என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mediterranean Sea"

    • அகதிகள் சிலர் கிரீஸ் நாட்டின் தீவான கிரீட்டுக்கு சென்றனர்.
    • இந்த அகதிகள் படகு எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை.

    மத்திய தரைக்கடல் பகுதியில் ஒரு படகில் அகதிகள் சிலர் கிரீஸ் நாட்டின் தீவான கிரீட்டுக்கு சென்றனர். அப்போது அவர்களது படகு கடலில் கவிழ்ந்து மூழ்கியது. இதில் 18 பேர் உயிரிழந்தனர்.

    படகு மூழ்கி கிடப்பதை அந்த வழியாக சென்ற துருக்கி கப்பலில் இருந்தவர்கள் பார்த்து மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு வந்து கடலில் தத்தளித்து கொண்டிருந்த 2 பேரை மீட்டனர். பலியானவர்களின் உடல்களை மீட்டனர். இந்த அகதிகள் படகு எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை.

    • முதல் ஆறு மாதங்களில் 11,600 குழந்தைகள் மத்திய தரைக்கடல் பகுதிய கடந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
    • குடியேறிகளின் மரணப் பாதையாக மத்திய தரைக்கடல் பகுதி விளங்குகிறது.

    ஜெனிவா:

    உள்நாட்டு போர், பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் துருக்கி, சிரியா, சூடான் உள்ளிட்ட வட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைவது அதிகரித்து வருகிறது. ஆனால் இவர்கள் பெரும்பாலும் சட்ட விரோதமாக படகுகளில் புறப்பட்டு. மத்திய தரைக்கடல் பகுதி வழியாக ஐரோப்பாவுக்கு செல்கின்றனர். இவ்வாறு செல்லும்போது அபாயகரமான விபத்துகளை சந்தித்து பலர் உயிரை விட்டுள்ளனர். இதனால் குடியேறிகளின் மரணப் பாதையாக மத்திய தரைக்கடல் பகுதி விளங்குகிறது.

    அவ்வகையில் இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் மத்திய தரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவிற்குச் செல்ல முயன்ற 289 குழந்தைகள் இறந்திருப்பதாக ஐ.நா குழந்தைகள் அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.

    மத்திய தரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டின் முதல் பாதியில் இரு மடங்காக அதிகரித்துள்ளது என யுனிசெப் அமைப்பின் தலைவர் வெரீனா கனாஸ் கூறி உள்ளார்.

    இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 11,600 குழந்தைகள் மத்திய தரைக்கடல் பகுதிய கடந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2022ல் இதே காலக்கட்டத்தில் இருந்ததை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம்.

    இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், சுமார் 3,300 குழந்தைகள் துணையில்லாமல் அல்லது பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட மூன்று மடங்கு அதிகம்.

    இந்த குழந்தைகள் தாங்கள் தனியாக இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உலகத் தலைவர்கள், இந்த குழந்தைகளுக்கு பயனுள்ள தீர்வுகளைத் தேடுவதில் உறுதியாக இருக்க வேண்டும் என கனாஸ் வலியுறுத்தினார்.

    • பிரதர்ஸ் ஆஃப் இத்தாலியின் சந்திப்பில் ரிஷி சுனக், எலான் மஸ்க் ஆகியோரும் பங்கேற்றனர்
    • ஐரோப்பிய கலாச்சாரம் மதிக்கும் கோட்பாடுகளும், அளிக்கும் உரிமைகளும் உயர்வானவை என்றார் மெலோனி

    மத்திய தரைக்கடல் பகுதி வழியாக ஐரோப்பாவிற்குள் தஞ்சம் புக அகதிகள் சிறு கப்பல்கள் மூலம் தினசரி வந்து கொண்டே இருக்கிறார்கள். சமீப சில காலங்களாக இவ்வாறு நுழையும் அகதிகளால் உள்நாட்டில் சட்ட சிக்கல்கள் ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. பல ஐரோப்பிய நாடுகளின் தேர்தல்களில் வாக்குகளை ஈர்க்க இதை ஒரு விவாத பொருளாக சில தலைவர்கள் முன்னெடுத்தனர்.

    சட்ட விரோதமாக ஐரோப்பிய நாடுகளில் நுழைவதை கட்டுப்படுத்த கடுமையான முடிவுகளை எடுக்க அந்நாடுகளின் தலைவர்கள் பல கட்டமாக சந்தித்து வருகின்றனர்.

    அகதிகள் நுழைவதை கட்டுப்படுத்த இத்தாலி தலைநகரான ரோம் நகரில், Giorgio Meloni) தீவிர வலது சாரி அமைப்பான பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி (Brothers of Italy) அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஜியோர்ஜியோ மெலோனி (உரையாற்றினார். இதில் இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தனது உரையில் மெலோனி தெரிவித்ததாவது:

    நமது கலாச்சாரத்துடன் இஸ்லாமிய கலாச்சாரம் இணைவது கடினம் என நான் நினைக்கிறேன். இத்தாலியில் உள்ள பல இஸ்லாமிய கலாச்சார மையங்கள் சவுதி அரேபியாவின் நிதியுதவியால் நடப்பவை என்பதை நான் கவனிக்காமல் இல்லை. சவுதி அரேபியா நாட்டில் மத கோட்பாடுகளை கை விடுவது, தன்பாலின சேர்க்கை போன்றவைகளுக்கு மரண தண்டனை, கல்லெறி தண்டனை போன்றவற்றை வலியுறுத்தும் ஷரியா (Sharia) சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த கலாச்சாரத்தை ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் புகுத்த நினைக்கிறார்கள். ஆனால், ஐரோப்பிய நாகரிகம் பல தசாப்தங்களாக வளர்த்து வந்த மதிப்புக்குரிய அம்சங்களிலிருந்தும் மக்களுக்கு அளிக்கும் உரிமைகளிலிருந்து இந்த கலாச்சாரம் மாறுபட்டு நிற்கிறது. நான் ஷரியா சட்டத்தை இத்தாலியில் புகுத்த அனுமதிக்க மாட்டேன்.

    இவ்வாறு மெலோனி கூறினார்.

    கடந்த 2022 அக்டோபர் முதல் ஐரோப்பியாவின் முக்கிய நாடான இத்தாலியில், பிரதமராக பதவி வகிக்கும் ஜியோர்ஜியா மெலோனி (46), தீவிர வலதுசாரி ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×