search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kidambi Srikanth Kidambi"

    பேட்மிண்டன் உலகத் தரவரிசையில் இந்தியாவின் முன்னணி வீரர் ஸ்ரீகாந்த், வீராங்கனை பிவி சிந்து முதல் 10 இடத்திற்குள் நீடிக்கின்றனர். #Srikanth #PVSindhu
    பேட்மிண்டன் உலக பெடரேசன் நேற்று வீர்ரகள் மற்றும் வீராங்கனைகளுக்கான உலகத் தரவரிசையை வெளியிட்டது. இதில் வீரர்களுக்கான தரவரிசயில் ஸ்ரீகாத் கிதாம்பி 63835 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளார். ஆசிய விளையாட்டில் சோபிக்கா விடிலும் 10 இடத்திற்குள் நீடிக்கிறார்.

    டென்மார்க்கின் விக்டர் அக்செல்சன் 83754 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், சீனாவின் ஷி யுகி, மலேசியாவின் லீ் சாங் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்துள்ளனர்.



    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தரவரிசையில் பிவி சிந்து 85414 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். தைவானின் தாய் சு யிங் 98317 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ஜப்பானின் அகானே யமகுச்சி 87743 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். சாய்னா நேவால் 58014 புள்ளிகளுடன் 10-வது இடத்தை பிடித்துள்ளார்.
    பேட்மிண்டன் உலகத் தர வரிசையில் இந்தியாவின் வீரரான ஸ்ரீகாந்த் 5-வது இடத்தையும், சாய்னா 9-வது இடத்தையும் பிடித்துள்ளனர். #BWF #KidambiSrinkanth
    உலக பேட்மிண்டன் பெடரேசன் இன்று வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் கிதாம்பி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இதற்கு முன் 7-வது இடத்தில் இருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற மலேசியா ஓபன் தொடரில் அரையிறுதி வரை முன்னேறியிருந்தார். இதனால் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். எச் எஸ் பிராணய் ஒரு இடம் பின்தங்கி 14-வது இடத்திலும், சமீர் வர்மா 20-வது இடத்திலும் உள்ளனர்.



    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து 3-வது இடத்திலேயே நீடிக்கிறார். சாய்னா நேவால் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.



    ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி இரண்டு இடங்கள் பின்தங்கி 21-வது இடத்தை பிடித்துள்ளது. மானு ஆத்ரி - பி சுமீத் ரெட்டி ஜோடி 28-வது இடத்தில் உள்ளது.

    பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொண்ணப்பா - என் சிக்கி ரெட்டி 28-வது இடத்தில் உள்ளனர். #BWFrankings #KidambiSrikanth #saina #PVSindhu
    ×