search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Memorial Place"

    இமயத்தை வெல்லும் உயரம் கொண்ட புரட்சித் தலைவரின் புகழ் எந்நாளும் உயர்ந்திட உழைப்போம் என்று கூறி எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர். #MGR #MGRMemorialDay
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 31-வது நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

    இதையொட்டி அ.தி.மு.க.வினர் இன்று தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    பின்னர் எம்.ஜி.ஆர். சமாதியில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழி வாசிக்க தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அதன் விவரம் வருமாறு:-

    ஏழைக்கு இரங்குவதும், எளியோர்க்கு உதவுவதும் வாழ்வின் லட்சியமாகக் கொண்ட கடவுள் உள்ளம், கருணையின் ஊற்றாம் எம்.ஜி.ஆரின் உள்ளம் என்று சரித்திரம் சொல்லும். அத்தகைய மகத்தான மாமனிதர், காட்டிய பாதையில் வாழ்ந்து, அ.தி.மு.க.வை காத்திட உறுதி ஏற்போம்.

    இமயத்தை வெல்லும் உயரம் கொண்ட புரட்சித் தலைவரின் புகழ் எந்நாளும் உயர்ந்திட உழைப்போம், உழைப்போம் என்று உறுதி ஏற்கிறோம்.

    ஏழை, எளியோரும், தாய்க்குலமும், நாளை உலகை ஆளப்போகும் தமிழ்ச் சந்ததியும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக புரட்சித்தலைவர் உருவாக்கிய அ.தி.மு.க.வை எந்நாளும் காப்போம், காப்போம்.

    புரட்சித்தலைவி அம்மாவை அடையாளம் காட்டிய எம்.ஜி.ஆர்., திராவிட இயக்க வரலாற்றின் நிகரில்லா மாதரசி புரட்சித்தலைவி அம்மாவை போல, புரட்சித் தலைவரின் இயக்கம் மக்களுக்கான மக்கள் இயக்கமாய் தொடர்ந்து தொண்டாற்றிட, துணை நிற்போம், துணை நிற்போம்.

    மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்று முதல்-அமைச்சரான சரித்திர சிறப்புக்குரிய எம்.ஜி.ஆரைப் போலவே, சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மீண்டும் சட்டமன்ற தேர்தல் என்று ஒவ்வொரு தேர்தலிலும் மகத்தான மக்கள் செல்வாக்கால் வெற்றி சிகரத்தில் கழகத்தை வீற்றிருக்க செய்தவர் நம் புரட்சித்தலைவி அம்மா.

    கழகத்தின் கண்களாய் திகழும் நம் இருபெரும் தலைவர்களின் சாதனைகளை தொடரும் வகையில், வருகிற சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத்தேர்தல் என்று அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற உழைப்போம், உழைப்போம், உழைப்போம் என்று உளமார உறுதி ஏற்கிறோம்.

    இவ்வாறு உறுதிமொழி ஏற்றனர்.

    பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி “எம்.ஜி.ஆருக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும்” என்றார். அதை ஏற்று தொண்டர்கள் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். #MGR #MGRMemorialDay

    மருதுபாண்டியர்கள் நினைவுதினத்தை முன்னிட்டு திருப்பத்தூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. ஆய்வு செய்தார்.
    திருப்பத்தூர்:

    சுதந்திர போராட்டத்தின் போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மன்னர்கள் சின்ன மருது, பெரிய மருது ஆகியோர் வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பணமாக திகழ்ந்து வந்தனர். மருதுபாண்டியர்களின் மணிமண்டபம் திருப்பத்தூரில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24-ந்தேதி மருதுபாண்டியர்கள் நினைவு தினம் குருபூஜை விழாவாக கொண்டாப்பட்டு வருகிறது.

    திருப்பத்தூரில் உள்ள மணி மண்டபத்தில் அரசு சார்பில் நாளை(புதன்கிழமை) அரசு விழா நடைபெற உள்ளது. இதேபோல் வருகிற 27-ந் தேதி காளையார்கோவிலில் உள்ள அவர்களின் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    இதையடுத்து திருப்பத்தூரில் நடைபெற உள்ள விழாவிற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் பார்வையி ட்டு ஆய்வு செய்தார். மணிமண்டபத்தில் மருதுபாண்டியர்களின் வாரிசுதாரர்களிடம் விழா குறித்து கேட்டறிந்தார். இதுதவிர விழாவின்போது போக்குவரத்து வழித் தடங்கள், பாதுகாப்புப் பணிகள், பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கான நேரம் ஒதுக்கீடு குறித்து கேட்டறிந்தார்.

    தென் மண்டல ஐ.ஜி. ஆய்வின் போது சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், திருப்பத்தூர் தாசில்தார் தங்கமணி, செயல் அலுவலர் முருகன், தி ருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாத்துரை, இன்ஸ்பெக்டர்கள் பொன்ரகு, கீதா மற்றும் துப்புரவு ஆய்வாளர் தங்கதுரை, வருவாய் ஆய்வாளர் பழனிக் குமார், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் மருதுபாண்டியர் வாரிசுதாரர் குழுத் தலைவர் ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து திரு ப்பத்தூர் பஸ் நிலையம் எதிரே மருதுபாண்டியர் தூக்கிலிடப்பட்ட இடம் மற்றும் அவரது நினைவு ஸ்தூபியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    ×