என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » kesrick williams
நீங்கள் தேடியது "Kesrick Williams"
வங்காள தேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் அந்த்ரே ரஸல், சாமுவேல்ஸ் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #WIvBAN
வெஸ்ட் இண்டீஸ் - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் உள்ளூர் நேரப்படி செயின்ட் கிட்ஸில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி வங்காள தேச அணியின் தமிம் இக்பால், சவுமியா சர்கார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரிலேயே வங்காள தேச அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இருவரும் தாங்கள் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த லித்தோன் தாஸ் 21 பந்தில் 24 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 10 பந்தில் 19 ரன்களும், முஷ்பிகுர் ரஹிம் 11 பந்தில் 15 ரன்களும், மெஹ்முதுல்லா 27 பந்தில் 35 ரன்களும் எடுக்க வங்காள தேசம் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் குவித்தது.
பின்னர் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்ய இருந்தது. அப்போது கனமழை பெய்தது. இதனால் ஆட்டம் நீண்ட நேரம் தடைபட்டது. மழைநின்ற பின் ஆட்டம் தொடங்கியது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 11 ஓவரில் 91 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 2-வது ஓவரை முஷ்டாபிஜூர் ரஹ்மான் வீசினார். இந்த ஓவரில் ரன்ஏதும் கொடுக்காமல் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
அதன்பின் வந்த அந்த்ரே ரஸில் அதிரடியாக விளையாடி 21 பந்தில் 35 ரன்கள் அடிக்க, சாமுவேல்ஸ் 13 பந்தில் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ரஸல் உடன் இணைந்து ரோவ்மேன் பொவேல் 9 பந்தில் 15 ரன்கள் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 9.1 ஓவரிலேயே 93 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி வரும் 4-ந்தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் நடக்கிறது.

×

X