search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Magnus Carlsen"

    • நடப்பு ஆண்டில் கார்ல்சன் வென்ற 10-வது பட்டம் இதுவாகும்.
    • ரேபிட் பிரிவிலும் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் டாடா ஸ்டீல் இந்தியா சர்வதேச செஸ் தொடர் நடைபெற்றது. இதில் பிளிட்ஸ் பிரிவு 18 சுற்றுகளாக நடந்தது.

    இதில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்பட பலர் பங்கேற்று விளையாடினர்.

    இந்நிலையில், 18 சுற்றுகளின் முடிவில் 9 வெற்றி, 8 டிரா, ஒரு தோல்வி என 13 புள்ளிகளுடன் நார்வேயின் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். நடப்பு ஆண்டில் கார்ல்சன் வென்ற 10-வது பட்டம் இதுவாகும்.

    ஏற்கனவே இந்தத் தொடரின் ரேபிட் பிரிவிலும் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 6 சுற்றுகள் முடிவில் கோரியச்கினா 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார்.
    • வைஷாலி ஒரு புள்ளியுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    கொல்கத்தா:

    6-வது டாட்டா ஸ்டீல் இந்தியா ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சர்வதேச செஸ் போட்டி கொல்கத்தாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஓபன் பிரிவில் 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி உள்பட 10 வீரர்களும், பெண்கள் பிரிவில் 10 வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.

    இதில் முதலில் அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய ரேபிட் வடிவிலான போட்டி நடந்து வருகிறது. 9 சுற்று கொண்ட இந்த போட்டியில் 4-வது, 5-வது, 6-வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன. முதல்நிலை வீரர் கார்ல்சென் நேற்றைய தினம் எரிகைசி, நாராயணன், வெஸ்லி சோ (பிலிப்பைன்ஸ்) ஆகிய 3 பேரையும் வரிசையாக தோற்கடித்து அமர்க்களப்படுத்தினார்.

    தமிழகத்தின் பிரக்ஞானந்தா, 103-வது நகர்த்தலில் நிஹல் சரினை போராடி வீழ்த்தினார். வின்சென்ட் கீமர் (ஜெர்மனி), விதித் குஜராத்தி ஆகியோருக்கு எதிரான ஆட்டங்களில் 'டிரா' கண்டார்.

    6 சுற்று முடிவில் கார்ல்சென் 5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அப்துசட்டோரோவ் (உஸ்பெகிஸ்தான்) 4½ புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், வெஸ்லி சோ 3½ புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    பெண்கள் பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் ரஷியாவின் அலெக்சாண்ட்ரா கோரியச்கினா தன்னை எதிர்த்து ஆடிய வந்திகா அகர்வால் (இந்தியா), தமிழக வீராங்கனை வைஷாலி, கேத்ரினா லாக்னோ (ரஷியா) ஆகியோருக்கு 'செக்' வைத்து வெற்றிக்கனியை பறித்தார். கோரியச்கினாவிடம் தோல்வியை தழுவிய வைஷாலிக்கு மற்ற இரு ஆட்டங்களிலும் ஏமாற்றமே மிஞ்சியது.

    6 சுற்றுகள் முடிவில் கோரியச்கினா 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார். நானா ஜாக்னிட்ஸ் (ஜார்ஜியா) 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். வைஷாலி ஒரு புள்ளியுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    இரு பிரிவிலும் இன்று கடைசி 3 சுற்றுகள் நடைபெறும்.

    • போட்டி வளாகத்துக்கு உள்ளே வரை வந்து சேர்ந்த கார்ல்சன் அங்கிருந்து ஆட்டக் களத்துக்கு செல்வது சாத்தியமானதாக இருக்கவில்லை.
    • ஆட்ட விதிகளின் படி போட்டி களத்துக்கு ஆட்டம் தொடங்க 15 நிமிடத்திற்குள் வர வேண்டும்

    செஸ் விளையாட்டில் மிகப்பெரிய போட்டியான செஸ் ஒலிம்பியாட் 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் கடந்த 2022-ம் ஆண்டு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த செப்டம்பர் 10 தொடங்கி வரும் 23-ந்தேதி வரை நடக்கிறது. ஓபன் பிரிவில் 197 அணிகளும் 975 வீரர்களும், பெண்கள் பிரிவில் 183 அணிகளும் 909 வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில் நார்வே நாட்டை சேர்ந்த உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் நேற்றைய தினம் [வெள்ளிக்கிழமை] கொலம்பிய நாடு வீரரை எதிர் கொள்ள இருந்தார். இந்த வருட ஒலிம்பியாடில் கார்ல்சனின் முதல் போட்டியான இதில் கலந்து கொள்ளாமலேயே அவர் தோற்கும் நிலைக்கு சென்ற சம்பவம் பலரை புருவம் உயர்த்த வைத்துள்ளது. அதாவது, நேற்றய போட்டிக்கு கார்ல்சன் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    அதிக டிராபிக் இருந்ததால் தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து போட்டி நடக்கும் இடத்துக்கு வர தாமதம் ஆகும் என்பதால் சைக்கிளில் வர கார்ல்சன் முடிவெடுத்துள்ளார். போட்டி தொடங்க சில நிமிடங்களே இருந்த நிலையில் போட்டி வளாகத்துக்கு உள்ளே வரை வந்து சேர்ந்த கார்ல்சன் அங்கிருந்து ஆட்டக் களத்துக்கு செல்வது சாத்தியமானதாக இருக்கவில்லை.

    இதனால் எல்லாம் அவ்வளவுதான் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் அங்கு படம் பிடித்துக்கொண்டிருந்த மரியா எமிலியானோவா என்ற புகைப்பட கலைஞர் கார்ல்சனுக்கு அந்த வளாகத்தில் இருந்து ஆட்டம் நடக்கும் களத்துக்கு செல்வதற்கான குறுக்கு வழியை காண்பித்து வழிகாட்டியுள்ளார்.

    இதனால் களத்துக்கு  10 நிமிடம் மட்டுமே தாமதமாக களத்துக்கு சென்று சேர்ந்த கார்ல்சன் தகுதி நீக்கம் செய்யப்படுவதில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளார். ஆட்ட விதிகளின் படி போட்டி களத்துக்கு ஆட்டம் தொடங்க 15 நிமிடத்திற்குள் வர வேண்டும். இதற்கிடையே இந்த போட்டியில் கார்ல்சன் 40 நகர்வுகளுடன் கொலம்பிய வீரரை தோற்கடித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சனை இந்தியாவின் பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
    • கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்துவது இதுவே முதல் முறை ஆகும்.

    ஸ்டாவஞ்சர்:

    நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 5 முறை உலக சாம்பியனான நார்வேயின் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரென், இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர்.

    ஒவ்வொரு சுற்றிலும் இருமுறை மோதவேண்டும். இதன் முதல் சுற்றில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, 2-வது சுற்றில் டிங் லிரெனிடம் தோல்வி கண்டார்.

    இந்நிலையில், இன்று நடந்த 3-வது சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா கார்ல்சனை எதிர்கொண்டார். வெள்ளை காய்களை கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா அபாரமாக விளையாடி கார்ல்சனை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் 5.5 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறினார்.

    • செஸ் தொடரில் நட்சத்திர வீரர்களான பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்லன், குகேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
    • போட்டியின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் வீரர் கோப்பையை வெல்வார்.

    போலந்து நாட்டில் 9வது கிராண்ட் செஸ் தொடரின் முதல் சீசன் நடந்து வருகிறது. 4 நாட்களுக்கு முன்பு துவங்கிய இந்த செஸ் தொடரில் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதேபோல் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் என உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்த 9வது சீசனில் போலந்து, ருமேனியா, குரோஷியா ஆகிய நாடுகளில் தலா ஒரு போட்டியும், அமெரிக்காவில் இரண்டு போட்டி என இந்த ஆண்டு முழுவதும் மொத்தம் 5 போட்டிகள் நடக்கும். இப்போட்டியின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் வீரர் கோப்பையை வெல்வார்.

    இந்த நிலையில் போலாந்து நாட்டில் 9வது கிராண்ட் செஸ் டூர் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த செஸ் தொடரில் நட்சத்திர வீரர்களான பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்லன், குகேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஏழாவது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து பிரக்ஞானந்தா விளையாடினார். இந்த ஆட்டம் 49வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.

    இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மீண்டும் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து பிரக்ஞானந்தா களமிறங்கினார். இதில் மேக்னஸ் கார்ல்சனை எளிதாக வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தினார். இதன் மூலமாக பிரக்ஞானந்தா புள்ளிப்பட்டியலில் 14.5 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    முதலிடத்தில் 20.5 புள்ளிகளுடன் சீனாவின் வெய் இ முதலிடத்திலும், மேக்ன்ஸ் கார்ல்சன் 18 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர். அதேபோல் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 14 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளனர். நாளை கடைசி நாள் ஆட்டம் நடக்கவுள்ளதால், ரசிகர்களிடையே யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • கத்தார் மாஸ்டர்ஸ் போட்டியின் ஏழாவது சுற்றில் கறுப்புக் காய்களுடன் கார்த்திகேயன் விளையாடினார்.
    • செஸ்ஸில் முன்னாள் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த மூன்றாவது இந்தியர் ஆனார்.

    கிராண்ட் மாஸ்டர் கார்த்திகேயன் முரளி புதன்கிழமை கிளாசிக்கல் செஸ்ஸில் முன்னாள் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த மூன்றாவது இந்தியர் ஆனார்.

    நடந்து வரும் கத்தார் மாஸ்டர்ஸ் போட்டியின் ஏழாவது சுற்றில் கறுப்புக் காய்களுடன் விளையாடிய 24 வயதான இந்திய வீரர் கார்ல்சனை வீழ்த்தினார்.

    இந்நிலையில் கார்த்திகேயனுக்கு பிரதம் நரேந்திர மோடி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வாழ்த்துக்கள் கார்த்திகேயன். கத்தார் மாஸ்டர்ஸ் 2023-ல் சிறந்து விளங்கியவர். அவரது வெற்றி இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளது. நடப்பு செஸ் சாம்பியனும், உலகின் நம்பர் 1 வீரருமான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி அபாரமான சாதனை படைத்துள்ளார்.

    அவர் அற்புதமான வேலையைத் தொடரட்டும், மேலும் அடுத்த சுற்றுக்கு அவருக்கு சிறந்ததாக இருக்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டியின் டை பிரேக்கர் சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன.
    • இன்றைய டை பிரேக்கர் சுற்றின் முடிவில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார்.

    உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டி நான்கு சுற்றுகளாக நடைபெற்றது. முதல் இரண்டு சுற்றுகள் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து இன்று டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது. டை பிரேக்கர் சுற்றின் முடிவில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார்.

    இதன் காரணமாக தமிழக வீரர் பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்தார். ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று இருந்த மேக்னஸ் கார்ல்சனுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி கடைசி தருவாயில் இரண்டாவது இடம் பிடித்த தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், உலகக் கோப்பை செஸ் தொடரில் சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி தெரிவித்து இருக்கிறார். அதில், "உலகக் கோப்பை செஸ் போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தாவை நினைத்து நாங்கள் பெருமை அடைகிறோம். அவர் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி, தன்னை எதிர்த்து விளையாடிய மேக்னஸ் கார்ல்சனுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தினார். இது சிறிய தோல்வியே கிடையாது. அடுத்து வரும் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாட வாழ்த்துகிறேன்," என்று தெரிவித்துள்ளார். 

    • உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டியின் டை பிரேக்கர் சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன.
    • இன்றைய டை பிரேக்கர் சுற்றின் முடிவில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார்.

    உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டி நான்கு சுற்றுகளாக நடைபெற்றது. முதல் இரண்டு சுற்றுகள் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து இன்று டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது. டை பிரேக்கர் சுற்றின் முடிவில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார்.

    இவரை எதிர்த்து விளையாடிய தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டியில் முதல் இரண்டு சுற்றுகளில் சமனில் முடித்தார். ஐந்து முறை சாம்பியன் பெட்டம் வென்றிருந்த மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து இறுதிப் போட்டியில் கடைசி நொடி வரை விறுவிறுப்பாக்கிய பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்தார்.

    இந்த நிலையில், உலகக் கோப்பை செஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தாவுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அதில், "செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் வீரரும், 5 முறை உலகச் சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன்- ஐ எதிர்கொண்டு இந்தியாவிற்காகக் களமிறங்கிய தமிழக வீரர் பிர்கஞானந்தா இறுதிவரை தீரத்துடன் போராடினார். வெற்றிவாய்ப்பினை நூலிழையில் தவறவிட்டாலும் பல கோடி மனங்களை ஈர்த்த பிரக்ஞானந்தா நம் பெருமிதம். அவருக்கு என் வாழ்த்துகள்," என்று குறிப்பிட்டுள்ளார். 

    • உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இளம் வீரர் பிரக்ஞானந்தா.
    • உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் கார்ல்சனை பிரக்ஞானந்தா எதிர்கொண்டார்.

    உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.

    அரையிறுதி சுற்றில் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகள் 'டிரா' ஆனது. இதைத் தொடர்ந்து டை-பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டு, இதில் வெற்று பெறுவோர் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உருவானது. அதன்படி டை-பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா, உலகின் மூன்றாம் இடத்தில் வீரரான ஃபேபியானோ கருணாவை எதிர்கொண்டு விளையாடினார்.

     

    பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து விளையாடிய கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார். இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார்.

    இறுதிப் போட்டியின் முதல் இரண்டு சுற்றுகள் சமனில் முடிந்தன. இதைத் தொடர்ந்து இன்று டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது. இதில் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். மேக்னஸ் கார்ல்சன் மற்றும் பிரக்ஞானந்தா இடையிலான டை பிரேக்கர் சுற்றின் முதல் போட்டி பரபரப்பாக நடைபெற்றது. இதில் கார்ல்சன் வெற்றி பெற்றார்.

    இதைத் தொடர்ந்து இரண்டாவது சுற்று துவங்கியது. இந்த சுற்றும் 25 நிமிடங்கள் நடைபெற்றது. இதில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் விளையைாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த சுற்றும் சமனில் முடிந்தது. அந்த வகையில் மேக்னஸ் கார்ல்சன் முதல் சுற்றில் வெற்றி பெற்று இருந்ததால், சாம்பியனாக அறிவிக்கப்பட்டார். 

    • ரேப்பிட் வகையிலான டைபிரேக்கர் ஆட்டத்தில் இருவருக்கும் தலா 25 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.
    • அதுபோக ஒவ்வொரு நகர்த்தலுக்கும் கூடுதலாக 10 வினாடிகள் கொடுக்கப்படும்.

    பாகு:

    சென்னையை சேர்ந்த இளம்கிராண்ட் மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா- உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சென் மோதும் பீடே உலக கோப்பை செஸ் இறுதிப்போட்டி அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது.

    இறுதிப்போட்டி 2 ஆட்டங்களை கொண்டது. நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டி 'டிரா' ஆனது. 35-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டம் 'டிரா'வில் முடிந்தது. பிரக்ஞானந்தா-கார்ல் சென் மோதிய 2-வது கிளாசிக்கல் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடனும், கார்ல்சென் வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினார்கள்.

    வெள்ளைநிற காய்களுடன் விளையாடுவது கார்ல்செனுக்கு சாதகமானது என்று கருதப்பட்டது. ஆனால் இந்த ஆட்டமும் 'டிரா' ஆனது. 1 மணி நேரம் நடந்த இந்தப்போட்டி 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு 'டிரா' ஆனது.

    இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்கு டைபிரேக்கர் இன்று நடத்தப்படுகிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு போட்டி நடக்கிறது. டைபிரேக்கர் 2 ஆட்டங்களை கொண்டது.

    ரேப்பிட் வகையிலான டைபிரேக்கர் ஆட்டத்தில் இருவருக்கும் தலா 25 நிமிடங்கள் ஒதுக்கப்படும். அதுபோக ஒவ்வொரு நகர்த்தலுக்கும் கூடுதலாக 10 வினாடிகள் கொடுக்கப்படும். அவ்வாறு 2 டைபிரேக்கர் ஆட்டங்களும் 'டிரா' ஆகும் பட்சத்தில் அடுத்து 2 ஆட்டங்கள் விளையாடப்படும்.

    இதில் இருவருக்கும் தலா 5 நிமிடங்கள் ஒதுக்கப்படும் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 3 வினாடிகள் கூடுதலாக கிடைக்கும்.

    தமிழக வீரர் பிரக்ஞானந்தா நம்பர் ஒன் வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான கார்ல்செனை வீழ்த்தி புதிய வரலாறு படைப்பாரா? என்று இந்தியா முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய செஸ் நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக கோப்பை செஸ் போட்டியின் இறுதி சுற்றுக்கு நுழைந்த ஒரே இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்று இருந்தார். இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் பிரக்ஞானந்தா புதிய சாதனை படைப்பார்.

    • இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா.
    • இந்த சுற்றில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களில் விளையாடினார்.

    உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், போட்டியின் 2-வது சுற்று இன்று நடைபெற்றது. இந்த சுற்றில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களில் விளையாடினார். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சுற்றும் சமனில் முடிந்தது. டைபிரேக்கர் சுற்று நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இளம் வீரரானார் பிரக்ஞானந்தா.
    • இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா.

    உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து விளையாடிய கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார். இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார்.

    இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், போட்டியின் அடுத்த சுற்று இன்று நடைபெற இருக்கிறது.

    ×