என் மலர்
முகப்பு » kerala airport
நீங்கள் தேடியது "kerala airport"
துபாயில் இருந்து கேரளாவிற்கு விமானத்தில் குண்டு வடிவில் தங்கத்தை நூதன முறையில் கடத்தி வந்த வாலிபர்களை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.
கொழிஞ்சாம்பாறை:
துபாயில் இருந்து கேரளாவிற்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் இன்று காலை சுங்க துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து கோழிக்கோடுக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சோதனை செய்தனர்.
கடைசியாக 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்படவே சுங்கத்துறை அதிகாரிகள் தாங்கள் வைத்திருந்த கருவி மூலம் அவர்களை சோதனை செய்தனர். அவர்களிடம் தங்கம் இருப்பதை கருவி காட்டி கொடுத்தது.
ஆனால் அவர்கள் உடல் முழுவதும் சோதனை செய்தும் தங்கம் எங்கு உள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனை தொடர்ந்து 2 பேரையும் கழிவறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது அவர்கள் இருவரும் தங்கள் மலத்துவாரத்தில் சிறிய குண்டு வடிவில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
ஒவ்வொருவரும் தலா 6 குண்டுகள் வடிவில் தங்கத்தை கடத்தி வந்தனர். விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம் பத்கல் பகுதியை சேர்ந்த முகம்மது இம்ரான் (30), மங்களூரை சேர்ந்த நிஷார் அகமது என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ஒரு கிலோ 400 கிராம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 45 லட்சம் ஆகும். கைதான இருவரிடமும் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இன்று 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை வெளியே கடத்திச் செல்ல முயன்ற ஒப்பந்த பணியாளர் பிடிபட்டார். #10kggold #goldseized worth #Rs3croregold #Keralaairport
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஏ.சி. மெக்கானிக்காக பணியாற்றி வந்தவர் அனீஷ். விமான நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதி வழியாக ஒரு பெரிய கைப்பையை இன்று அவர் வெளியே கொண்டு செல்ல முயன்றபோது சந்தேகப்பட்ட பாதுகாப்பு படையினர் அவரை தடுத்து நிறுத்த முயன்றனர்.
அவர்களை கண்டதும் கைப்பையை கீழே போட்டுவிட்டு அனீஷ் ஓட்டம் பிடித்தார். அவரை விரட்டிச் சென்ற பாதுகாப்பு படையினர் மடக்கிப் பிடித்தனர். தகவலறிந்து விரைந்துவந்த சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்துக்குரிய கைப்பையை சோதனையிட்டபோது அதனுள்ளே சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான 10 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து அனீஷை கைது செய்த அதிகாரிகள் பிடிபட்ட கடத்தல் தங்கம் யார் மூலமாக கொண்டு வரப்பட்டது? அதை பெற்றுக்கொள்ள காத்திருக்கும் நபர்கள் யார்? என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். #10kggold #goldseized worth #Rs3croregold #Keralaairport
×
X