search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jawa forty two"

    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது இரு மோட்டார்சைக்கிள்களின் விநியோக விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #JawaMotorcycles



    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்தது. இரு மோட்டார்சைக்கிள்களுக்கும் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், முன்பதிவுகள் செப்டம்பர் 2019 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனர் அனுபம் தரேஜா தனது ட்விட்டரில், ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள் மார்ச் மாதத்தின் நான்காவது வாரத்தில் இருந்து விநியோகம் செய்யப்படும் என தெரிவித்திருக்கிறார். இதனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருக்கிறார். 



    அறிமுகம் செய்யப்படும் போது ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. பின் இரண்டு ஜாவா மோட்டார்சைக்கிள்களும் செப்டம்பர் 2019 வரை முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும், எத்தனை மோட்டார்சைக்கிள்கள் முன்பதிவு செய்யப்பட்டன என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    தற்சமயம் வரை ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் நாடு முழுக்க சுமார் 100 விற்பனையகங்களை திறந்திருக்கிறது. விநியோகம் துவங்கியதும் வாடிக்கையாளர்கள் மோட்டார்சைக்கிளுக்கான முழு தொகையை செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம். 

    இந்தியாவில் ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள்கள் விலை முறையே ரூ.1.69 லட்சம் மற்றும் ரூ.1.55 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இரு மாடல்களிலும் 293சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்க் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது.
    ×