search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mansoor Ahmad dead"

    கராச்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் முன்னாள் பிரபல ஹாக்கி கோல்கீப்பர் மன்சூர் அகமது மரணம் அடைந்தார். #hockeyplayerMansoordead #hockeyplayer

    கராச்சி:

    பாகிஸ்தான் முன்னாள் பிரபல ஹாக்கி கோல்கீப்பர் மன்சூர் அகமது. 1986 ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணியில் விளையாடிய அவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டார். இதயத்தில் உள்ள பேஸ்மேக்கரில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

    கராச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்தியாவிடம் சமீபத்தில் உதவி கேட்டு இருந்தார்.

    மன்சூர் அகமதுவுக்கு உதவ சென்னை ஹாக்கி சங்கம் முன்வந்தது. இதே போல அவருக்கு இலவசமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய தயார் என்று இந்தியாவில் உள்ள போர்டிஸ் மருத்துவமனை அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில் கராச்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மன்சூர் அகமது மரணம் அடைந்தார். அவருக்கு வயது 49.

    முன்னதாக அவருக்கு பாகிஸ்தான் அரசு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்ய முன்வந்தது. ஆனால் மன்சூர் அதை ஏற்க மறுத்து இந்தியாவில்தான் அறுவை மாற்று சிகிச்சை செய்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார். ஆனால் அவர் அதற்குள் இறந்து விட்டார்.

    1992-ம் ஆண்டு ஓலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற போதும், 1994-ல் உலக கோப்பையை வென்ற போதும் பாகிஸ்தான் அணியில் மன்சூர் அகமது இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #hockeyplayerMansoordead #hockeyplayer

    ×