search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KTM Duke ADV 390"

    கேடிஎம் நிறுவனத்தின் டியூக் ADV 390 சோதனை செய்யப்படுகிறது. பின்புற இருக்கை கொண்ட புதிய கேடிஎம் மாடலின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.




    கேடிஎம் டியூக் 390 சார்ந்த அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் சோதனை செய்யப்படுகிறது. ஆஸ்த்ரிய மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை பின்புற இருக்கையுடன் சோதனை செய்து வருகிறது. பெரும்பாலும் இதுபோன்ற மாடல்களில் இவ்வாறு வழங்கப்படுவதில்லை.

    டியூக் 390 சார்ந்த அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மோட்டார்சைக்கிளை பஜாஜ் நிறுவனம் தனது சக்கான் தயாரிப்பு ஆலையில் உருவாக்க இருக்கிறது. மேலும் இதே ஆலையில் இந்த மோட்டார்சைக்கிளின் சர்வதேச தயாரிப்பு பணிகளும் நடைபெற இருக்கிறது. 

    இத்துடன் உலக நாடுகளில் கேடிஎம் அட்வென்ச்சர் 390 மாடல் முதற்கட்டமாக இந்தியாவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டியூக் 390 மாடலின் பாகங்களை பயன்படுத்தும் புதிய அட்வென்ச்சர் மாடலில் முக்கிய அம்சங்கள் மாற்றப்பட்டு, டியூக் 390-ஐ விட வித்தியசமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.  



    கேடிஎம் டியூக் 390 மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 373 சிசி, 4-ஸ்டிரோக் லிக்விட் கூல்டு இன்ஜின் புதிய அட்வென்ச்சர் மாடலிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 44 பிஹெச்பி பவர், 37 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. புதிய மாடலின் கியரிங் மாற்றப்படும் என கூறப்படுகிறது. 

    ஒட்டுமொத்தமாக டியூக் 390 ஃபிரேம் புதிய மாடலிலும் சேர்க்கப்பட்டு, ஆஃப்ரோடிங் செய்ய ஏதுவாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடலின் பின்புறம் 19 இன்ச் சக்கரம் வழங்கப்படுகிறது. ஸ்போக் கொண்ட சக்கரங்களுடன், டியூப்லெஸ் டையர்களும் வழங்கப்படுகிறது. 

    இத்துடன் முன்பக்கம் அப்சைடு-டவுன் ஃபோர்க்கள், மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது. ட்வின் டிஸ்க் பிரேக் மற்றும் ஏபிஎஸ் வசதி வழங்கப்படுகிறது. இத்தகைய அம்சங்களுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் மாடலின் விலை ரூ.3 லட்சத்திற்கும் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புகைப்படம்: நன்றி Morebikes.co.uk
    ×