search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jithan Ramesh"

    • பிலாஷ் ஜி.தேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரூட் நம்பர் 17’.
    • இந்த படத்தில் கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார்.

    14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் படத்தை இயக்கிய இயக்குனர் அபிலாஷ் ஜி.தேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரூட் நம்பர் 17'. இந்த படத்தில் கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சு பாண்டியா நடித்துள்ளார். ஹரிஷ் பெராடி வில்லனாக நடிக்க, அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அமர் ராமச்சந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, கார்த்திக் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.


    நேமி புரொடக்ஷன்ஸ் சார்பில் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் அவுசப்பசன் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினார்களாக தயாரிப்பாளர் டி.சிவா, பின்னணி பாடகிகள் சுஜாதா மோகன், ஸ்வேதா மோகன், நடிகைகள் வசுந்தரா, ஜித்தன் ரமேஷுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்ற நடிகர்கள் ஆரி, சுரேஷ் சக்கரவர்த்தி, சோமசேகர், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா மற்றும் நடிகை கோமல் சர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


    இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆரி பேசியதாவது, நெடுஞ்சாலை சமயத்தில் அபிலாஷ் என்னிடம் ஒரு முறை கதை சொல்ல வந்தார். அப்போது இருந்து நல்ல பழக்கம். பின்னர் சில வருடங்கள் கழித்து தபால் அலுவலகம் மூலமாக சேமிப்பு கணக்கு துவங்கலாம் என்கிற பிரசாரத்தை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளாவில் முன்னெடுத்த போது அங்கே எனக்கு உறுதுணையாக நின்று உதவிகளை செய்தவர் அபிலாஷ்.

    ஜித்தன் ரமேஷுக்கு முன்னாடியே என்னிடம் இந்த கதையை அவர் சொல்லி இருக்கிறார். ஹீரோவாக நடித்து தோத்தவன் இருக்கிறான். ஆனால் வில்லனாக நடித்து தோத்தவன் யாரும் இல்லை. வில்லனாக காலடி எடுத்து வச்சிருக்கீங்க. இந்த சினிமா உங்களை நிச்சயம் உயரத்துக்கு கொண்டு போய் வைக்கும். நானும் அடுத்த வருடம் வெளியாகும் ஒரு படத்தில் உங்களை போலவே ஒரு வில்லனாக நடித்திருக்கிறேன்.


    அதேபோல இந்த மழை வெள்ள காலத்தில் அறந்தாங்கி நிஷா, கே பி ஒய் பாலா ஆகியோர் செய்த உதவிகளை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. எல்லோருமே பெரிய நடிகர்கள் உதவி செய்தால் மட்டுமே விளம்பரப்படுத்துகிறார்கள். உதவி செய்தவர்கள் யாராக இருந்தாலும் கொடுத்தவர்களை கொண்டாட வேண்டும் அவர்களும் ஹீரோதான். தயாரிப்பாளர் அமர் ஒரு சாமானியனாக இருந்து மருத்துவராகி சினிமா கனவுடன் 5 படங்களை எடுத்து அதை ரிலீஸ் செய்தும் இருக்கிறார் என்றால் எந்த அளவிற்கு சினிமா மீது அவருக்கு ஆர்வமும் கடின உழைப்பும் இருக்கும் என்பது தெரிகிறது என்று கூறினார்.

    • நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் 'ஃபர்ஹானா'.
    • இப்படத்திற்காக நடிகர் ஜித்தன் ரமேஷ் மாலைமலர் நேயர்களுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.

    'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து' போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான படம் 'ஃபர்ஹானா'. இதில் ஜித்தன் ரமேஷ், இயக்குனர் செல்வராகவன், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    ஃபர்ஹானா
    ஃபர்ஹானா

    இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் கணவராக நடித்த ஜித்தன் ரமேஷின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜித்தன் ரமேஷ், ஃபர்ஹானா திரைப்படம் குறித்தும் அவரின் திரைப்பயணம் குறித்தும் மாலைமலர் நேயர்களுக்காக பிரத்யேக பேட்டியளித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.


    மாலைமலருக்கு பேட்டியளித்த ஜித்தன் ரமேஷ்

    மாலைமலருக்கு பேட்டியளித்த ஜித்தன் ரமேஷ்

    அவர் பேசியதாவது, ஃபர்ஹானா திரைப்படத்திற்காக எனக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இனி நான் கதைகளை சரியாக தேர்ந்தெடுத்து நடிப்பேன். தற்போது ஜப்பான் மற்றும் ரூட் நம்பர் 17 படத்தில் நடித்து வருகிறேன். படம் சிறப்பாக இருக்கும் அதே சமயம் வித்யாசமாகவும் இருக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பொழுது அங்கு மிகவும் போர் அடிக்கும். டாஸ்க் நடைபெறும் போது மட்டும் பயங்கர ஜாலியாக இருக்கும்.


    ஜித்தன் ரமேஷ்

    ஜித்தன் ரமேஷ்

    அவன் - இவன் படம் நானும் ஜீவாவும் பண்ண வேண்டியது. முதலில் இயக்குனர் பாலா சார் எங்களை அழைத்து தான் பேசினார். அதன்பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை எங்கள் கையை விட்டு சென்று விட்டது. சூப்பர் குட் ஃபிலிம்சின் 100வது படம் கண்டிப்பாக தளபதி விஜய்யை வைத்து தான் பண்ணுவோம் என்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

    மேலும் ஜித்தன் ரமேஷின் பிரத்யேக பேட்டியை கீழே காணலாம்:



    விருந்தாளி, சாரல், சும்மாவே ஆடுவோம், திருப்பதி லட்டு, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல் எழுதிய முருகன் மந்திரம், தற்போது நடிகராக களமிறங்கி இருக்கிறார். #MuruganManthiram
    சினிமாவில் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என பலர் நடிகர்களாக களமிறங்கி ரசிகர்களை கவர்ந்துள்ளார்கள். அந்த வரிசையில் தற்போது பாடலாசிரியர் முருகன் மந்திரம் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்.

    பாடலாசிரியர் முருகன் மந்திரம் ‘விருந்தாளி, சாரல், சும்மாவே ஆடுவோம், திருப்பதி லட்டு, பட்டினப்பாக்கம், உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். இவர் தற்போது ஜித்தன் ரமேஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘ஒங்கள போடணும் சார்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பாடல்கள், வசனத்தையும் முருகன் மந்திரம் எழுதியுள்ளார்.



    இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் இயக்கும் இப்படத்தில், 5 கதாநாயகிகள் நடித்து வருகிறார்கள். கமர்சியல் என்டர்டெயினராக இப்படம் உருவாகி வருகிறது. ஸிக்மா பிலிம்ஸ் சார்பாக மனோஜ் தயாரித்து வருகிறார்.
    நயன்தாரா பேசும் பிரபல வசனத்தை தன்னுடைய புதிய படத்தின் தலைப்பாக ஜித்தன் ரமேஷ் வைத்திருக்கிறார். #JithanRamesh #Nayanthara
    ஸிக்மா பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் மனோஜ் தயாரிப்பில் 'ஜித்தன்' ரமேஷ், 5 கதாநாயகிகளுடன் நடிக்கும் படம் ‘ஒங்கள போடணும் சார்’. இதில் ஜித்தன் ரமேஷ் உடன் சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு நாயர், பரிட்சித்தா, வைஷாலி ஆகிய 5 அறிமுக கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

    இப்படம் பற்றி இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் கூறுகையில், நான்கு வாலிபர்கள் மற்றும் நான்கு இளம்பெண்கள் ஒரு வேலைக்காக ஒரு இடத்தில் ஒன்றாக தங்குகிறார்கள். ஜாலி, கேலி என நகரும் நாட்களும் இவர்கள் செய்கின்ற களேபரங்களும் யூத்புல்லாக இருக்கும். சவாலாக அந்த வேலையை எடுத்துச்செய்யும் இந்த வாலிபர்களும் இளம்பெண்களும் ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர். அது என்ன பிரச்சினை? அதில் இருந்து இவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதை கலகலப்பான திரில்லராக உருவாக்கி இருக்கிறோம். வழக்கமாக படங்களில் ஆண்கள் தான் பெண்களை கிண்டல் கேலி செய்வதை பார்த்திருப்போம். மாறாக, இந்த படத்தில் பெண்கள், ஆண்களை கிண்டல் செய்வதும் கலாய்ப்பதும் புதிய அனுபவமாக இருக்கும்.



    நீண்ட இடைவெளிக்குப் பின் ஜித்தன் ரமேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கமர்சியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப்படம் நிச்சயமாக ஜித்தன் ரமேஷுக்கு பெரிய திருப்புமுனையாக இருக்கும். பாடலாசிரியர் முருகன் மந்திரம், இப்படத்தில் பாடல்கள் மற்றும் வசனத்தை எழுதி இருப்பதோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார்.

    இந்த படத்திற்கு தலைப்பு யோசிக்கும்போது, சட்டென்று ரீச் ஆகிற மாதிரி இளைய தலைமுறைக்குப் பிடித்த தலைப்பாக இருக்கவேண்டும் என்று யோசித்தோம். அப்படி யோசிக்கும்போது "நானும் ரௌடி தான்" படத்தில் நயன்தாரா பேசிய "ஒங்கள போடணும் சார்" வசனம், நினைவுக்கு வந்தது. அதையே தலைப்பாக வைத்துவிட்டோம், நயன்தாராவுக்கு நன்றி… என்று கூறுகிறார்கள் இரட்டை இயக்குநர்கள். 
    ஜித்தன், மதுரைவீரன், புலி வருது, நீ வேணும்டா செல்லம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த ஜித்தன் ரமேஷ் தற்போது வில்லனாக ஒரு படத்தில் நடிக்கிறார். #JithanRamesh
    ஜித்தன், மதுரைவீரன், புலி வருது, நீ வேணும்டா செல்லம் உட்பட பல படங்களில் நாயகனாக நடித்தவர் ஜித்தன் ரமேஷ். நீண்ட நாட்கள் படங்களில் நடிக்காமல் பட தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு இருந்த அவர் மீண்டும் நடிக்க வருகிறார். ஆனால், கதாநாயகனாக இல்லாமல் பக்கா வில்லனாக நடிக்கிறார்.

    இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் சாய் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வங்காளத்தை சேர்ந்த ஈனா என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் இன்னும் முடிவாக வில்லை. இன்று சென்னையில் தி பார்க் ஹோட்டலில் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு துவங்கியது.

    ஜித்தன் ரமேஷுடன் ஏராளமான அழகிகள் ஆடிப்பாடுவது மாதிரியான பாடலை நடன இயக்குனர் பிரேம் ரக்‌ஷித் நடன அமைப்பில் படமாக்கப்பட்டது. ஆனந்த் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி ஒளிப்பதிவு செய்கிறார். வம்சி கிருஷ்ணா மல்லா என்பவர் இப்படத்தை எழுதி இயக்குகிறார். 



    வேகமாக வளர உள்ள இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு முழுவதும் கோவாவில் நடக்க உள்ளது. வில்லனாக நடிக்கும் ஜித்தன் ரமேஷ் கூறும்போது, ‘படம் திரைக்கு வந்தவுடன் இந்த கேள்வி வராது சில மாதங்கள் நடிக்காமல் ஒதுங்கி இருந்தேன் இயக்குனர் கேரக்டரை சொன்னவுடன் இந்த காரக்டரை விடக் கூடாது என்று முடிவெடுத்து ஓ.கே சொன்னேன்.
    ×