search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Judge Investigates"

    • போராட்டங்களை தடுக்கும் வகையில் காலாபட்டு வருவாய் கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • தீவிபத்தில் காயமடைந்தோரை உடனடியாக சென்னைக்கு அழைத்துச் செல்ல வேண்டியதன் அவசியம் குறித்து தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டில் உள்ள மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த 4-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது.

    தீ விபத்தில்பணியில் இருந்த 14 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் 11 தொழிலாளர்கள் சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 3 தொழிலாளர்களுக்கு ஜிப்மரில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. காலாப்பட்டை சுற்றியுள்ள கிராம பகுதி மக்கள் தொழிற்சாலை மீது குற்றச்சாட்டு களை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இதனையடுத்து போராட்டங்களை தடுக்கும் வகையில் காலாபட்டு வருவாய் கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் புதுவை கவர்னர் அனுமதியுடன் அரசு நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தீ விபத்து நடந்த தொழிற்சாலையில் சட்டங்கள், விதிகள், குத்தகை, உரிம நிபந்தனைகள் மற்றும் பிற நிபந்தனைகளை மீறுவதைக் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து புதுவை மாவட்ட நீதிபதி 7 நாட்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதனையடுத்து புதுவை மாவட்ட கலெக்டரும், மாவட்ட நீதிபதியுமான வல்லவன் விசாரணையை தொடங்கி உள்ளார்.

    விபத்தில் காயமடந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 11 தொழிலாளர்களும் தீக்காயங்களுடன் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பலோவில் அனுமதிக்கப்பட்ட 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தீவிபத்தில் காயமடைந்தோரை உடனடியாக சென்னைக்கு அழைத்துச் செல்ல வேண்டியதன் அவசியம் குறித்து தற்போது கேள்விகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அரசு உயர்மட்டக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.

    ×