search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "leader amit shah"

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி எங்கள் கூட்டணியில் நிச்சயம் இருக்கும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். #AmitShah #ParlimentElections#Sivasena
    மும்பை:
     
    மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக கூட்டணியில் சிவசேனா கட்சி அங்கம் வகித்து வருகிறது. மகாராஷ்டிராவிலும் அந்த கட்சி கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறது. ஆனாலும், சமீப காலமாக மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசை கூட்டணி கட்சியான சிவசேனா கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

    இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி எங்கள் கூட்டணியில் நிச்சயம் இருக்கும் எனபாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.



    மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், மகாராஷ்டிராவின் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூட்டணி கட்சியான சிவசேனா தலைமையுடன் நல்ல உறவில் இருந்து வருகிறார். மத்தியிலும் மாநிலத்திலும் சிவசேனா கூட்டணி வகித்து வருகிறது.

    எனவே, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணியில் சிவசேனா கட்சி நிச்சயம் அங்கம் வகிக்கும் என தெரிவித்துள்ளார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தனியாக போட்டியிடுவோம் என சிவசேனா கட்சி அறிவித்திருந்த நிலையில், பாஜக தலைவர் இப்படி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #AmitShah #ParlimentElections#Sivasena
    ஒரு நாள் பயணமாக தமிழகம் வந்த பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா இன்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். #BJP #AmitShah
    சென்னை:

    பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, 2019 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதன் முதற்கட்டமாக பா.ஜ.க சக்திகேந்திர பொறுப்பாளர்களை சந்தித்து வருகிறார். இதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அதன் ஒருபகுதியாக, தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமித் ஷா இன்று சென்னை வந்தடைந்தார்.

    சென்னை ஈஞ்சம்பாக்கம் வி.ஜி.பி. தங்க கடற்கரையில், பா.ஜ.க உயர்மட்ட நிர்வாகக்குழு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சுமார் 16 ஆயிரம் பேர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசினார். அப்போது அவர் கூறுகையில், வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும். 11 கோடி உறுப்பினர்களை பெற்று மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க உள்ளது. பா.ஜ.க.வுக்கு 330-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் உள்ளனர்.

    தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கிண்டலும் கேலியும் செய்தனர். எதிர்ப்பாளர்களே..! தமிழகத்தில் பா.ஜ.க எங்கே இருக்கிறது என்பதை வரும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நீங்கள் பார்ப்பீர்கள் என ஆவேசமாக பேசினார்.

    பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பின்னர் அமித் ஷா சென்னை விமான நிலையம் சென்றடைந்தார், அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

    பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவின் சென்னை வருகை, தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #BJP #AmitShah
    பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். #BJP #AmitShah
    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவின் சென்னை வருகை, தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.க.வை பொறுத்தவரையில், தமிழகத்தில் 5 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர்களை கண்காணிப்பதற்கு 25 தனி பொறுப்பாளர்கள் தனியாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஏறக்குறைய 2,750 பேர் மகா சக்தி கேந்திரா பொறுப்பாளர்களாகவும், 13,056 பேர் சக்தி கேந்திரா பொறுப்பாளர்களாகவும் ஏற்கனவே பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    இவர்கள் தான் அமித்ஷாவின் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருக்கும் சிறப்பு அழைப்பாளர்கள். இவர்களுக்கான அடையாள அட்டைகளும் கொடுக்கப்பட்டு விட்டன. எனவே வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் தவிர கூட்டத்துக்கு வெளி ஆட்கள் யாரும் வரமுடியாது.

    அமித்ஷாவின் வருகை தமிழக அரசியலில் ஒரு தாக்கத்தையும், எங்களுக்கு உற்சாக ஊக்கத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. ஏனென்றால் பா.ஜ.க. குறித்து நிறைய விமர்சனங்கள் எழுகின்றன. எந்த கட்சியாக இருந்தாலும், அது அடிப்படையிலே வளர்ந்து வரவேண்டியது இயல்பு தான். தேசிய கட்சி ஒன்று தமிழகத்தில் காலூன்றுவது என்பது அவ்வளவு சுலபம் கிடையாது.



    காலை 11 மணிக்கு சென்னை வரும் அமித்ஷா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு பகல் 12 மணிக்கு வி.ஜி.பி. தங்க கடற்கரை சாலைக்கு வருகிறார். பகல் 12 மணியில் இருந்து பிற்பகல் 2 மணி வரை எங்கள் உயர் மட்ட நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார். பிற்பகல் 2 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை உணவு நேரம்.

    அதைத்தொடர்ந்து மாலை 4 மணி வரை பா.ஜ.க. பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை சகோதர இயக்கங்களுடன் கலந்துரையாடுகிறார். மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி சக்தி மற்றும் மகா சக்தி கேந்திரா அமைப்பின் பொறுப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

    இது அமைப்பு ரீதியான ஒரு கூட்டம். இது முழுக்க முழுக்க பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க.வை தயார்படுத்தும் நிகழ்வுக்காக நடைபெறும் முக்கிய கூட்டம். இதில் அதற்கான வியூகங்கள் வகுப்பது குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார். #BJP #AmitShah
    ×