என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » laying foundation stone
நீங்கள் தேடியது "laying foundation stone"
பாஜக தலைமையிலான எங்களது அரசு கடந்த 4 ஆண்டுகளில் செய்து முடித்த பணிகளை வேறொரு அரசு செய்வதற்கு 25 ஆண்டுகளாவது தேவைப்படும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #PMModi #SuratAirport
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் சூரத் நகரிலுள்ள விமான நிலையத்தை ரூ. 354 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்வதற்காகவும், புதிய முனையம் கட்டுவதற்கும் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். அதன்பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
மத்தியில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அரசுகள் உள்கட்டமைப்பை மேம்படுத்த 25 ஆண்டுகள் தேவைப்பட்ட நிலையில், பாஜக அரசு 4 ஆண்டுகளில் இதனை செய்து முடித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக தொங்கு பாராளுமன்றங்கள் அமைந்ததால் கொள்கை ரீதியாக தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் முந்தைய அரசுகள் திணறி வந்தன.
மக்கள் எங்களை முழுமையான மெஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர வைத்ததால் நாங்கள் பல காரியங்களை நிறைவேற்ற முடிந்தது. மத்தியில் மற்றொரு முழு பெரும்பான்மையான அரசு அமைய வேண்டும். அத்தகைய அரசால் மட்டுமே கடுமையான மற்றும் வலுவான முடிவுகளை எடுக்க முடியும்.
முந்தைய கூட்டணி ஆட்சிகளில் முடிவு எடுக்க முடியாமல் திணறியதால் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டது. மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் அமைந்த பா.ஜ.க. அரசு எவ்வாறு சிறப்பாக செயல்பட முடியும் என்பதை மக்களுக்கு எடுத்துக் காட்டி உள்ளது
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 25 லட்சம் வீடுகளே கட்டப்பட்டன. எங்களது ஆட்சியில் 4 ஆண்டுகளிலேயே ஒரு கோடியே 30 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
பாஜக தலைமையிலான எங்களது அரசு கடந்த 4 ஆண்டுகளில் செய்து முடித்த பணிகளை வேறொரு அரசு செய்வதற்கு 25 ஆண்டுகளாவது தேவைப்படும்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ரியல் எஸ்டேட் துறையில் கருப்பு பணம் ஒழிக்கப்பட்டு, நடுத்தர மக்களும் வீடு வாங்க முடிந்தது என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, நிகழ்ச்சியை படம் பிடித்துக் கொண்டிருந்த கிஷன் ரமோலியா என்ற ஒளிப்பதிவாளர் திடீரென மயக்கம் அடைந்ததால் பிரதமர் மோடி பேசுவதை நிறுத்தினார். உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து அவர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #PMModi #SuratAirport
உத்தரப்பிரதேசத்தின் காஜிப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், லாலிபாப்பை பார்த்து ஏமாந்து விடாதீர்கள் என விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். #PMModi #Congress #Lollipop
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் காஜிப்பூர் பகுதியில் மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மகாராஜா சுஹல்டியோவின் அஞ்சல் தலை வெளியீட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை லாலிபாப்புடன் ஒப்பிட்டு பேசினார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், கர்நாடக மாநிலத்தில் லட்சக்கணக்கான விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் எனக்கூறி காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.
ஆனால், அங்கு 800 விவசாயிகளின் பயிர்க்கடனை மட்டுமே மாநில அரசு ரத்து செய்துள்ளது. இதுபோன்ற லாலிபாப் கம்பெனிகளை நீங்கள் நம்பவேண்டாம். விவசாயிகள் லாலிபாப்பை பார்த்து ஏமாந்து விடாதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசின் கடுமையான நடவடிக்கைகளால் திருடர்கள் கவலை அடைந்துள்ளனர். உங்களின் பரிபூரண ஆசி தொடர்ந்து எனக்கு கிடைத்தால் போதும், அவர்களை சரியான இடத்தில் அடைக்க நடவடிக்கை எடுப்பேன் என குறிப்பிட்டார். #PMModi #Congress #Lollipop
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X