search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamchatka Peninsula"

    ரஷியாவின் கிழக்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உடனடி தகவல் வெளியாகவில்லை. #Earthquake #KamchatkaPeninsula
    மாஸ்கோ:

    ரஷியா நாட்டின் எல்லைக்குட்பட்ட தொலைதூர கிழக்கு பகுதியில் சுமார் 1250 கிலோமீட்டர் நீளமுள்ள காம்சட்கா தீபகற்பம் பகுதி அமைந்துள்ளது.

    பசிபிக் பெருங்கடல் மற்றும் ஒகோட்ஸ்க் கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த தீபகற்பம் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை கொண்டதாகும். இப்பகுதியில் பூர்வகுடிகள் உள்பட சுமார் 3 லட்சம் மக்கள் வாழ்கின்றனர்.

    இந்நிலையில், இன்று அதிகாலை இங்குள்ள தலைநகரம் பெட்ரோபாவ்கோவ்ஸ்க்-காம்சட்ஸ்கை பகுதியில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் தெற்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியின் அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.3 அலகுகளாக பதிவானது.

    இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. #Earthquake #KamchatkaPeninsula 
    ×