search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LS Election Phase"

    பாராளுமன்றத்துக்கு ஆறாம் கட்டமாக இன்று நடைபெற்றுவரும் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி மேற்கு வங்காளத்தில் மிக அதிகமாகவும் டெல்லியில் மிக குறைவாகவும் வாக்குகள் பதிவானது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. ஏப்ரல் 11-ந்தேதி 91 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 18-ந்தேதி 96 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 23-ந்தேதி 116 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 29-ந்தேதி 71 தொகுதிகளுக்கும், மே 5-ம் தேதி 51 தொகுதிகளிலும் ஐந்து கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

    இந்நிலையில், மேற்கு வங்காளம், டெல்லி, அரியானா, உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் ஆறாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    இந்த தேர்தலில்  ஓட்டுரிமை பெற்ற 10 கோடியே 17 லட்சத்து 82 ஆயிரத்து 472 வாக்காளர்கள் 979 வேட்பாளர்களின் அரசியல் தலைவிதியை நிர்ணயிப்பதற்காக 1 லட்சத்து 13 ஆயிரத்து 167 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.



    இன்று காலையில் இருந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி மேற்கு வங்காளம் மாநிலத்தில் 63.09 சதவீதம் வாக்குகளும் டெல்லியில் 36.73 சதவீதம் வாக்குகளும்  அரியானாவில் 51.48 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.

    உத்தரப்பிரதேசத்தில் 40.96 சதவீதம் வாக்குகளும்  பீகாரில் 43.86 சதவீதம் வாக்குகளும் ஜார்கண்டில் 54.09சதவீதம் வாக்குகளும் மத்தியப்பிரதேசத்தில் 48.53 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.

    ஒட்டுமொத்தமாக 46.52 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.
    ×