search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "John Obi Mikel"

    அர்ஜென்டினா வீரரின் கையில் பந்து பட்டது தெளிவாக தெரிந்த போதிலும் பெனால்டி கிடைக்காததால், நைஜீரியா வீரர் விரக்தியடைந்துள்ளார். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா - நைஜீரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அர்ஜென்டினா வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நிலையிலும், நைஜீரியா டிரா செய்தாலே போதும் என்ற நிலையிலும் களம் இறங்கியது.

    முதல் பாதி நேரத்தில் அர்ஜென்டினாவின் ஆட்டம் அபாரமாக இருந்தது. மெஸ்சி தனது சொந்த முயற்சியால் முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் அர்ஜென்டினா 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. 2-வது பாதி நேரத்தில், ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் நைஜீரியாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி நைஜீரியா வீரர் மோசஸ் கோல் அடித்தார். இதனால் 1-1 என போட்டி சமநிலைப் பெற்றது.

    பின்னர் சுமார் 35 நிமிடங்கள் அர்ஜென்டினாவால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியாக 86-வது நிமிடத்தில் ரோஜோ கோல் அடித்தார். இதனால் 2-1 என அர்ஜென்டினா முன்னிலைப் பெற்றது. இத்துடன் போட்டியை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அர்ஜென்டினா விரும்பியது.

    அதேவேளையில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்று நைஜீரியா வீரர்கள் விளையாடினார்கள். கடைசி நிமிடத்தில் நைஜீரியா வீரர் அடித்த பந்தை அர்ஜென்டினா வீரர் ரோஜா தலையால் முட்டி வெளியேற்ற நினைத்தார். அப்போது பந்து தலையில் பட்டபின் கையில் பட்டுச் சென்றது. இதனால் நைஜீரியா வீரர்கள் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.



    எப்படியும் பெனால்டி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் நடுவர் பெனால்டி வாய்ப்பு கொடுக்கவில்லை. நைஜீரியா வீரர்கள் முறையிட்டதால் நடுவர் VAR ரிவியூ முறையை பயன்படுத்தினார். அப்போது பந்து தலையில் பட்ட பின்னர்தான் கையில் பட்டது என பெனால்டி கொடுக்க மறுத்துவிட்டார்.

    இதனால் நைஜீரியாவின் டிரா செய்யும் நிலை பறிபோனதுடன், நாக்அவுட் வாய்ப்பையும் இழந்தது. இதனால் நைஜீரியா கோல்கீப்பர் ஜான் ஒபி மிகெல் விரக்தியடைந்துள்ளார். இதுகுறித்து மிகெல் கூறுகையில் ‘‘ரோஜாவின் கையில் பந்து பட்டது தெளிவாக தெரிந்தது. இந்த போட்டியை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் போர்ச்சுக்கல் அணிக்கெதிராக நடைபெற்றதை விட மோசமானது என்பது தெரியும்.



    பெனால்டி ஏன் கொடுக்கப்படவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என்னைப் பொறுத்த வகையில் ஹேண்ட்பால் என்பது மிகவும் தெளிவானது. இது பெனால்டிக்கு வாய்ப்புக்குரியதாகும். ஒரு நடுவர் ஒருமுறை பெனால்டி கொடுத்த பின்னர், 2-வது பெனால்டி கொடுக்க விரும்பாமல் இருக்கலாம். ஆனால் பெனால்டி பெனால்டிதான். நடுவர் VAR தொழில்நுட்ப உதவியை நாடிய பின்னர், பந்து கையில்தானே பட்டது? என்று கேட்டோம். அவரும் ஆம் என்றார். ஆனால், ஏன் பெனால்டி கொடுக்கப்படவில்லை? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை’’ என்றார்.
    ×