search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "life term prisoners"

    தர்மபுரியில் பஸ் எரிக்கப்பட்டு 3 மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வரும் அதிமுக நிர்வாகிகள் மூவர் 18 ஆண்டுகளாக சிறையில் உள்ளதால், அவர்களை விடுவிக்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
    சென்னை:

    தமிழக அரசு எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி நீண்டகாலம் ஆயுள் தண்டனை அனுபவித்த கைதிகளை விடுதலை செய்து வருகிறது. அந்தந்த ஜெயில்களில் இருக்கும் கைதிகள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் அடுத்த கட்டமாக தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அ.தி.மு.க.வினர் 3 பேர் விடுதலையாகிறார்கள். கடந்த 2000-ம் ஆண்டில் தர்மபுரியில் நடந்த பஸ் எரிப்பில் கோகிலவாணி, காயத்திரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் 
    பலியானார்கள்.

    இதுதொடர்பாக தர்மபுரி அ.தி.மு.க. நிர்வாகிகள் நெடுஞ்செழியன், மது, முனியப்பன் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இதை எதிர்த்து 3 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர்.

    மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 3 பேரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது. இவர்கள் மூவரும் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

    அவர்கள் 18 ஆண்டுகாலம் தண்டனை அனுபவித்து விட்டதால் அவர்களை விடுதலை செய்யலாமா என்பது குறித்து சிறைத்துறை யுடன் தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டதால் அவர்களுக்கு அரசு உத்தரவு பொருந்துமா? குடும்பத்தினர் ஏதும் ஆட்சே பனை தெரிவிக்கிறார்களா? 3 பேரின் மனநிலை என்ன? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதேபோல் 1996-ம் ஆண்டு சிதம்பரம், அண்ணா மலை பல்கலைக் கழக மாணவரும் துணைவேந்தர் பொன்னுசாமியின் மகனுமான நாவரசு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸ்களில் அடைத்து பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது கண்டுபிடிக் கப்பட்டது.

    இதுதொடர்பாக அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் அவருடன் படித்த மாணவரான ஜான்டேவிட் கைது செய்யப்பட்டார். அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். 20 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வருவதால் இவரையும் விடுதலை செய்வது குறித்து சிறைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்து வருகிறது.
    ×