என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kodumudi Magudeswarar Temple"
- ஈசனை சனிபகவான் வழிபட்டு வரங்கள் பல பெற்றதாக வரலாறு.
- சனிபகவான் மிகவும் வரப்பிரசாதியாய் வீற்றிருக்கிறார்.
* சென்னை மேற்கு மாம்பலம் வெங்கடாசலம் தெருவில் அருளாட்சி புரிந்து வருகிறார், வட திருநள்ளாறு சனி பகவான். சனீஸ்வர பகவான் சாந்தமூர்த்தியாக காக வாகனத்தில் அமர்ந்து நீலாம்பிகையுடன் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். சனி பகவானின் தாக்கத்தில் இருந்து விடுபட இத்தலத்தில் பஞ்சமுக அனுமன், யக்ஞ விநாயகர் போன்றோரும் அருள்கின்றனர்.
* திருக்கோவிலூரில் பெண்ணையாற்றின் எதிர்க்கரையில் உள்ளது அறையணிநல்லூர். இங்கு உள்ள பாடல்பெற்ற தலமான அறையணிநாதர் கோவிலின் பிராகாரத்தில் சனி பகவான் காகத்தின் மீது ஒரு காலை வைத்திருக்கும் நிலையில் தரிசனம் அளிக்கிறார்.
* திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில் உள்ளது, திருநெல்லிக்காவல் நெல்லிவனேஸ்வரர் கோவில். இங்கு அருளும் ஈசனை சனிபகவான் வழிபட்டு வரங்கள் பல பெற்றதாக வரலாறு. சனிபகவானால் ஏற்படும் தோஷங்கள் இத்தல ஈசனை வழிபட்டால் விலகும்.
* முத்துப்பேட்டையில் இருந்து வேதாரண்யம் செல்லும் பாதையில் உள்ளது இடும்பாவனம் சிவன் கோவில். தன் பாவங்களைப்போக்கிக் கொள்ள இத்தலத்து ஈசனை சனி பகவான் வழிபட்டிருக்கிறார். ஆகவே இந்த தலமும் சனிதோஷப் பரிகாரத் தலமாக வழங்கப்படுகிறது.
* ஈரோட்டில் இருந்து 39 கி.மீ. தூரத்தில் உள்ள கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்திலும் சனிபகவான் தனி சன்னிதி கொண்டு அருள்கிறார். இந்த இரண்டு தலங்களில் சனி பரிகாரம் செய்து கொள்ளலாம். சனிபகவான் அருள் கிட்டும்.
* சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பொழிச்சலூரில் உள்ளது அகஸ்தீஸ்வரர் ஆலயம். இத்தலத்தில் சனிபகவான் மிகவும் வரப்பிரசாதியாய் வீற்றிருக்கிறார். சனீஸ்வர பகவானே இத்தல இறைவனை பூஜித்து இங்குள்ள நள்ளார் தீர்த்தத்தில் நீராடி தன் தோஷம் நீங்கப் பெற்றதாக ஐதீகம். எனவே, இத்தலம் `வட திருநள்ளாறு' என அழைக்கப்படுகிறது. திருநள்ளாறுக்குச் சென்று பரிகாரம் செய்ய இயலாதவர்கள் இத்தல சனீஸ்வரனுக்கு அந்த பரிகாரங்களை செய்கின்றனர்.
* சோழ மன்னன் ஒருவன் இப்பகுதியை அரசாண்டபோது சனிபகவானின் சஞ்சாரம் காரணமாக நாட்டில் கடும் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த மன்னன் சனிபகவானை நோக்கித் தவமிருந்து நாட்டில் பஞ்சம் வராத வரத்தைப் பெற்றான். அவன் வழிபட்ட சனிபகவான், மேகத்தைத் துளைத்து மழைபொழிய வைத்தாராம். அதை நிரூபிக்கும் வகையில் இங்குள்ள சனி பகவான் கையில் வில்லுடன் அற்புதமாக காட்சி தருகிறார்.
* சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் ஆலயத்தில் சனி பகவான் விசேஷமாக அருள்கிறார். இவரை வழிபட்டால் சனி பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் என்கிறார்கள்.
* ஈரோடு மாவட்டம் குருமந்தூரில் உள்ளது திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயம். நாகை மாவட்டம் காரைக்காலில் உள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள சனி பகவானுக்குச் செய்வது போலவே எல்லா வழிபாடுகளும் இங்கும் செய்யப்படுகின்றன. இவரும் அனைத்து சனி தோஷங்களையும் நீக்கி நல்வாழ்வு மலர அருள்கிறார்.
* விழுப்புரம் அருகே உள்ள கோவியலூர் வாலீஸ்வரர் ஆலயத்தில் சனிபகவான் தனிச் சன்னிதி கொண்டு அருள்கிறார். இவரை வணங்க சனி பாதிப்புகளில் இருந்து விலக்கு பெறலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்