என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » Karunanidhi Memorial Event
நீங்கள் தேடியது "Karunanidhi Memorial Event"
தமிழக அரசியல் வரலாறு தெரியாமல் ரஜினி பேசியிருப்பதாகவும், எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது இப்படி பேசியிருப்பாரா? என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். #MinisterJeyakumar #Rajinikanth
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி மறைவையடுத்து நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அதிமுக உருவாக கருணாநிதி காரணமாக இருந்தார் என்றும், அதிமுகவின் ஆண்டு விழாவில் அண்ணா, எம்ஜிஆரின் புகைப்படத்தோடு கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும் கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்த முதலமைச்சர் வராததையும் விமர்சித்தார்.
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தபோது ரஜினியின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது:-
![](https://img.maalaimalar.com/InlineImage/201808141211389796_1_rajini8._L_styvpf.jpg)
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இருந்தபோது ரஜினி இப்படி பேசியிருப்பாரா? அப்போது பேசியிருந்தால் பாராட்டியிருக்கலாம். அவர்கள் மறைந்தபிறகு இப்போது பேசுவது கோழைத்தனமானது. மறைந்த தலைவரின் இறப்பை சாதகமாக்கிக்கொள்ள ரஜினி நினைக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார். #MinisterJeyakumar #Rajinikanth

ரஜினிக்கு தமிழக அரசியல் மற்றும் வரலாறு தெரியாது. நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினி அரசியல் பேசியது அவரது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. இன்னும் அவருக்கு அரசியல் பக்குவம் வரவில்லை.

×
X