search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karu Palaniyappan"

    ராஜாவுக்கு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட இயக்குநர் கரு.பழனியப்பன், மீடூ பிரச்சனை இரண்டு பணக்காரர்கள் சம்மந்தப்பட்டது என்று கூறியுள்ளார். #MeToo
    மீடூ பிரச்சினை இரண்டு பணக்காரர்கள் சம்பந்தப்பட்டது அதை அவர்கள் தீர்த்துக் கொள்வார்கள் என்று சினிமா விழாவில் கரு.பழனியப்பன் பேசினார்.

    இது பற்றிய விவரம் வருமாறு, அக்கூஸ் புரொடக்‌ஷன் சார்பில் பி.டி.சையது முகமது தயாரித்துள்ள படம் 'ராஜாவுக்கு ராஜா'. இப்படத்தை ஏ.வசந்தகுமார் இயக்கியுள்ளார்.

    இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் இயக்குநர் தியாகராஜன் வெளியிட இயக்குநர்கள் ஏ.வெங்கேஷ், கரு.பழனியப்பன் பெற்றுக் கொண்டனர்.

    விழாவில் கரு.பழனியப்பன் பேசும் போது, ‘இந்த விழாவுக்கு என்னை நடிகை சோனா தான் அழைத்தார். அவர் நான்காண்டுகளுக்குப் பின் இதற்காகப் போன் செய்தார். படத்தின் இயக்குநர் எப்படியாவது கரு.பழனியப்பனை அழைத்து வர வேண்டும் என்று கூறினார் என்றார். இப்போதெல்லாம் பிரச்சினைகளை ஆடியோ விழாவில்தான் பேசவேண்டியுள்ளது.

    இன்று மீடூ பற்றிப் பேசுகிறார்கள். இவர்கள 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? ராஜலட்சுமிக்கு நேர்ந்த அந்தக் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? மீடூ என்பது இரண்டு பணக்காரர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அதை அவர்களே பேசித் தீர்த்துக் கொள்வார்கள். மீடியாக்கள் இவ்வளவு மீடூ பற்றிப் பேசுகிறார்கள். எந்த மீடியாவாவது ஒடுக்கப்பட்டவர்களுக்கு, எளிய மக்களுக்கு இப்படி எங்கு பார்த்தாலும் நடக்கும் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? அதை சாதாரணமாக கடந்து போகும் ஒன்றாகத்தான் பார்க்கிறார்கள். 



    மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு வெள்ளிக்கிழமை தோறும் படம் வரும். அதுபோல இந்த நடிகர் மக்கள் நண்பன் விநாயக் தயாரிப்பாளர், இயக்குநர், திரையரங்கு உரிமையாளர் அனைவருக்கும் நண்பனாகி வெற்றி பெற வாழ்த்துக்கள்’ என்றார். 

    விழாவில் இயக்குநர் பேரரசு பேசும் போது, ‘சினிமாவை பொழுதுபோக்கு என்று பார்த்த காலம் போய் இன்று சினிமாக்காரர்களின் வாழ்க்கை, மக்களுக்குப் பொழுதுபோக்காகி விட்டது. மீ டூ விஷயத்தில் எது பொய்? எது உண்மை? என்பதே தெரியவில்லை. சினிமாவில் எத்தனையோ சங்கங்கள் இருக்கின்றன. அவை எத்தனையோ பிரச்சினைகளைத் தீர்த்துள்ளன. மீடூவால் பிரச்சினை தீராது. சங்கம்தான் தீர்வைத் தேடித்தரும். பிரச்சினை இருந்தால் சங்கத்தை அணுகலாம். அதை விட்டு விட்டு நமக்கு நாமே சினிமாவைக் கேவலப்படுத்தக் கூடாது. சினிமாவை சினிமாக்காரர்களே களங்கப்படுத்தக் கூடாது" என்றார்.

    விழாவில் படத்தின் தயாரிப்பாளர் சையத் முகமது, பட நாயகன் வி.ஆர் விநாயக், இயக்குநர் ஏ.வசந்தகுமார், இயக்குநர்கள் ஏ.வெங்கடேஷ், தருண் கோபி, நடிகர்கள் மகாநதி சங்கர், ரியாஸ்கான், பவர் ஸ்டார் சீனிவாசன், தியாகராஜன், நடிகைகள் சோனா, சிந்து, ஒளிப்பதிவாளர் காசி விஷ்வா இசையமைப்பாளர் ஜெயக்குமார், படத்தின் பாடலாசிரியர் காவியன், கவிஞர் சினேகன், தயாரிப்பாளர் ஸ்டார் குஞ்சுமோன், மொய்தீன்கான், அஜ்மல் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.
    திரைப்பட தொழிலாளர்களுக்கு 100 சவரன் தங்கம் வழங்கியது தமிழ் சினிமாவுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் என்று விஜய் சேதுபதி 'உலகாயுதா' நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
    திரைக்குப் பின்னால் உழைத்த, உழைத்துக்கொண்டிருக்கிற கலைஞர்களைக் கவுரவிக்கும் பொருட்டு, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் 'உலகாயுதா' என்ற அமைப்பு சார்பாக தமிழ் சினிமாவில் 100 மூத்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்க முடிவு செய்திருந்தனர். ஒரு பதக்கம் ஒரு சவரன் வீதம் 100 சவரன் தங்கத்திற்கான செலவை நடிகர் விஜய் சேதுபதி ஏற்றுக்கொண்டார்.

    இந்த தங்கப்பதக்கம் வழங்கும் நிகழ்வு உழைப்பாளர்கள் தினமான நேற்று நடந்தது. இந்நிகழ்வில், இயக்குனர் சேரன், அமீர், கரு.பழனியப்பன், விஜய் சேதுபதி மற்றும் நிறைய திரைப்பட தொழிலாளர்களும் கலந்துகொண்டனர். விழாவில், சினிமாவில் தொழிற்சங்க முன்னோடிகளான நிமாய் கோஷ், எம்.பி.சீனிவாசன் ஆகியோரின் படங்கள் திறந்து வைக்கப்பட்டது. அதன்பிறகு, விஜய் சேதுபதியை நடிகராக சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் சீனு ராமசாமிக்கு முதல் பதக்கம் வழங்கப்பட்டது.



    அதைத் தொடர்ந்து சங்கம் சார்ந்து இயங்கக்கூடிய கலைஞர்கள் மற்றும் சங்கம் சாராமல் இயங்கும் கலைஞர்கள் ஆகியோருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. மூத்த திரைப்பட ஆபரேட்டர் ராமலிங்கத்திற்கு, ஆபரேட்டராக பணியாற்றிய சேரனின் அப்பா பதக்கம் அணிவித்தார். விநியோகஸ்தர்கள், ஆபரேட்டர்கள், டிரைவர்கள், நடன இயக்குனர்கள், என சினிமாவின் அனைத்து துறைகளை சார்ந்தவர்களுக்கும் பதக்கம் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



    பின்னர் பேசிய விஜய் சேதுபதி, "எல்லோருக்கும் நான் நூறு சவரன் கொடுத்தேன் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்க்ள். ஏன் கொடுத்தேன்? தெரியுமா? இங்க இருந்துதான் நான் எடுத்தேன்... அதனாலத்தான் கொடுத்தேன். இன்றைக்கு எனக்கு கிடைக்கிற மரியாதை எல்லாம் நடிகர் விஜய் சேதுபதிக்கு கிடைக்கிற மரியாதைதான். என்னை ஒரு நடிகனாக அங்கீகரித்திருக்கிற இந்த சினிமாவுக்கு நான் செய்கிற நன்றிக்கடனாக மட்டுமே இதை பார்க்கிறேன்" என்றார்.



    கடைசியில், "எல்லோருக்கும் தங்கம் கொடுத்து அழகு பார்த்த என் அண்ணன், நண்பர் எஸ்.பி.ஜனநாதனுக்கு நான் தங்கம் கொடுக்க ஆசைப்படுகிறேன்" என்று சொல்லி அவருககும் பதக்கம் வழங்கி, நிகழ்ச்சியை நிறைவாக்கினார் விஜய் சேதுபதி. 
    ×