search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kallakurichi liquor death"

    • சிலருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம், மாதவச்சேரி, சேஷச முத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் 19- தேதி கள்ளச்சாராயம் குடித்ததால் 229 பேர் பாதிக்கப்பட்டனர். 67 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சிலருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் 161 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் மட்டும் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில், கள்ளச்சாராய விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார், சாராயம் விற்பனை செய்தது, மெத்தனால் வினியோகம் செய்தது தொடர்பாக 24 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடந்தது. கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி தலைமையிலான போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் உயிரிழந்தவர்களின் தொழில் என்ன? எத்தனை நாட்களாக சாராயம் குடித்தார்கள்? இதற்கு முன்பு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா? கள்ளச்சாராயம் குடித்ததற்கு பிறகு என்ன நடந்தது? குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கை, அவர்கள் செய்யும் வேலை, குழந்தைகள் என்ன படிக்கிறார்கள்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டார்கள். இதற்கு அவர்கள் கூறிய பதில்கள் பதிவு செய்துகொள்ளப்பட்டது. இதில் நேற்று 32 குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து மீதமுள்ளவர்களிடம் 2-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தப்பட்டது.

    ×