search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lal Thanhawla"

    மிசோரம் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வர் லால் தன்ஹாவ்லா தனது தொகுதியில் தோல்வி அடைந்தார். #Results2018 #MizoramElections #LalThanhawla
    ஐசால்:

    மிசோரம் மாநிலத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட்டன. பா.ஜனதா 39 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. இந்த தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

    இந்நிலையில் மிசோரம் மாநிலத்தில் பதிவான வாக்குகள் 13 மையங்களில் இன்று எண்ணப்படுகின்றன. மூன்றாவது முறை ஆட்சி அமைக்கும் நம்பிக்கையில் காத்திருந்த காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.



    ஆட்சியமைக்க 21 இடங்கள் தேவை என்ற நிலையில், 12 மணி நிலவரப்படி மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) கட்சி 28 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து தொண்டர்கள் கட்சி அலுவலகங்களில் இனிப்புகள் கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

    ஆளும் காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் வேட்பாளர்கள் பலர் தோல்வி முகத்தில் உள்ளனர். முதல்வர் லால் தன்ஹாவ்லா சாம்பாய் தெற்கு தொகுதியில் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எம்என்எப் வேட்பாளர் லால்நந்த்லுவாங்கா வெற்றி பெற்றார். #Results2018 #MizoramElections #LalThanhawla 
    மிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.பி.சசாங்கை உடனடியாக நீக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி லால் தன்ஹாவ்லா கடிதம் எழுதி உள்ளார். #Mizoram #LalThanhawla #Modi #ChiefElectroralOfficer
    அய்ஸ்வால்:

    மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. லால் தன்ஹாவ்லா முதல்-மந்திரியாக இருக்கிறார். அம்மாநில சட்டசபைக்கு வருகிற 28-ந்தேதி தேர்தல் நடக்க இருக்கிறது.

    இந்த நிலையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.பி.சசாங்கை உடனடியாக நீக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி கடிதம் எழுதி உள்ளார். அதில், சசாங்க் மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டதாகவும், சுமுகமாக தேர்தல் நடைபெற அவரை நீக்குவதுதான் ஒரே தீர்வு என்றும் அவர் கூறியுள்ளார்.

    புதிய நியமனம் செய்ய முடியாவிட்டாலும், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் சசாங்க் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சபாநாயகருமான ஹிப்பி நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததோடு, கட்சியில் இருந்தும் விலகினார்.

    அதனை தொடர்ந்து அவர் உடனடியாக பா.ஜ.க.வில் இணைந்தார். தன்னை முதல்-மந்திரி மனவேதனை அடைய செய்ததாக அவர் குற்றம் சாட்டினார். 
    ×