என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mahinda Rajapakse"
- ராஜபச்சே குடும்பத்தினர் மீது கோபமாக இருப்பதால் மகிந்த ராஜபக்சே அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவார் என்ற பேச்சு அடிபட்டது.
- ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவை வழி நடத்துவதற்கு நான் தேவையா என்பதை கட்சி தான் தீர்மானிக்க வேண்டும்.
இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி அந்நாட்டையே ஒரு புரட்டு புரட்டி போட்டு உள்ளது. வரலாறு காணாத வகையில் அத்யாவசிய பொருட்களின் விலை அனைத்தும் உயர்ந்து விட்டதால் பொதுமக்கள் இன்னும் தவியாய் தவித்து வருகின்றனர்.
அங்கு வாழ வழி தெரியாமல் பல குடும்பங்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் வெகுண்டு எழுந்ததால் அங்கு அரசியல் மாற்றமும் ஏற்பட்டது. அதிபராக இருந்த கோத்தபய ராஜபச்சே சொந்த நாட்டைவிட்டு ஓடி விட்டார். அவர் தற்போது தாய்லாந்து நாட்டில் அடைக்கலம் புகுந்துள்ளார்.
பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அவர் வெளிநாட்டுக்கு செல்ல அங்குள்ள கோர்ட்டு தடை விதித்து உள்ளது. இதனால் அவர் எங்கும் தப்பி செல்ல முடியாமல் இலங்கையிலேயே முடங்கி கிடக்கிறார்
பொதுமக்கள் தொடர்ந்து ராஜபச்சே குடும்பத்தினர் மீது கோபமாக இருப்பதால் மகிந்த ராஜபக்சே அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவார் என்ற பேச்சு அடிபட்டது. இதனை அவர் மறுத்து உள்ளார்.
இதுதொடர்பாக மகிந்த ராஜபக்சே அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போது இல்லை. நான் தொடர்ந்து அரசியலில் இருப்பேன். நேரம் வரும் போது மட்டுமே ஓய்வு பெறுவேன். அதுவரை நான் அரசியலில் இருப்பேன். ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவை வழி நடத்துவதற்கு நான் தேவையா என்பதை கட்சி தான் தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் நான் ஒரு வக்கீல் என்னால் கோர்ட்டில் வாதாட முடியும். தேவைப்பட்டால் நான் கோர்ட்டுக்கு செல்லவும் தயார்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி பிரதமர் விக்ரமசிங்கேவை அதிரடியாக நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். அன்று முதல் இலங்கையில் அரசியல் நெருக்கடி உருவானது. பின்னர் சிறிசேனா, சுமார் 20 மாதங்கள் முன்னதாகவே நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, உடனே தேர்தல் நடத்த உத்தரவிட்டார்.
ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அதிபரின் முடிவை ஏற்கமறுத்து, தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்திவைத்தது. விக்ரமசிங்கே, ராஜபக்சே இருவரும் தாங்கள் தான் பிரதமர் என்று அறிவித்தனர். விக்ரமசிங்கே தன்னை நீக்கியது செல்லாது, தனக்கே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்று கூறிவந்தார்.
சபாநாயகர் கரு ஜெயசூரியா, ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவரை சட்டப்படி பிரதமராக இந்த அவை ஏற்றுக்கொள்ளாது என்று அறிவித்தார். விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய முன்னணி ராஜபக்சே மீது 3 நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவந்தது. ஆனாலும் ராஜபக்சே பதவி விலக மறுத்துவிட்டார்.
நவம்பர் 14, 16 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 2 முறை தோற்கடிக்கப்பட்ட பின்னரும் ராஜபக்சே எப்படி பிரதமர் பதவியில் நீடிக்கலாம் என பல்வேறு கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய் தன. 16-ந்தேதி நடைபெற்ற வாக்கெடுப்பின்போது வரலாறு காணாத வன்முறை ஏற்பட்டது. நாற்காலிகளும், மிளகாய் பொடியும் வீசப்பட்டது. போலீசார் அவைக்கு உள்ளே அழைக்கப்பட்டதும் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சில எம்.பி.க்களும் காயம் அடைந்தனர்.
இந்த வன்முறை குறித்து விசாரணை நடத்த சபாநாயகர் நேற்று ஒரு குழுவை அமைத்தார்.
இதற்கிடையே நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் அலுவலகம் அரசு நிதியில் செலவுகளை செய்வதற்கு தடை விதித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 225 உறுப்பினர்களை கொண்ட அவையில் 123 உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். இதனால் பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேறியது. தீர்மானத்துக்கு எதிராக யாரும் வாக்களிக்கவில்லை. ராஜபக்சே ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கூட்டத்தை புறக்கணித்துவிட்டனர். இது ராஜபக்சேவுக்கு மற்றொரு மிகப்பெரிய அடியாக கருதப்படுகிறது.இதுபோன்ற தீர்மானத்தை எதிர்க்கட்சிகளால் கொண்டுவர முடியாது. அரசு சார்பில் மந்திரி ஒருவர் தான் கொண்டுவர முடியும் என்று சிறிசேனா கட்சி எம்.பி. திசநாயகே தெரிவித்தார்.
இதுபற்றி அரசியல் நோக் கர்கள் கூறும்போது, “பிரதமரின் செயலாளர் அரசு நிதியில் அலுவலக செலவுகளை செய்வதற்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேறியது, ராஜபக்சே பிரதமர் பதவியில் நீடிப்பதற்கு தனிப்பெரும்பான்மையான 113 எம்.பி.க்களின் ஆதரவு இல்லை என்பதற்கான மற்றொரு அறிகுறி. நவம்பர் 15-ந்தேதி முதல் பிரதமரின் செயலாளருக்கு அரசு நிதியில் இருந்து அலுவலக செலவுகளை செய்வதற்கு அதிகாரம் இல்லை. இந்த தீர்மானத்தை மீறினால் சட்டப்படி யார் வேண்டுமானாலும் எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்க முடியும்” என்றனர். #SriLankaParliament #MahindaRajapakse
கொழும்பு:
இலங்கை அரசியல் களத்தில் ஸ்திரமற்ற நிலை தோன்றியுள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சிக்குள் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
கட்சி தலைவரான ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து அவரது கட்சிக்குள் முரண்பாடு ஏற்படுள்ளது.
இந்தநிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசாவை தலைவராக நியமிக்க உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.
உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டி பெரும் பான்மையை நிரூபித்துக் காட்ட இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன்மூலம் சஜித்தை பிரதமராக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த யோசனையினால் தான் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் சஜித் குழுக்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக அதிபர் சிறிசேனாவுக்கு, ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் இடையே கருத்து வேறுபாடு தீவிரம் அடைந்துள்ளது.
இக்காலகட்டத்தில் மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்கும் பட்சத்தில் சுமூகமாக செயல்படுவதில் சிக்கல் உள்ளது. எனவே சஜித் பிரேமதாசா தலைமையில் பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் அரசு அமைக்க முடியும். ஐக்கிய தேசிய கட்சி எம்.பி.க்கள் நம்புகின்றனர்.
அதேநேரத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கும் சிறிய கட்சிகள் அதுவரை சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கவில்லை. கட்சி தலைவராக ரணில் விக்கிரமசிங்கே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என கருதுகின்றனர். #MaithripalaSirisena #RanilWickremesinghe #MahindaRajapakse
கொழும்பு:
தமிழகம் அருகே நான்கு புறமும் கடலால் சூழப்பட்டுள்ள இலங்கையில் இந்தியா போல் அல்லாமல் அதிபர் ஆட்சி முறை கடை பிடிக்கப்படுகிறது.
பொதுத்தேர்தலில் அதிபர் (ஜனாதிபதி) நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். பின்னர் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மெஜாரிட்டி எம்.பி.க்கள் அடிப்படையில் பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார்.
கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சேயை எதிர்த்து இலங்கை சுதந்திரா கட்சியைச் சேர்ந்த சிறிசேனா போட்டியிட்டு வெற்றி பெற்றார். சிறிசேனாவுக்கு ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு அளித்தது.
அதன்பிறகு அதே ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ரணில் விக்கிரம சிங்கே கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றதால் சிறிசேனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் ஆனார். அவர் கூட்டணி மந்திரிசபை அமைத்தார்.
சமீபகாலமாக அதிபர் சிறிசேனா-பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சே கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. மேலும் ரணில் விக்கிரமசிங்கே மீது பல்வேறு முறைகேடுகள் கூறப்பட்டன.
இதனால் ரணில் விக்கிரமசிங்கே மீது இலங்கை பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாதீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் ரணில் விக்கிரமசிங்கேயை எதிர்த்து சிறிசேனா கட்சி எம்.பி.க்களும், ராஜபக்சே கட்சி எம்.பி.க்களும் வாக்களித்தனர் என்றாலும் ரணில் விக்கிரமசிங்கே மெஜாரிட்டி எம்.பி.க்கள் ஆதரவுடன் வெற்றிபெற்றார். இந்த வெற்றி காரணமாக சிறிசேனா- ரணில் இடையேயான மோதல் மேலும் வெடித்தது. ரணில் தன்னிச்சையாக நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்தார். அதற்கு சிறிசேனா முட்டுக்கட்டை போட்டார்.
இந்தநிலையில் அதிபர் சிறிசேனா தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கேயை அதிரடியாக நீக்கினார். அவருக்கு பதில் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இது இலங்கை அரசியலில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
சிறிசேனா தன்னை நீக்கியது செல்லாது என்றும் நான் இன்னும் பிரதமர் பதவியில் நீடிக்கிறேன் என்றும் ரனில் விக்கிரம சிங்கே தெரிவித்தார். இது தொடர்பாக சிறிசேனாவுக்கு கடிதமும் எழுதினார். மேலும் பாராளுமன்றத்துக்குள் ரணில் நுழைய முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கேக்கு மெஜாரிட்டி ஆதரவு இருப்பதால் அவர் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி வெற்றிபெற்று விடக் கூடாது என்பதற்காக அதிபர் சிறிசேனா தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை வருகிற 16-ந்தேதி வரை முடக்கி உத்தரவிட்டுள்ளார்.
நவம்பர் 16-ந்தேதி வரை பாராளுமன்றம் முடக்கப்பட்டு இருப்பதால் அதன்பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியும். குதிரைபேரம் மூலம் எம்.பி.க் களை இழுப்பதற்கு வசதியாக சிறிசேனா 20 நாட்களுக்கு பாராளுமன்றத்தை முடக்கி வைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இதனால் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி கூடுவதாக இருந்த பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பெரும்பான்மை பலத்துடன் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேயை அதிபர் சிறிசேனா நீக்கியது அரசியல் சட்ட சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே பாராளுமன்றத்தை எப்போது கூட்டினாலும் ரணில் விக்கிரமசிங்கே வெற்றிபெறும் வாய்ப்பு இருப்பதாகவும் ராஜபக்சே வெற்றிபெறுவது கடினம் என்றும் தெரியவருகிறது.
இலங்கை பாராளுமன்றத்தில் மொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கை 225. இதில் மெஜாரிட்டிக்கு 113 எம்.பி.க்கள் ஆதரவு தேவை.
ரணில் விக்கிரமசிங்கே கட்சிக்கு 106 எம்.பி.க்கள் உள்ளனர். சிறிசேனா-ராஜபக்சே கூட்டணியில் 95 எம்.பி.க்களே உள்ளனர். ரணில் விக்கிரமசிங்கே வெற்றிபெற இன்னும் 7 எம்.பி.க்கள் ஆதரவே தேவைப்படுகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 16 எம்.பி.க்கள் உள்ளனர். ராஜபக்சேவை கடுமையாக எதிர்க்கும் அவர்கள் இந்தியாவுடன் நல்ல நட்புடன் இருக்கும் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதவிர மனோகணேசன், பழனி திகம்பரம், ரிஷத் பதியுதீன் ஆகிய தமிழர் மற்றும் முஸ்லிம் கட்சி எம்.பி.க்களும் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் ரணில் வெற்றிபெறும் நிலை உள்ளது. அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவாரா? அல்லது பாராளுமன்றம் கலைக்கப்படுமா? என்ற பரபரப்பு நிலவுகிறது.
ராஜபக்சேவை பிரதமராக அங்கீகரிப்பதா? அல்லது ரணில் விக்கிரமசிங்கே தொடர்வதை அனுமதிப்பதா? என்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் பாராளுமன்ற சபாநாயகர் ஜெய சூர்யாவிடம் உள்ளது. அவர் சிறிசேனா ஆதரவாளராக இருந்தார்.
ஆனால் நேற்று அவர் ரணில் விக்கிரமசிங்கே கோரிக்கையை ஏற்று பாராளுமன்றத்தை கூட்ட முடிவுசெய்து இருந்தார். இதை அறிந்த சிறிசேனா பாராளுமன்றத்தை முடக்கி உத்தரவிட்டார். இதனால் சபாநாயகர் ரணில் விக்கிரமசிங்கே ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் விஷயத்தில் அவர் என்ன முடிவு எடுப்பார் என்பதை இலங்கை அரசியல் தலைவர்கள் எதிர்நோக்கி உள்ளனர். #MaithripalaSirisena #RanilWickremesinghe #MahindaRajapakse
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்