search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meghalaya government"

    மேகாலயா சுரங்கத்தில் சிக்கியிருக்கும் அனைத்து தொழிலாளர்களையும் கண்டுபிடிக்கும் வரை மீட்பு பணிகளை தொடர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். #SupremeCourt #Meghalaya #CoalMine
    புதுடெல்லி:

    மேகாலயாவின் கிழக்கு ஜைண்டியா மாவட்டத்தில் இயங்கி வந்த நிலக்கரி சுரங்கம் ஒன்றில் கடந்த மாதம் 13-ந் தேதி திடீரென தண்ணீர் புகுந்ததால், 15 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை கடற்படை, தேசிய பேரிடர் மீட்புக்குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.



    இந்த சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சுரங்கத்தில் சிக்கியிருக்கும் அனைத்து தொழிலாளர்களையும் கண்டுபிடிக்கும் வரை மீட்பு பணிகளை தொடர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    ×