என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » kerala tribal woman
நீங்கள் தேடியது "Kerala tribal woman"
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின பெண் ஸ்ரீதன்யாவுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். #UPSCExam #KeralaTribalWomen #Sreedhanya
திருவனந்தபுரம்:
2018-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளை மத்திய தேர்வாணையம் நேற்றுமுன்தினம் வெளியிட்டது. இந்த தேர்வில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா(வயது 22) 410-வது இடம் பிடித்து வெற்றி பெற்று உள்ளார். கேரள மாநிலத்தில் பழங்குடியின பெண் ஒருவர் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.
இவருக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வயநாடு தொகுதி வேட்பாளருமான ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-
“ஸ்ரீதன்யாவின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் அவருடைய கனவை இன்று நினைவாக்கி உள்ளது. ஸ்ரீதன்யாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகள். அவர் தேர்வு செய்யும் பதவியில் மிகப்பெரும் வெற்றியை பெற வாழ்த்துகிறேன்” என்று கூறி உள்ளார்.
இதேபோல் கேரள மாநில முதல் மந்திரி பினராயி விஜயனும், ஸ்ரீதன்யாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும், “சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் இருந்து சிவில் சர்வீசஸ் தேர்வில் ஸ்ரீதன்யா பெற்ற வெற்றியை மன மகிழ்ந்து பாராட்டுகிறேன். அவருடைய வெற்றி, மற்ற மாணவர்களுக்கு உந்து சக்தியாக இருக்கும்” என்றும் அவர் தனது முகநூலில் பதிவிட்டு உள்ளார். #UPSCExam #KeralaTribalWomen #Sreedhanya
2018-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளை மத்திய தேர்வாணையம் நேற்றுமுன்தினம் வெளியிட்டது. இந்த தேர்வில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா(வயது 22) 410-வது இடம் பிடித்து வெற்றி பெற்று உள்ளார். கேரள மாநிலத்தில் பழங்குடியின பெண் ஒருவர் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-
“ஸ்ரீதன்யாவின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் அவருடைய கனவை இன்று நினைவாக்கி உள்ளது. ஸ்ரீதன்யாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகள். அவர் தேர்வு செய்யும் பதவியில் மிகப்பெரும் வெற்றியை பெற வாழ்த்துகிறேன்” என்று கூறி உள்ளார்.
இதேபோல் கேரள மாநில முதல் மந்திரி பினராயி விஜயனும், ஸ்ரீதன்யாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும், “சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் இருந்து சிவில் சர்வீசஸ் தேர்வில் ஸ்ரீதன்யா பெற்ற வெற்றியை மன மகிழ்ந்து பாராட்டுகிறேன். அவருடைய வெற்றி, மற்ற மாணவர்களுக்கு உந்து சக்தியாக இருக்கும்” என்றும் அவர் தனது முகநூலில் பதிவிட்டு உள்ளார். #UPSCExam #KeralaTribalWomen #Sreedhanya
×

X