search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jeya mohan writer"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் ரூ. 100 கோடியை தாண்டியது
    • மஞ்சும்மல் பாய்ஸ் படம் "எனக்கு பிடிக்கவே இல்லை என்று எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    அண்மையில் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. உலகளவில் ரூ. 100 கோடி வசூலை இப்படம் தாண்டியுள்ளது. தமிழ்நாடு வசூலில் மட்டும் ரூ.15 கோடியை தாண்டியது.

    வெகுஜன மக்களால் இத்திரைப்படம் மிகவும் கொண்டாடப்பட்டது. நடிகர் கமல், விக்ரம், தனுஷ், உதயநிதி ஸ்டாலின், சித்தார்த் போன்ற பல முன்னணி திரை பிரபலங்கள் இப்படத்தை பாராட்டினர்.

    எல்லாரும் புகழ்ந்து தள்ளிய இப்படத்தை "எனக்கு பிடிக்கவே இல்லை.. எரிச்சலூட்டும் படமாக இருந்தது" என்று எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து தனது இணையதளத்தில் அவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், "தென்னகம் முழுக்க உள்ள சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் அநாகரீக செயல் உள்ளது. சுற்றுலா மையங்கள் மட்டுமல்ல அடர்காடுகளுக்குள் கூட வந்துவிடுவார்கள்.

    குடிகுடிகுடி அவ்வளவுதான். வாந்தி எடுப்பது, சலம்புவது, விழுந்து கிடப்பது, அத்துமீறுவது, வேறெதிலும் ஆர்வமில்லை. அடிப்படை அறிவு கிடையாது. எந்தப் பொது நாகரீகமும் கிடையாது

    மலையாள சினிமா இக்கால சமூதாயத்தை கெடுக்கிறது எனவும், அடுத்து வரும் தலைமுறைகளை ஜாலியாக இருப்பது என்றால் அது குடியும் கும்மாலமும்மாக இருப்பது தான் என போதிக்கிறது" என அவர் விமர்சித்துள்ளார்.

    மேலும், கேரளத்தின் நலம் நாடும் ஓர் அரசு இருந்தால் "மஞ்சும்மல் பாய்ஸ்" படத்தை எடுத்த படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    எழுத்தாளர் ஜெயமோகனின் இந்த விமர்சனம் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் தற்போது ஜெயமோகனை கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "'தமிழ் பொறுக்கிஸ்' என்று சொன்ன அந்த சங்கியும், 'மலையாளப் பொறுக்கிகள்' என்று சொல்லும் இந்த சங்கியும் ஒரே சாக்கடையில் ஊறும் இரண்டு தவளைகளே. தமிழர்கள் - கேரளம் சென்றாலும், மலையாளிகள் தமிழ்நாடு வந்தாலும், அவர்கள் நம்மிடம் தமிழிலேயே பேசுகிறார்கள். குடிப்பொறுக்கிகள் உலகெங்கும் நிறைந்துள்ளனர்!" என அவர் பதிவிட்டுள்ளார்.

    ×