்த 3 மாத கொடி கம்பம் கடைவீதி, தெற்குரதவீதி, மேலரதவீதி, வழியாக வைகைஆற்றுக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து வடக்குரதவீதி, கடைவீதி, மாரியம்மன் சன்னதி வந்து கோவில் முன்பாக உள்ள கொடிபீடத்தில் 3 மாத கொடி ஏற்றும் விழா நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை செயல்அலுவலர் இளமதி, கோவில் பணியாளர்கள் மற்றும் உபயதாரர் சோழவந்தான் காவல் ராசுஅம்பலம் குடும்பத்தினர் செய்திருந்தனர். சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • அம்மனுக்கு 12 அபிஷேகங்கள் நடைபெற்றன.
    • நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் விதவிதமாக முளைப்பாரி எடுத்து வந்தனர்.

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 17-வது நாள் திருவிழாவில் தீர்த்தவாரி திருவிழா நடந்தது. இதையொட்டி மாலை 4 மணிஅளவில் திருவிழா கொடி இறக்கம் நடைபெற்றது. தொடர்ந்து மஞ்சள் நீராடுதல் நடந்தது. அம்மன் கேடயத்தில் வைகை ஆற்றுக்கு எழுந்தருளினார். பெண்கள் ஊர்வலமாக முளைப்பாரி எடுத்து அம்மனுடன் வைகை ஆற்றுக்கு சென்றனர்.

    மகளிர் குழு சார்பாக அம்மனுக்கு முன்பு கோலாட்டம் நடந்தது. இங்கு அம்மனுக்கு 12 அபிஷேகங்கள் நடைபெற்றன. தீர்த்தவாரி மேடையில் வண்ணவண்ண பூக்கள், மின் அலங்காரத்துடன் அம்மன் ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி நடந்தது. அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்தார். விழாவையொட்டி வைகை ஆற்றில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தீர்த்தவாரி மண்டகப்படி உபயதாரர் பால்பாண்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.

    விழாவில் கோவில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தீர்த்தவாரி திருவிழாவையொட்டி தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நேற்று இரவு பேட்டை கிராமத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் விதவிதமாக முளைப்பாரி எடுத்து வந்தனர். இன்று அதிகாலை வைகை ஆற்றில் இருந்து ரிஷபவாகனத்தில் அம்மன் புறப்பட்டு கோவிலை வந்தடைவார். இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • தேர் வரும் வழி நெடுக மாம்பழம், வாழைப்பழம், நாணயங்களை பக்தர்கள் சூறை விட்டனர்.
    • இன்று (புதன்கிழமை) இரவு விடிய விடிய தீர்த்தவாரி திருவிழா நடைபெறுகிறது.

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு வைகாசி திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. அதிகாலை அம்மன் கேடயத்தில் அலங்காரமாகி கோவிலில் இருந்து புறப்பட்டு தேருக்கு எழுந்தருளினார். அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்தார்.

    அமைச்சர் மூர்த்தி தேர் வடம் பிடித்து தேர் திருவிழாவை தொடங்கி வைத்தார். வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், தாசில்தார் நவநீதகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சிவபாலன், பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சனன், கோவில் செயல்அலுவலர் இளமதி மற்றும் பக்தர்கள் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சோழவந்தான் பாட்டியமந்தார், கிராம காவல்காரர்கள் ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுப்பதற்கு வெள்ளை வீசினார்கள்.

    தேர் அங்கிருந்து புறப்பட்டு கடைவீதி, தெற்குரதவீதி, மேலரதவீதி, வடக்குரதவீதி, வழியாக தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. வழிநெடுக அம்மனை வரவேற்று பக்தர்கள் பூஜைகள் செய்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர் வசந்தகோகில சரவணன், வருவாய் ஆய்வாளர் சுப்புலட்சுமி, சுகாதாரபணி ஆய்வாளர் முருகானந்தம், துணைத்தலைவர் லதாகண்ணன், வார்டு கவுன்சிலர்கள் மருதுபாண்டியன், சத்யபிரகாஷ், குருசாமி, ஈஸ்வரி ஸ்டாலின், முத்துச்செல்வி சதீஷ்குமார், செந்தில்வேல், சிவா, நிஷா கவுதமன் உள்பட பலர் கலந்துகொண்டனர். தேர் வரும் வழி நெடுக மாம்பழம், வாழைப்பழம், நாணயங்களை பக்தர்கள் சூறை விட்டனர், சிறுவர் சிறுமியர் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வலம் வந்தனர்.

    இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணி, இளங்கோ உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சோழவந்தான் பேரூராட்சி சார்பாக சுகாதாரப் பணி மேற்கொள்ளப்பட்டது. விழாவில் கவுன்சிலர் டாக்டர் மருதுபாண்டியன் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இரவு கோவிலின் முன்பாக உள்ள மேடையில் காவல்துறை பேண்டு வாத்திய இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) இரவு சோழவந்தான் வைகை ஆற்றில் விடிய விடிய தீர்த்தவாரி திருவிழா நடைபெறுகிறது.

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவில் அம்மனுக்கு வைகையாற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 21-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தினசரி அம்மன் புறப்பாடு நடந்தது. 9-ம் நாள் பால்குடம், அக்னிசட்டி, பூப்பல்லக்கும், 10-வதுநாள் பூக்குழி விழாவும், 16-ம்நாள் தேரோட்டம் நடைபெற்றது.

    நிறைவு நாளான நேற்றைய முன்தினம் மாலை 4.30 மணியளவில் திருவிழா கொடி இறக்கப்பட்டு மஞ்சள் நீராடுதல் நடந்தது. அம்மன் கேடயத்தில் எழுந்தருளி வைகை ஆற்றுக்குச் சென்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் தொடங்கி அம்மனுக்கு வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சள்ஆடும் நிகழ்ச்சி விடிய விடிய நடந்தது.

    இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் வைகையாற்றிலிருந்து அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதியில் பவனி வந்து கோவிலை வந்தடைந்தார். 
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் 16-ம்நாளான நேற்று காவல்துறை குடும்பத்தினர் சார்பில் தேரோட்டம் நடைபெற்றது.
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் 16-ம்நாளான நேற்று காவல்துறை குடும்பத்தினர் சார்பில் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு தேருக்கு வந்தார். அங்கு கிராம வழக்கப்படி வெள்ளை வீசுபவர்கள், கிராம காவலர்கள், தேருக்கு கட்டை போடும் ஆசாரிகள் ஆகியோரை மேளதாளத்துடன் அழைத்து வந்தனர்.

    அப்போது காவல்துறை குடும்பத்தினர் வரவேற்றனர். தொடர்ந்து கணேஷ் பட்டர் பூஜைகள் நடத்தினார். பின்னர் காலை 8.50 மணிக்கு கூடுதல் கண்காணிப்பாளர் நரசிம்மவர்மன், துணை கண்காணிப்பாளர் மோகன்குமார், தாசில்தார் பார்த்திபன், ஆய்வாளர் பாலாஜி, உதவி ஆய்வாளர்கள் சதீஷ்குமார், மாதவன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    தேர் புறப்பட்டு கடைவீதி, தெற்குரதவீதி, மேலரதவீதி, வடக்குரதவீதி வழியாக வலம் வந்தது. அப்போது வழிநெடுக பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பானக்கம், நீர்மோர், கூழ் வழங்கினர் மேலும் சாக்லெட், மாம்பழம், வாழைப்பழம், விசிறி, காசுகள் ஆகியவற்றை சூறைவிட்டனர். தேர்நிலைக்கு வந்ததும், குழந்தைகள் பெரியவர்கள் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி தேரை வலம் வந்து கோவிலுக்குள் சென்றனர்.

    பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண் காவலர்கள் பெண்களிடம் சேப்டி பின் கொடுத்து நகைகளை உடையில் மாட்டி கொள்ளும்படி கேட்டுக்கொண்டனர். 
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் காப்புக்கட்டுதலுடன் விரதம் மேற்கொண்டனர்.
    சோழவந்தான் நகரின் மையத்தில் அமைந்துள்ளது ஸ்ரீஜெனகை மாரியம்மன் கோவில். பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் வைகாசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் காப்புக்கட்டுதலுடன் விரதத்தை தொடங்கினர். விழாவையொட்டி நேற்றுமுன்தினம் இரவு கோவில் முன்பாக யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கணேசபட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூஜை பொருட்களுடன் நான்கு ரதவீதிகளில் வலம் வந்தனர்.

    பின்பு கோவிலில் உள்ள கம்பத்தில் மேளதாளம் முழங்க கொடியேற்ற வைபவம் நடைபெற்றது. பின்பு அம்மனுக்கு காப்புக்கட்டப்பட்டது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்களுக்கு காப்புகள் கட்டப்பட்டன. தொடர்ந்து 17 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

    திருவிழாவில் தினமும் அம்மன் ரிஷபம், யாழி, சிம்மம், காமதேனு, குதிரை, அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நேற்று காலை அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி பூமேட்டு தெருவில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு சென்றார். பின்பு அங்கிருந்து இரவு சிம்மவாகனத்தில் புறப்பட்டு கோவிலை வந்தடைந்தார். இரவு கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் எம்.வி.எம் குழும தலைவர் முத்தையா, நிர்வாகி வள்ளிமயில், கலைவாணி மெட்ரிக்பள்ளி தாளாளர் மருதுபாண்டியன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று இரவு அம்மன் யாழி வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக 9-ம்நாள் காலை பால்குடம், பிற்பகல் 2 மணி முதல் அக்னிச்சட்டி எடுத்தல் நடைபெறுகிறது.

    இரவு பூப்பல்லக்கும், மறுநாள் மாலை மந்தைக்களத்தில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 16-ம் நாள் திருவிழாவாக திருத்தேரோட்டமும், 17-ம்நாள் வைகையாற்றில் தீர்த்தவாரி உற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாக அதிகாரி லதா, தக்கார் சக்கரையம்மாள், கணக்கர் பூபதி, மற்றும் ஆலய பணியாளர்கள் உபயதாரர்கள் செய்து வருகின்றனர். 
    ×