search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Keeway India"

    • கீவே நிறுவனத்தின் K300 R மோட்டார்சைக்கிளின் அனைத்து வேரியண்ட்களுக்கும் விலை குறைப்பு அறிவிப்பு.
    • விலை குறைப்பு தவிர கீவே K300 R மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    கீவே இந்தியா நிறுவனம் தனது K300 R ஃபுல்லி-ஃபேர்டு மோட்டார்சைக்கிளுக்கு அசத்தல் விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது. விலை குறைப்பு கீவே K300 R அனைத்து நிற வேரியண்டிற்கும் பொருந்தும். முன்னதாக வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த கீவே K300 R அனைத்து வேரியண்ட்களின் விலையும் தற்போது ரூ. 2 லட்சத்து 65 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று மாறி இருக்கிறது.

    இது கீவே K300 R முந்தைய விலையை விட ரூ. 55 ஆயிரம் வரை குறைவு ஆகும். விலை குறைப்பு காரணமாக இந்த மோட்டார்சைக்கிள் விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகம் செய்ததில் இருந்தே கீவே K300 R மாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் அதிக யூனிட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

     

    இதன் காரணமாக ஒவ்வொரு யூனிட்டை இறக்குமதி செய்வதற்கான கட்டணம் குறைந்து இருக்கிறது. இதை வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில், கீவே நிறுவனம் விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது. இதே போன்ற விலை குறைப்பு கீவே K300 N மாடலுக்கும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கீவே K300 R மாடலில் 292.4சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 27.1 ஹெச்பி பவர், 25 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. செயல்திறனை பொருத்தவரை இது போட்டி நிறுவன மாடல்களை விட கணிசமான அளவு குறைவு ஆகும். 

    • கீவே இந்தியா நிறுவனம் SR125 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புதிய 125சிசி என்ஜின் கொண்ட மோட்டார்சைக்கிள் மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.

    கீவே இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ரெட்ரோ கிளாசிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்திய சந்தையில் கீவே நிறுவனத்தின் ஏழாவது மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த மாடல்- கிளாசி வைட், கிளாசி பிளாக் மற்றும் கிளாசி ரெட் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய கீவே SR125 விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் 125சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 9.5 ஹெச்பி பவர், 8.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இந்த மோட்டார்சைக்கிள் எடை 120 கிலோ ஆகும். ஹார்டுவேரை பொருத்தவரை முன்புறம் 300எம்எம் டிஸ்க், பின்புறம் 210எம்எம் ரோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பிற்கு கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம், சைடு ஸ்டாண்டு என்ஜின் கட்-ஆப் உள்ளது. இத்துடன் வயர் ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய கீவே SR125 மோட்டார்சைக்கிள் அதிகாரப்பூர்வ பெனலி மற்றும் கீவே விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் வினியோகம் இந்த மாத இறுதியில் துவங்க இருக்கிறது. மேலும் இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 1000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ×