search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kerala mathi fish saaru"

    கேரளாவில் மத்தி மீன் சமையல் மிகவும் பிரபலம். இன்று மத்தி மீனை வைத்து சூப்பரான மத்தி மீன் சாறு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - 4,
    தக்காளி - 4,
    பச்சைமிளகாய் - 6,
    தனியாத்தூள் - 2 டீஸ்பூன்,
    மத்தி மீன் - 1/2 கிலோ,
    தேங்காய்ப்பால் - 100 மி.லி.,
    உப்பு, மிளகுத்தூள், பெருங்காயம் - சிறிதளவு,
    கொத்தமல்லித்தழை - சிறிது.

    தாளிக்க...

    கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் - தலா 1/2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 50 மி.லி.



    செய்முறை :

    கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மத்தி மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    அடுப்பில் மண்சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் தனியாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி, தேங்காய்ப்பால் ஊற்றி கொதிக்கவிடவும்.  

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் மத்தி மீன், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    பின்பு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து மீன் குழம்பில் கொட்டி அதனுடன் உப்பு, மிளகுத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கும் பொழுது கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    சூப்பரான கேரளா மத்தி மீன் சாறு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×