search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meen mulakittathu curry"

    நாக்கை ஊறவைக்கும் சுவையான கேரளா ஸ்பெஷல் மீன் முளகிட்டது ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த மீன் குழம்பை சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள்

    மீன் - அரை கிலோ,
    வெங்காயம் - 2,
    சின்ன வெங்காயம் - 10,
    இஞ்சி - 2 மேசைக்கரண்டி,
    தக்காளி - 2,
    பூண்டு - 10 பல்,
    பச்சை மிளகாய் - 2,
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி,
    மிளகாய் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி,
    மிளகுத் தூள் - அரை மேசைக்கரண்டி,
    ஊறவைத்த குடம் புளி - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு,
    தேங்காய் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை,வெந்தயம் - தாளிக்க.



    செய்முறை

    சின்ன வெங்காயம், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் வெந்தயம், சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, பச்சை மிளகாயைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

    பின்னர் நறுக்கிய வெங்காயம், சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    பிறகு தூள் வகைகள் மற்றும் உப்புச் சேர்த்து பிரட்டவும். மசாலா நன்றாக சேர்ந்து வரும் போது அதனுடன் மீனை சேர்க்கவும்.

    அத்துடன் ஊற வைத்த குடம் புளிச் கரைசலைச் சேர்க்கவும்.

    பிறகு குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.

    பிறகு அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு வைக்கவும்.

    15 நிமிடங்கள் கழித்து திறந்து கறிவேப்பிலை தூவி இறக்கிவிடவும்.

    சுவையான மீன் முளகிட்டது தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×