என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "kamaraj memorial day"
சென்னை:
காந்தி சிலைக்கும், காமராஜர் நினைவிடத்திலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.காமராஜர் நினைவிடத்தில் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் மரியாதை செலுத்தினார். அவருடன் மின்னல் ஸ்டீபன், விஜயகுமார், சுந்தரேசன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள். காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மரியாதை செலுத்தினார். மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், தி.நகர் ஸ்ரீராம், மயிலை தரணி, சிவராஜசேகர், வீரபாண்டியன், ஓட்டேரி தமிழ்செல்வன், அய்யப்பன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
த.மா.கா. சார்பில் ஜி.கே. வாசன், நிர்வாகிகள் ஞானதேசிகன், கோவை தங்கம், டி.என்.அசோகன், டி.எம்.பிரபாகர், முனவர் பாட்ஷா, ஜி.ஆர்.வெங்கடேஷ், கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன், சைதை நாகராஜ், ஆர்.எஸ்.முத்து, கக்கன், வினோபா, கே.ஆர்.டி.ரமேஷ், வக்கீல்கள் ராஜேந்திரபிரசாத், அனுசுயா, ஆகியோரும் உடன் இருந்தனர்.
பா.மா.கா. சார்பில் துணை பொது செயலாளர் ஏ.கே.மூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், வேளச்சேரி சகாதேவன், அடையார் வடிவேலு ஆகியோரும் மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தமிழன், முன்னாள் எம்.எல்.ஏ.கலைராஜன், வெற்றிவேல், சந்தான கிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், எம்.ஏ.சேவியர் முருகேசபாண்டியன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், ஜி.சந்தானம், ஆர்.சிவக்குமார், வைகுண்ட ராஜா, முத்துராமன், ஊதான்ஸ் பெத்துராஜ், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் சிலம்பு சுரேஷ், பால்பண்டி, காந்தி காமராஜ் காங்கிரஸ் தலைவர் இசக்கி முத்து, டாக்டர் மணியரசு, இந்திய நாடார் பேரவை நிர்வாகிகள் சவுந்திர பாண்டியன், மலர் மன்னன், சந்திரன் மார்த்தாண்டம், தமிழ்நாடு சத்ரிய நாடார் இயக்க நிறுவன தலைவர் ஆர்.சந்திரஜெயபாலன், ஒருங்கிணைப்பாளர் பி.எம்.மாரீஸ்வரன், வக்கில் சிவசங்கர்,வீரமுத்து, உள்ளிட்டவர்களும் காமராஜர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள். இதுபோல் காமராஜர் நினைவு இல்லத்திலும், சத்தியமூர்த்தி பவனில் காந்தி, லால்பகதூர் சாஸ்திரி பிறந்த தினம், காமராஜர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அவர்களுடைய படங்களுக்கு திருநாவுக்கரசர் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.
அகில இந்திய செயலாளர்கள் சஞ்சைதத், சுரேஷ் ரெட்டி, முன்னாள் தலைவர் தங்கபாலு, யசோதா, ஆரூன், தணிகாசலம், தாமோதரன், பொன்கிருஷ்ணமூர்த்தி, பிராங்கிளின், பிரகாஷ் மாணவர் அணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேனாம்பேட்டையில் உள்ள த.மா.கா. அலுவலகத்தில் காந்தி, காமராஜர், லால்பகதூர் சாஸ்திரி படங்களுக்கு ஜி.கே.வாசன் மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் முனவர் பாட்சா, சந்திரன், மால்மருகன் மாவட்ட தலைவர்கள் பிஜுஜாக்கோ, அண்ணாநகர் ராம்குமார், ரவிச்சந்திரன் மற்றும் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதிய நீதிக்கட்சி சார்பில் மகாத்மா காந்தி சிலைக்கு கட்சியின் செயல் தலைவர் ஏ.ரவிக்குமார் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.செயலாளர்கள் பழனி, செல்வம், பேரவைத் தலைவர் சுதர்சன், கொள்கை பரப்பு செயலாளர் மனோகரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் கிண்டியில் உள்ள பெருந்தலைவர் காமராஜரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் சங்க தலைவர் ஆர்.எஸ்.பி. ராஜ கோபால் நாடார், பொதுச் செயலாளர் சி.திருப்புகழ், பொருளாளர் சிங்கராயர், கவுரவ தலைவர் கிருஷ்ண பாண்டியன், ஜி.பி.வி. ராஜ சேகரன், பச்சையப்பன், தேவராஜசீலன், சுந்தர், பெரியசாமி, பால்துரை, சரவணபவன், நாகராஜ், கனகராஜ், செந்தில் குமார், ஹரிதாஸ், ராமசாமி, எம்.எம்.ராஜேந்திரன், ஜேம்ஸ், அய்யம்பலம், மாணிக்க வாசகம், குமார் பங்கேற்றனர்.
அசோக் நகரில் உள்ள ஐ.ஜே.கே. அலுவலகத்தில் மாநில விளம்பர பிரிவு செயலாளர் முத்தமிழ்ச் செல்வன், சென்னை மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் நிர்வாகிகள் காந்தி-காமராஜர் படத்துக்கு மரியாதை செலுத்தினார்கள்.இதில் நிர்வாகிகள் பிரபாகரன், மூர்த்தி, லதா, சத்திய வதி, லீலாவதி, விஜயா மேரி, ஜெயலட்சுமி, ரபிஷா, செல்வம் பங்கேற்றனர்.
கிண்டியில் உள்ள காந்தி - காமராஜர் நினைவிடத்தில் பசும்பொன் மக்கள் கழக தலைவர் இசக்கிமுத்து, தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். #GandhiJayanti150 #MahatmaGandhi #GandhiJayanti #Kamaraj
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் விடுத்துள்ள அறிக்கையில், “பெருந்தலைவர் காமராஜரின் 44-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாளை (செவ்வாய்) கிண்டியில் உள்ள அவரது நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடக்கிறது.
காமராஜர் மீது பற்று கொண்ட தொண்டர்கள், விசுவாசிகள், காமராஜர் காட்டிய நல்வழியில் வாழும் பொதுமக்கள், சமுதாய சொந்தங்கள் என அனைவரும் எனது தலைமையில் நடைபெறும் இந்த அமைதிப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்