என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "jothidam"
- சதயம் - ராகு
- சுவாதி - ராகு
அஸ்வினி-கேது
பரணி-சுக்கிரன்
கார்த்திகை-சூரியன்
ரோகிணி-சந்திரன்
மிருகசீரிஷம்-செவ்வாய்
திருவாதிரை-ராகு
புனர்பூசம்-குரு (வியாழன்)
பூசம்-சனி
ஆயில்யம்-புதன்
மகம்-கேது
பூரம்-சுக்கிரன்
உத்திரம்-சூரியன்
அஸ்தம்-சந்திரன்
சித்திரை-செவ்வாய்
சுவாதி-ராகு
விசாகம்-குரு (வியாழன்)
அனுஷம்-சனி
கேட்டை-புதன்
மூலம்-கேது
பூராடம்-சுக்கிரன்
உத்திராடம்-சூரியன்
திருவோணம்-சந்திரன்
அவிட்டம்-செவ்வாய்
சதயம்-ராகு
பூரட்டாதி-குரு (வியாழன்)
உத்திரட்டாதி-சனி
ரேவதி-புதன்
- லக்கினங்கள் : ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, கும்பம், மீனம். இந்த லக்கினங்கள் சுபம் தரும்.
- இந்த லக்கினங்களுக்கு 7, 8ஆம் இடங்களில் கிரகங்கள் இல்லாமலிருந்தால் மிகவும் நல்லது.
மாதங்கள் : சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை, தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் திருமணம் நடத்தலாம்.
திதி : வளர்பிறை, துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதமி, திரயோதசி, தேய்பிறை துவிதியை, திருதியை, பஞ்சமி ஆகிய தினங்களில் திருமணம் செய்யலாம்.
கிழமைகள் : திங்கள், புதன், வியாழன், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் திருமணம் செய்யலாம். செவ்வாய், சனிக்கிழமைகளைத் தவிர்க்கவும்.
லக்கினங்கள் : ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, கும்பம், மீனம். இந்த லக்கினங்கள் சுபம் தரும்.
இந்த லக்கினங்களுக்கு 7, 8ஆம் இடங்களில் கிரகங்கள் இல்லாமலிருந்தால் மிகவும் நல்லது.
நட்சத்திரங்கள் : ரோகிணி, மிருகசீருஷம், மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் திருமணம் செய்யலாம்.
ஆனி மாதத்தில் பிறந்த ஆணுக்கும், ஆனி மாதத்தில் பிறந்த பெண்ணுக்கும் திருமணம் செய்யக்கூடாது.
யானைகள் சூழ, சிங்கம் நடந்து வருவது போன்ற நிலையை இந்த யோகம் குறிப்பிடுவதாக சொல்லலாம். இந்த யோகத்தில், குரு மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் மட்டுமே சம்பந்தப்படுவதன் அடிப்படையில், குரு பகவானின் வாகனமான யானை மற்றும் கடக ராசி அதிபதியான சந்திரனின் அதிதேவதை அம்பிகையின் வாகனமான சிங்கத்தையும் இந்த யோகத்துடன் ஒப்பீடு செய்து கொள்ளலாம்.
யானைக்கூட்டத்தை எதிர்கொண்டு, ஒரு சிங்கம் வெற்றி கொள்வதுபோல, கஜகேசரி யோகம் கொண்டவர் களுக்கும் அந்த திறன் இருக்கிறது. அதனால், ஜாதகத்தில் சிரமமான தசை - புத்திகள் நடந்தாலும், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டக சனி ஆகிய கால கட்டங்களில் கஜகேசரி யோகம் அமைந்தவர்களுக்கு பெரிய கெடுதல்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்பதை ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன.
சந்திரன் குருவுடன் சேர்ந்து இருப்பது, சந்திரன், குருவுக்கு 4,7,10 போன்ற கேந்திர ஸ்தானங்களில் இருப்பது, சந்திரனை குரு பார்ப்பது ஆகிய நிலைகளில் கஜ கேசரி யோகம் அமைகிறது. இந்த யோகம் நல்ல பலன்களை அளிக்க வேண்டுமானால் குரு அல்லது சந்திரன் ஆகியவை ஆட்சி, உச்சம் பெற்றோ அல்லது நீச்சம் பெறாமலோ இருக்கவேண்டும். குரு அல்லது சந்திரன் வர்க்கோத்தமம் பெற்றிருப்பதும் சிறப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குரு மற்றும் சந்திர தசை - புத்திகளில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். ஒருவரது ஜனன கால ஜாதகத்தில் குரு அல்லது சந்திரன் 6, 8, 12 ஆகிய வீடுகளில் இருப்பது, சந்திரன் அல்லது குரு நீச்சம் அடைந்திருப்பது, இதர கிரக சம்பந்தத்தால் பாதிப்பு அடைந்திருப்பது, தேய்பிறை சந்திரனாக இருப்பது அல்லது நவாம்சத்தில் குரு அல்லது சந்திரன் நீச்சம் பெற்றிருப்பது ஆகிய காரணங்களால் யோக பலன்களை எதிர்பார்க்க இயலாது என்பது ஜோதிட வல்லுனர்களின் கருத்தாகும்.
ஒருவரது ஜாதகத்தில் சூரியனும், புதனும் ஒரே ராசியில் இணைந்து அமையப்பெறுவது புத ஆதித்ய யோகம் ஆகும். இந்த யோகம் அமைந்தவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு, பல கலைகளை கற்றுத் தேறும் வாய்ப்பு, நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல் ஆகியவை உண்டாகும். அரசு வழியில் அனுகூலம், வியாபாரத்தில் அதிக ஈடுபாடும் ஏற்படும். புதன், சூரியனுக்கு பின் அஸ்தங்கம் ஆகாமல் ஏற்படும் புத ஆதித்ய யோகமே நல்ல பலனை அளிக்கிறது என்பதை ஜோதிட வல்லுனர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
சூரியனின் ஆட்சி வீடான சிம்மம், சூரியனின் உச்ச வீடான மேஷம், புதனின் ஆட்சி வீடான மிதுனம், புதனின் ஆட்சி மற்றும் உச்ச வீடான கன்னி ஆகிய நான்கு வீடுகளில் இந்த யோகம் அமைந்திருப்பது சிறப்பு என்று ஜோதிட வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒருவரது ஜாதக ரீதியாக புதனும், சூரியனும் 6, 8, 12 ஆகிய வீடுகளில் ஏதாவது ஒன்றிற்கு அதிபதியாக வருவது, பகை வீடு அல்லது நீச்ச வீட்டில் இருப்பது, அவர்களுடன், சனி, ராகு, கேது போன்ற பாவ கிரகங்கள் சேர்க்கை மற்றும் புதன் வக்ர கதியில் இருப்பது ஆகிய நிலைகளில் இந்த யோகம் நல்ல முறையில் அமைவதில்லை என்பதும் ஜோதிட வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்