என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » khashoggi murder
நீங்கள் தேடியது "Khashoggi Murder"
துருக்கி நாட்டில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கு சவுதி இளவரசருக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க பாராளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு சவுதி அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. #KhashoggiMurder #SaudiCrownPrince
ரியாத்:
துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா நாட்டு தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கு சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க பாராளுமன்றம் கடந்த வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.
'சவுதி அரேபியா நாட்டின் இறையாண்மையை அவமதிக்கும் வகையிலும், வளைகுடா பிராந்தியம் மற்றும் சர்வதேச அளவில் சவுதி அரேபியாவுக்கு இருக்கும் பங்களிப்பை குறைத்து மதிப்பிடும் வகையிலும், போதிய ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை மட்டுமே அடிப்படையாக வைத்து அமெரிக்க பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை சவுதி அரேபியா அரசு நிராகரிக்கிறது.
மேலும், எங்கள் நாட்டின் தலைவரை அவமதிக்கும் வகையிலும், உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யும் விதமாகவும் சுமத்தப்படும் எவ்விதமான - அனைத்து விதமான குற்றச்சாட்டுகளையும் எங்கள் அரசு புறக்கணிக்கிறது’ என சவுதி அரேபியா அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #KhashoggiMurder #SaudiCrownPrince
துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா நாட்டு தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கு சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க பாராளுமன்றம் கடந்த வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.
மேலும், ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து சவுதி அரேபியா போர் ஆயுதங்கள் கொள்முதல் செய்வதையும் எதிர்த்து அமெரிக்கா அந்த தீர்மானத்தில் கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலையில் சவுதி இளவரசருக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க பாராளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு சவுதி அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், எங்கள் நாட்டின் தலைவரை அவமதிக்கும் வகையிலும், உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யும் விதமாகவும் சுமத்தப்படும் எவ்விதமான - அனைத்து விதமான குற்றச்சாட்டுகளையும் எங்கள் அரசு புறக்கணிக்கிறது’ என சவுதி அரேபியா அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #KhashoggiMurder #SaudiCrownPrince
பத்திரிகையாளர் கசோக்கி படுகொலையை பதிவு செய்த ஆடியோ டேப்பை கேட்க விரும்பவில்லை என ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். #KhashoggiMurder #DonaldTrump
வாஷிங்டன்:
சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கடந்த மாதம் 2-ந் தேதி துருக்கியில் உள்ள சவுதி துணை தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் பணியாற்றி வந்ததால், இந்த விவகாரத்தை அமெரிக்கா கடுமையாக எடுத்துக்கொண்டு விசாரித்து வருகிறது.
கசோக்கி கொலை சம்பவம் அடங்கிய ஆடியோ டேப்பை துருக்கி அரசு கைப்பற்றியது. இதை பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அளித்து இருப்பதாக துருக்கி அதிபர் எர்டோகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
இந்த டேப்பை கேட்டீர்களா? என அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் நேற்று முன்தினம் செய்தி நிறுவனம் ஒன்று கேள்வி எழுப்பியது. அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘அந்த டேப்பை நான் கேட்க விரும்பவில்லை. ஏனெனில் அது ஒரு துயரமான டேப். அது கொடூரமானது’ என்று கூறினார்.
மேலும் இந்த கொலையில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், தன்னிடம் கூறியதாக தெரிவித்த டிரம்ப், இதையே மேலும் பலரும் குறிப்பிடுவதாகவும் கூறினார். #KhashoggiMurder #DonaldTrump

×

X