search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kirini fruit juice"

    சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்கும் கிர்ணி பழம். கோடையில் கிடைக்கும் கிர்ணிப்பழத்தை வைத்து மில்க்‌ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கிர்ணி பழம் - ஒன்று,
    பால் - அரை லிட்டர்,
    சர்க்கரை - தேவையான அளவு



    செய்முறை:

    பாலை காய்ச்சி ஆற விட்டு குளிர வைக்கவும்.

    கிர்ணி பழத்தின் தோல், விதைகளை நீக்கி துண்டுகளாக்கவும்.

    துண்டுகளாக்கிய கிர்ணி பழத்தை மிக்சியில் போட்டு அதனுடன் சர்க்கரை, குளிர்ந்த பால் சேர்த்து அரைத்தெடுக்கவும்.

    கண்ணாடி டம்பளர்களில் ஊற்றி பருகலாம்.

    குளுகுளு கிர்ணிப்பழ மில்க்‌ஷேக் ரெடி.

    பலன்கள்: சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்கும் கிர்ணி பழம். நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது. அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×