என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kumbabushekam"
- கோசல நாட்டின் தலைநகரமாக அயோத்தி இருந்தது.
- கோசல நாட்டின் மன்னராக இருந்த தசரதனின் மகன் தான் ராமர்.
உலகில் உள்ள மதங்களில் மிகவும் பழமையானது இந்து மதம். அயோத்தி, வாரணாசி, மதுரா, ஹரித்வார், காஞ்சீபுரம், உஜ்ஜைனி, துவாரகா உள்ளிட்டவை முக்கிய ஆன்மிக நகரங்கள் என இந்துக்கள் கருதுகிறார்கள். அதில் முதலில் இருப்பது அயோத்தி நகரம். ஏனென்றால் கடவுள் விஷ்ணு, ராமராக பூமியில் வந்து பிறந்த நகரம் தான் அயோத்தி என்று இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்திலும் பல்வேறு புராணங்களிலும் கூறப்பட்டுள்ளன.
பண்டைய காலத்தில் அயோத்தி நகரம், சகேதா என்ற சமஸ்கிருத வார்த்தையில் அழைக்கப்பட்டு வந்தது. இதன் பொருள் பூமியில் உள்ள வைகுண்டம் என்பதாகும். இந்து மதம் மட்டுமின்றி புத்த மற்றும் சமண மதத்தினரும் அயோத்தி நகரத்தை தங்களது புனித நகரமாக கருதுகின்றனர். ஏனென்றால் புத்தரும், மகாவீரரும் இந்த நகரங்களில் பல ஆண்டு காலம் வசித்து வந்ததாக அவர்கள் நம்புகின்றனர். குறிப்பாக சமண மதத்தின் 5 போதகர்கள் அயோத்தியில் தான் பிறந்தனர் என்ற வரலாறும் உண்டு.
பண்டைய காலத்தில் கோசல நாட்டின் தலைநகரமாக அயோத்தி இருந்தது. இந்த கோசல நாட்டின் முதல் மன்னர் இக்ஷ்வாகு. இவர் தான் சூரிய வம்சத்தை நிறுவியதாக புராணங்கள் சொல்கின்றன. கோசல தேசம் என்பது தற்போதைய உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், நேபாளம், பூடான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது ஆகும்.
இந்த கோசல நாட்டின் மன்னராக இருந்த தசரதனின் மகன் தான் ராமர். ராமர் ஒரு மன்னர் மட்டுமல்லாமல், விஷ்ணு பகவானின் ஒரு அவதாரமும் ஆவார். இந்தியாவில் ராமரை ஏராளமானோர் வழிபடுகின்றனர். அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படும் ராம ஜென்ம பூமியில் கோவில் கட்ட வேண்டும் என நீண்டகாலமாக பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
தற்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, அங்கு மிக பிரமாண்டமாக ரூ.2 ஆயிரம் கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் கட்டுமான பணிகளை ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேக்த்ரா என்ற அறக்கட்டளை செய்து வருகிறது. இங்கு கோவில் கட்டுவதற்கு கடந்த 2020-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த கோவில் தரைத்தளத்துடன் சேர்த்து 3 தளங்களாக கட்டப்பட்டு வருகிறது. தற்போது வரை தரைதளமும், முதல் தள பணிகளும் முடிந்து உள்ளன. 2-ம் தளம், கோவிலை சுற்றி கட்டப்பட உள்ள இதர சன்னதிகள் மற்றும் 161 அடி உயர கோபுரம் ஆகியவை இன்னும் கட்டப்பட உள்ளது. தற்போது தரைத்தளத்தில் உள்ள கோவில் கருவறையில், ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் வைபவம் வருகிற 22-ந் தேதி நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்