search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kabbadi player"

    • கபடி போட்டியில் பங்கேற்று உயிரிழந்த விமல்ராஜின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்.
    • விமல்ராஜ் விளையாடிக் கொண்டிருந்தபோது உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பெரிய புறங்கணிமுருகன் கோவில் தெரு சேர்ந்த கபடி அணி வீரர் விமல்ராஜ் நேற்று இரவு பண்ருட்டி அருகே மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் விளையாடினார்.

    அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். கீழே விழுந்ததும் கீழகுப்பம் கிராம எதிர் அணியை சேர்ந்த வீரர் பிடிக்க முற்பட்ட போது இவரது மார்பில் அடிபட்டு சுய நினைவில்லாமல் கிடந்தார்.

    உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விமல்ராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். முத்தாண்டிக்குப்பம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கபடி போட்டியில் பங்கேற்று உயிரிழந்த விமல்ராஜின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    மேலும், விமல்ராஜ் விளையாடிக் கொண்டிருந்தபோது உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.

    ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கைப் படத்தை தொடர்ந்து கங்கனா ரணாவத் அடுத்ததாக தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடும் கபடி வீராங்கனையை பற்றிய படத்தில் நடிக்க இருக்கிறார். #Panga #KanganaRanaut
    கங்கனா ரணாவத், ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் ‘மணிகர்னிகா’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஜான்சி ராணியின் வாழ்க்கையை தவறாக சித்தரிப்பதாக இந்த படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அதையும் மீறி பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தி முடிந்துள்ளனர்.

    தற்போது தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடும் கபடி வீராங்கனையை பற்றிய படத்தில் நடிக்க இருக்கிறார். ‘பங்கா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை அஸ்வினி அய்யர் திவாரி இயக்குகிறார். இவர் தமிழில் தனுஷ் தயாரிப்பில் அமலாபால் நடித்த அம்மா கணக்கு படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.



    இந்த படத்தில் நடிப்பது பற்றி கங்கனா ரணாவத் கூறும்போது, 

    ‘‘அஸ்வினி படங்களை பார்த்து இருக்கிறேன். வாழ்க்கையின் யதார்த்தங்கள் அதில் இருக்கும். பங்கா கதையை அவர் சொன்னதும் மிகவும் பிடித்துப் போனது. இந்த படத்தில் தேசிய அளவிலான கபடி வீராங்கனையாக நடிப்பதற்காக பயிற்சிகள் எடுத்துள்ளேன். கபடி வீராங்கனை கதாபாத்திரம் எனக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது’’ என்றார். #Panga #KanganaRanaut

    ×