என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » judge selvam bench
நீங்கள் தேடியது "Judge Selvam Bench"
உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் அமர்வு தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர முடியாது என எச்.ராஜா தரப்பு இன்று தலைமை நீதிபதியிடம் முறையிட்டது. #HRaja #ContemptOfCourt #MadrasHC
சென்னை:
விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்ற பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காவல்துறை குறித்தும் நீதிமன்றம் குறித்தும் தகாத வார்த்தைகளால் பேசினார். அவரது பேச்சுக்கு கடும் விமர்சனங்களும் எதிர்ப்பும் எழுந்த நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து விசாரித்தது. எச்.ராஜா 4 வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.
தலைமை நீதிபதி அமர்வுதான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும் என்றும், எச்.ராஜாவை ஆஜராக உத்தரவிடுவதற்கு நீதிபதி சி.டி. செல்வம் தலைமையிலான அமர்வுக்கு அதிகாரம் இல்லை எனவும் எச் ராஜா தரப்பு வக்கீல் முறையிட்டார்.
அவர்களின் கோரிக்கையை கேட்டுக்கொண்ட தலைமை நீதிபதி தகில் ரமானி, உத்தரவு நகல்களை தாக்கல் செய்தால் இதுபற்றி ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி செல்வம் அமர்வு பிறப்பித்த உத்தரவு மற்றும் தங்கள் தரப்பு கருத்துக்களை எச்.ராஜாவின் வழக்கறிஞர் மனுவாக தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. #HRaja #ContemptOfCourt #MadrasHC

இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் அமர்வு தாமாக முன்வந்து விசாரிக்க அதிகாரம் இல்லை என எச்.ராஜா தரப்பில் இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமானியிடம் முறையிடப்பட்டது.
தலைமை நீதிபதி அமர்வுதான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும் என்றும், எச்.ராஜாவை ஆஜராக உத்தரவிடுவதற்கு நீதிபதி சி.டி. செல்வம் தலைமையிலான அமர்வுக்கு அதிகாரம் இல்லை எனவும் எச் ராஜா தரப்பு வக்கீல் முறையிட்டார்.
அவர்களின் கோரிக்கையை கேட்டுக்கொண்ட தலைமை நீதிபதி தகில் ரமானி, உத்தரவு நகல்களை தாக்கல் செய்தால் இதுபற்றி ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி செல்வம் அமர்வு பிறப்பித்த உத்தரவு மற்றும் தங்கள் தரப்பு கருத்துக்களை எச்.ராஜாவின் வழக்கறிஞர் மனுவாக தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. #HRaja #ContemptOfCourt #MadrasHC
×

X