என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » kanne kalaimane
நீங்கள் தேடியது "Kanne Kalaimane"
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - தமன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் `கண்ணே கலைமானே' படத்தின் விமர்சனம். #KanneKalaimaane #KanneKalaimaaneReview #UdhayanidhiStalin
அப்பா பூ ராமு, பாட்டி வடிவுக்கரசியின் வளர்ப்பில் வளரும் உதயநிதி ஸ்டாலின் அவர்களது பேச்சை தட்டுவதில்லை. விவசாயம் செய்வதற்கான படிப்பை முடித்து இயற்கை விவசாயம் செய்யும் முனைப்பில் இருக்கிறார்.
அதேபோல் கஷ்டப்படும் தனது ஊர் மக்களுக்கு வங்கியில் கடன் பெற்றுத் தந்து, அவர்களால் அதை அடைக்க முடியாவிட்டால் தானே முன்வந்து அதனை அடைக்கிறார். இந்த நிலையில், அந்த ஊரிருக்கு வங்கி அதிகாரியாக வரும் தமன்னா, ஒரே நபர் ஊரில் உள்ள பலருக்கும் கடன் வாங்கி கொடுத்திருப்பதை பார்த்து உதயநிதி ஸ்டாலின் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு இது கோபத்தை உண்டுபண்ண, உதயநிதி தமன்னா இடையே சிறிய மோதல் ஏற்படுகிறது. பிறகு இவர்களுக்கிடையே ஒரு புரிதல் ஏற்பட்டு அது காதலாக மாறுகிறது. பின்னர் தங்களது விருப்பத்தை வீட்டில் தெரிவிக்கின்றனர். வடிவுக்கரசிக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லாமல் போக, இருவரையும் சந்திக்கவோ, பேசவோ விடாதபடி செய்கிறார்.
கடைசியில், உதயநிதி - தமன்னாவின் காதல் என்னவானது? இருவரும் இணைந்தார்களா? இவர்களது திருமணத்திற்கு வடிவுக்கரசி சம்மதித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
விவசாயியாக வரும் உதயநிதி படம் முழுக்க கமலக்கண்ணன் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இரண்டாவது பாதியில் தனது மவுனத்தின் மூலமே தனக்கு உண்டான வலியை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். விவசாயிகள் கடன், நீட் பற்றி தைரியமாக பேசியிருக்கிறார். நிமிர் படத்திற்கு பிறகு உதயநிதியிக்கு முக்கிய படமாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அழுத்தமான கதாபாத்திரத்தில் தனது குடும்பத்தை வழிநடத்தும் தைரியமான பெண்ணாக தமன்னா சிறப்பாக நடித்திருக்கிறார். பண்பானவராக கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் தமன்னாவுக்கு பாராட்டுக்கள்.
கோபம், காமெடி என வடிவுக்கரசி வித்தியாசமான பாட்டி வேடத்தில் வந்து கவர்ந்து செல்கிறார். பூ ராமுவுக்கு வசனங்கள் அதிகமாக இல்லை என்றாலும், பார்வையாலேயே நடிப்புத்திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். சில வசனங்களே பேசினாலும் அதில் பொதிந்து இருக்கும் உண்மைகள் நிதர்சனமானவை என்பதை உணர்த்திச் செல்கிறார். மற்றபடி வசுந்தரா, சரவணன் சக்தி, அம்பானி சங்கர், தீப்பெட்டி கணேசன், ஷாஜி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கு ஏற்ப போதுமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். வடிவுக்கரசிக்கு தகவல் கொடுக்கும் கதாபாத்திரமும் கவரும்படியாக இருக்கிறது.
ஒரு சாதாரண கதையில் பாசத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறார் சீனு ராமசாமி. கண்ணுக்குள் புதைந்திருக்கும் ஈரத்தை தன்னுடைய காட்சிகள் மூலம் கண்ணீராக வரவைப்பதில் சீனு ராமசாமி கைதேர்ந்தவர் என்று சொன்னால் அது மிகையாகாது. இரண்டாவது பாதியில் சென்டிமெண்ட் காட்சிகள் மூலம் ஈர்த்துவிடுகிறார். கதாபாத்திரங்களிடம் எதார்த்தமான நடிப்பை வரவைப்பதில் சீனு ராமசாமி வெற்றி பெற்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். மூ. காசி விஸ்வநாதனின் நேர்த்தியான படத்தொகுப்பு படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.
விவசாயிகளின் வலி, நலிவடைந்து வரும் நெசவுத் தொழிலை காப்பாற்ற வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தும் மண் சார்ந்த கதையை உருவாக்கிய சீனு ராமசாமிக்கு பாராட்டுக்கள். மிகைப்படுத்தாத வசனங்கள் இயல்பானதாக படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றன.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் உணர்ச்சிப்பூர்வமாக கலங்க வைக்கின்றன. ஜலேந்தர் வாசனின் ஒளிப்பதிவில் இயற்கை காட்சிகள் கண்ணுக்கு இனிமையாக இருக்கிறது. அருமை.
மொத்தத்தில் `கண்ணே கலைமானே' அன்பான படம். #KanneKalaimaane #KanneKalaimaaneReview #UdhayanidhiStalin #Tamannaah
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் `கண்ணே கலைமானே' படத்தின் முன்னோட்டம். #KanneKalaimaane #UdhayanidhiStalin #Tamannaah
ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `கண்ணே கலைமானே'.
உதயநிதி ஸ்டாலின் நாயகனாகவும், தமன்னா நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில், பூ ராமு, வடிவுக்கரசி, ஷாஜி சென், வசுந்தரா காஷ்யப், விடிவி கணேஷ், வெற்றிக்குமாரன், அம்பானி சங்கர், தீப்பெட்டி கணேசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இசை - யுவன் ஷங்கர் ராஜா, பாடல்கள் - வைரமுத்து, ஒளிப்பதிவு - ஜலந்தர் வாசன், படத்தொகுப்பு - மூ.காசிவிஸ்வநாதன், கலை இயக்குநர் - விஜய் தென்னரசு, ஒலி வடிவமைப்பு - டி.உதய்குமார், இணை தயாரிப்பு - எம்.செண்பகமூர்த்தி, ஆர்.அர்ஜூன் துரை, தயாரிப்பு - உதயநிதி ஸ்டாலின், எழுத்து, இயக்கம் - சீனு ராமசாமி.
படம் பற்றி தமன்னா பேசும் போது,
இதில் பாரதி என்னும் வங்கி அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தின் கதையை கேட்ட உடனே உதயநிதியிடம் நீங்கள் இதில் நடிக்கிறீர்களா? என்று ஆச்சர்யமாக கேட்டேன். காரணம் படத்தில் அவருக்கு இணையாக எனக்கும், வடிவுக்கரசி அம்மாவுக்கும் முக்கியத்துவம் இருக்கும். இது ஒரு காதல் கதை. படம் பார்த்தேன். படத்தில் எந்த காட்சியிலுமே உதயநிதியும் தமன்னாவும் தெரியவில்லை. கமலக்கண்ணனும் பாரதியும்தான் தெரிந்தார்கள். சில காட்சிகளில் நான் அழுதுவிட்டேன். படத்திற்குள் சின்ன சின்ன அரசியலும் இருக்கிறது. உலகின் எந்த மொழியிலும் சப்டைட்டில் இல்லாமலேயே இந்த படத்தை புரிந்துகொள்வார்கள் என்றார்.
படம் வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. #KanneKalaimane #UdhayanidhiStalin #Tamannaah
கண்ணே கலைமானே டிரைலர்:
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘கண்ணே கலைமானே’ படத்தில் இவர் பேசும் வசனம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. #KanneKalaimane
`தர்மதுரை' படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `கண்ணே கலைமானே'. உதயநிதி ஸ்டாலின், தமன்னா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி, வசுந்தரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
உதயநிதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் தயாரித்துள்ள இந்த படத்தின் டிரைலரை இன்று விஜய்சேதுபதி வெளியிட்டார். இதில் ‘இது நம்ம பூமி, தாய் மாதிரி’ என்று உதயநிதி பேசும் வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
யுவன் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. படத்தை வருகிற பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #KanneKalaimane #UdhayanidhiStalin #Tamannaah
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் `கண்ணே கலைமானே' படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #KanneKalaimane #UdhayanidhiStalin #Tamannaah
`தர்மதுரை' படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `கண்ணே கலைமானே'.
உதயநிதி ஸ்டாலின், தமன்னா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி, ஷாஜி சென், வசுந்தரா காஷ்யப், வெற்றிக்குமாரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். உதயநிதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் தயாரித்துள்ள இந்த படத்தின் டிரைலர் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#KanneKalaimaaneTrailerfrom9th! @seenuramasamy@vairamuthu@thisisysr@tamannaahspeaks@JalandharVasan@SonyMusicSouth@RedGiant_Movies@DoneChannel1pic.twitter.com/6rtEMCsj3a
— Udhay (@Udhaystalin) January 5, 2019
யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஒரே ஒரு பாடல் மட்டும் வெளியாகியிருக்கும் நிலையில், படத்தின் இசை விரைவில் வெளியாக இருக்கிறது. படத்தை வருகிற பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #KanneKalaimane #UdhayanidhiStalin #Tamannaah #KanneKalaimaaneTrailerfrom9th
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் `கண்ணே கலைமானே' படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #Tamannaah
`தர்மதுரை' படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `கண்ணே கலைமானே'.
உதயநிதி ஸ்டாலின், தமன்னா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி, ஷாஜி சென், வசுந்தரா காஷ்யப், வெற்றிக்குமாரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். உதயநிதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தணிக்கை குழுவில் `யு' சான்றிதழ் கிடைத்துள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் படத்தின் இசை விரைவில் வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து படத்தை வருகிற அக்டோபரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
#kannekalaimane censored “U”! @seenuramasamy@tamannaahspeaks@thisisysr@JalandharVasan@mukasivishwapic.twitter.com/HQbq4KCrOf
— Udhay (@Udhaystalin) September 18, 2018
மதுரைப் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. #KanneKalaimane #UdhayanidhiStalin #Tamannaah
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X