என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » kerala catholic nun
நீங்கள் தேடியது "Kerala Catholic nun"
கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் கைதான பிஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு கேரள ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. #FrancoMulakkal #KeralaHC
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அருட் கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் தன்னை பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிஷப்பாக பணியாற்றிய பிராங்கோ முல்லக்கல் கற்பழித்துவிட்டதாக பரபரப்பு புகார் கூறினார்.
இந்த புகாரை பிராங்கோ முல்லக்கல் மறுத்தார். அதே சமயம் அவரை கேரளாவுக்கு வரவழைத்து தனிப்படை போலீசார் விசாணை நடத்தினார்கள். பல நாட்கள் தொடர்ந்த விசாரணையின் முடிவில் அவரை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிராங்கோ முல்லக்கல் தற்போது கோட்டயத்தில் உள்ள பாலா ஜெயிலில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் கேரள ஐகோர்ட்டில் தனக்கு ஜாமீன் வழங்க கேட்டு பிராங்கோ முல்லக்கல் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, பிராங்கோ முல்லக்கல்லுக்கு கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
பிராங்கோ முல்லக்கல் கேரளாவுக்குள் நுழையக் கூடாது, அவர் தனது பாஸ்போர்ட்டை ஐகோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும், சாட்சியங்களை கலைக்கக் கூடாது, 2 வாரத்திற்கு ஒரு முறை விசாரணை அதிகாரிகள் முன்பு அவர் ஆஜராக வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டு நிபந்தனை விதித்துள்ளது. #FrancoMulakkal #KeralaHC

கேரளாவில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல்லுக்கு நீதிமன்ற காவலை அக்டோபர் 6-ம் தேதி வரை நீட்டித்து கோட்டயம் பாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. #BishopFrancoMulakkal
கோட்டயம்:
கேரள மாநில கன்னியாஸ்திரி கற்பழிப்பு தொடர்பாக பேராயர் பிராங்கோ முல்லக்கல் (வயது 54) கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பாலாவில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று முன்தினம் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். அதேநேரம் பேராயருக்கு ஜாமீன் கேட்டு அவரது வக்கீல்களும் முறையிட்டனர். இதில் பேராயரை ஜாமீனில் விட மறுத்த நீதிபதி, அவரை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
இந்தநிலையில், பேராயரின் 2 நாள் போலீஸ் காவல் இன்று மதியத்துடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிராங்கோவின் நீதிமன்ற காவலை அக்டோபர் 6-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. இதையடுத்து பாலா நகரில் உள்ள சிறைச்சலையில் அவர் அடைக்கப்பட உள்ளார்.
இதற்கிடையே கோட்டயம் நீதிமன்றத்தில் பிராங்கோவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. #BishopFrancoMulakkal

×

X