search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maruti Grant Vitara"

    • மிட் மற்றும் டாப்-எண்ட் டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பா வேரியன்ட்களுக்கு தொடர்ந்து ரூ.64,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.
    • அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    மாருதி சுசுகி இந்தியாவில் விற்பனை செய்து கொண்டிருக்கும் மிக சிறந்த கார் மாடல்களில் ஒன்றாக கிராண்ட் விட்டாரா (Maruti Grand Vitara) இருக்கின்றது. மேலும், அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல்களில் ஒன்றாகவும் இந்த கார் மாடல் இருக்கிறது.

    மாருதி சுசுகியின் நெக்சா விற்பனை மையங்கள் ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தில் கிராண்ட் விட்டாரா, பிரான்க்ஸ் காம்பாக்ட் எஸ்.யு.வி. மற்றும் XL6 எம்.பி.வி. உள்ளிட்ட கார்களுக்கு அதிக தள்ளுபடியை வழங்குகின்றன.

    பலேனோ, இக்னிஸ் மற்றும் சியாஸ் மாடல்கள் அதே விலையில் தொடர்கின்றன. அதே நேரத்தில் இன்விக்டோ எம்.பி.வி.-க்கு எந்த தள்ளுபடியும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

    ஏற்கனவே, மாருதி கிராண்ட் விட்டாரா மாடல்களுக்கு ரூ.74,000 தள்ளுபடியும், 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்ட்டி வழங்கப்பட்டது. தற்போது கூடுதலாக ரூ. 66 ஆயிரம் தள்ளுபடி சேர்த்து காரின் விலை ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் வரை குறைந்துள்ளது.

    மிட் மற்றும் டாப்-எண்ட் டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பா வேரியன்ட்களுக்கு தொடர்ந்து ரூ.64,000 வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் சிக்மா மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்கள் முறையே ரூ.34,000 மற்றும் ரூ.14,000 தள்ளுபடி பெறுகின்றன.

    இந்தியாவில் கிராண்ட் விட்டாரா மாடல் ஹோண்டா எலிவேட், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், வோக்ஸ்வாகன் டைகுன் மற்றும் எம்.ஜி. ஆஸ்டர் போன்ற எஸ்.யு.வி. மாடல்களுக்கு போட்டியாக உள்ளது.


    இந்த காரின் விலை ரூ.10.99 லட்சம் முதல் ரூ.19.93 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த காரில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 103 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. அதே எஞ்சின் CNG-மேனுவல் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இது 116 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. இந்த கார் 1.5 லிட்டர் வலுவான ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

    மாருதி XL6 மீதான தள்ளுபடிகள் ரூ.15,000 வரை உயர்ந்துள்ளன. இதன் மூலம் பெட்ரோல் மாடல்களுக்கு ரூ. 40,000 ஆகவும், சிஎன்ஜி மாடல்களுக்கு ரூ. 25,000 ஆகவும் உள்ளது. இதன் விலை ரூ.11.61 லட்சம் முதல் ரூ.14.61 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த காரில் 103 ஹெச்பி திறன் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. இந்த CNG மோடில் இயங்கும் போது 88 ஹெச்.பி. திறன் வழங்குகிறது.

    அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ×