search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka political"

    கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் புதிய வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) தலைவர் குமாரசாமி முதலமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வரா துணை முதலமைச்சராகவும் பதவி வகிக்கின்றனர். இந்த ஆட்சியைக் கவிழ்க்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

    இந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், ஆட்சியைக் காப்பாற்ற தலைவர்கள் பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டி உள்ளது.  அதிருப்தி எம்எல்ஏக்களை பாஜக  தங்கள் பக்கம் இழுத்து, ஆட்சியை கவிழ்க்க தொடர்ந்து முயற்சி செய்யலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது.

    இதையடுத்து  முதலமைச்சர் குமாரசாமியும், துணை முதலமைச்சர் பரமேஸ்வராவும் ஆட்சியைக் காப்பாற்றுவதற்கான புதிய வியூகங்களை வகுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவின் திட்டத்தை முறியடிப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

    மேலும் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அதிருப்தி எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு, பாஜக பக்கம் போக வேண்டாம் என்றும், அமைச்சரவையில் இடம் தருவதாகவும் கூறி சமாதானம் செய்துள்ளனர்.



    மேலும், நாளை மறுநாள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தையும் சித்தராமையா கூட்டி உள்ளார். இதில் அனைவரும் கலந்துகொள்ளும்படி கொறடா உத்தரவும் பிறப்பிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தின்போது எம்எல்ஏக்கள் அனைவரும் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், பாஜகவின் பகட்டு வார்த்தைகளில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படும்.

    தேவைப்பட்டால் எம்எல்ஏக்களை சொகுசு விடுதி உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கும் வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
    கர்நாடக மாநில அரசியிலில் ஏற்பட்ட குழப்பத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும் என உ.பி. முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார். #AkhileshYadav
    லக்னோ:

    கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்து கொள்ள சட்டசபையில் இன்று போதுமான பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் முதல் மந்திரி எடியூரப்பா தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து, ஏற்கனவே காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் சேர்த்து 117 உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என உரிமை கோரி இருந்த குமாரசாமிக்கு இன்று மாலை கவர்னர் அழைப்பு விடுத்தார்.

    இன்றிரவு, சுமார் 7.15 மணியளவில் ராஜ் பவனுக்கு சென்ற குமாரசாமி கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்தார். வரும் 21-ம் தேதி பிற்பகல் 12.30 மணியளவில் கர்நாடக மாநில முதல் மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், கர்நாடக மாநில அரசியிலில் ஏற்பட்ட குழப்பத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும் என உ.பி. முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அகிலேஷ் யாதவ், ‘இன்று பண அதிகாரத்தை மக்களின் தீர்ப்பு வெற்றி கண்டுள்ளது. பணத்தால் எல்லோரையும் விலைக்கு வாங்கி விடலாம் என்று நினைத்தவர்கள், அரசியலை வியாபாரமாக்க விரும்பாதவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று பாடம் கற்றுள்ளனர்.

    எனவே, இதற்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். #KarnatakaCMrace #Centralgovtshouldresign #AkhileshYadav 
    ×